Sonntag, Dezember 19, 2004

பாலூட்டும் தாய்மார் என்ன உணவுகளை உண்ணலாம்?

"பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணக் கூடாது. அப்படி கண்டதையும் உண்டால் பிள்ளைக்கு வயிற்றுளைவு, வயிற்றில் புண், தோல்வருத்தம், தேமல்.... போன்ற பல் வேறு வருத்தங்களும் உபாதைகளும் வரும்" என்ற பலமான நம்பிக்கையான கருத்து எம் மத்தியில் வேரூன்றி இருக்கின்றது. இது மிகவும் தப்பான கருத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணலாம்.

பண்பாட்டு ரீதியாக உட்கொள்ளும் உணவு வகைகளும், நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் பெரிதும் வேறு படுகின்றன. அதாவது ஒரு பாலூட்டும் ஐரோப்பியத்தாய் உண்ணும் உணவும், ஒரு பாலூட்டும் ஆசியத் தாய் உண்ணும் உணவும் வேறு வேறாகவே இருக்கின்றன. ஆனால் பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணலாம். எந்த உணவையும் தான் உண்ணக் கூடாது என ஒதுக்கி வைக்கக் கூடாது. தனக்குப் பிடித்தமான எல்லா உணவுகளையும் உண்ண வேண்டும்.

அதே நேரம் குழந்தைக்கு வயிற்றுநோவோ, வயிற்றுளைவோ அல்லது வேறேதாவது தோல்வருத்தமோ, தடிமனோ ஏற்பட்டால் அது எந்த உணவால் ஏற்படுகிறது என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.

இந்த ஒவ்வாமை என்பது ஒரு பரம்பரை வருத்தமே. ஒரு தாய்க்கோ தந்தைக்கோ அல்லது அந்தக் குழந்தையின் பரம்பரையில் உள்ள வேறொருவருக்கோ ஒத்து வராத உணவு அனேகமான சமயங்களில் அந்தக் குழந்தைக்கும் ஒத்து வராது போகலாம். இந்த நிலையில் எந்த உணவில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ அந்த உணவை ஒரு கிழமைக்கு உண்ணாமல் விட்டு பால் கொடுத்துப் பார்க்க வேண்டும். பிள்ளைக்கு வந்த உபாதை குறைந்தால் அல்லது அப்படியான பிரச்சனைகள் தோன்றாதிருந்தால் அந்த உணவு இந்தப் பிள்ளைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது தெளிவாகும். அதற்காக எல்லாப் பாலூட்டும் தாய்மாரும் இந்த உணவுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டு மென்ற அர்த்தம் கொள்ள முடியாது.

ஓவ்வொரு தாயும் தமக்கு எந்த உணவில் விருப்பமும் ஆசையும் இருக்கிறதோ, அந்த உணவால் குழந்தையின் உடலில் எந்த விதமான வித்தியாசமும் காட்டாத பட்சத்தில் எந்த வித யோசனையுமின்றி அவைகளை உண்ணலாம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு பட்ட ஒவ்வொரு உணவுகள் ஒவ்வாமையைக் கொண்டு வரலாம். உதாரணமாக பால் தயாரிப்புகள், முட்டை, நட்ஸ்வகை, மீன், புளிப்பழங்கள் போன்றவை அனேகமான சமயங்களில் ஒவ்வாமைக் காரணிகளாக இருக்கின்றன. ஆனால் இவை அத்தனையும் கண்டிப்பாக எல்லோருக்கும் ஒவ்வாமையைத் தரும் என்று சொல்வதற்கில்லை.

ஆகவே பாலூட்டும் தாய்மாரே உங்களுக்குப் பிடித்தமானதை ஆசையானதை சுவையானதை யோசனையின்றி உண்ணுங்கள். அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பட்சத்தில் மட்டும் அந்தக் குறிப்பிட்ட உணவை இனம் கண்டு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இனி எவ்வளவு நீர் வகைகள ஒரு பாலூட்டும் தாய் அருந்த வேண்டுமெனப் பார்த்தால் -

ஒரு பாலூட்டும் தாய் ஒரு நாளைக்கு 2-3 லீற்றர் நீர் குடிக்க வேண்டும்.
ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவுகளிலும் நீர் இருப்பதால் ஒரு நாளைக்கு 2இலிருந்து 3லீற்றருக்கு மேற்பட்ட தண்ணீர்குடிப்பதுவும் கூடாது. ஏனெனில் அதிகளவான தண்ணீர் குடிக்கும் போது பால் வெளிவருவதற்கான ஹோர்மோன் சுரப்பது தடைப் பட்டு பால் வெளிவர முடியாது போய்விடுகிறது. அதாவது பால் தாயிடம் இருக்கும். ஆனால் பிள்ளை வாய் வைத்து உமிழும் போது பால் வெளியிலே வர முடியாமல் இருந்து விடும்.

ஆகவே பாலூட்டும் தாய்மாரே...
மேற் சொன்ன படி உங்கள் தாகத்திற் கேற்ப நீராகாரத்தை உட் கொள்ளுங்கள். பாலூட்டத் தொடங்கும் போது உங்களருகே ஒரு கிளாஸ் தண்ணீரோ அல்லது தேநீரோ வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பாலூட்டும் போது உங்களுக்குத் தாகமேற்படலாம்.

உங்களுக்கான நல்ல குடிவகைகள்-
1) மின்னேரால் தண்ணீர்(நற்றியமும் காஸ்சும் குறைந்த)
2) பால் சுரக்கக் கூடிய தேநீர் (சின்னச்சீரகம், பெருஞ்சீரகம், அனிஸ் கலந்த) ஆனால் இத்தேநீர் ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல் குடித்தால் பிள்ளைக்கு வயிற்றோட்டம் வரலாம்)
3) பழத் தேநீர்

Donnerstag, Dezember 16, 2004

தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி?

Dr . ஜெயசிறீ கனகராஜ்
சந்திப்பு - S.கிருஸ்ணகுமாரி


குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் பாப்பாவுக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்!

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு விதமான திருப்தியை உணர முடியும். அதைக் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்த நிலை பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்புப் புற்று நோயிலிருந்து இயற்கையான பாதுகாப்பும் கிடைக்கிறது.

பாப்பா தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது அந்தச் செயலானது தாயின் மூளையிலிருந்து ளிஜ்ஹ்tஷீநீவீஸீ என்கிற ஒரு ஸ்பெஷல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதுதான் தாயின் மார்பகத்தின் மீது செயல்பட்டு பால் சுரக்கவே செய்கிறது! மேலும் இந்த ஹார்மோன் அம்மாவின் கர்ப்பப்பையின் மீதும் செயல்பட்டு அதை இயல்பாகச் சுருங்கச் செய்யவும் உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டயாபடீஸ் நோய் வந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட வித்திட்டு விடுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த Juvenile Diabetes வருவது வெகுவாகக் குறைவதாகவும் தெரிகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?

அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.

இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.

இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.

குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?

ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?

மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ _ மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..

இதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை... தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.

இதை எப்படிச் செய்வது?

தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.

இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.

இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.

இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.

ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?

சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.

ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது... இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..

அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.

அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.

அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.

nantri-kumutham sinekithi

Montag, Oktober 25, 2004

கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன.. மாற்றங்கள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.

முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வு ஏற்படலாம். இதற்கு உங்கள் மாறும் ஹார்மோன்களே காரணம்.
உங்கள் மார்பகத்தை தாய்ப்பால் கொடுக்கத் தயார் செய்வதற்காக நேரிடும் ஹோர்மேனஸ் மாறுதல்கள் காரணமாக மார்பகம் வீங்குகிறது. மிருதுவாகிறது.

மூக்கினுளிருக்கும் லைனிங்கில் கூடுதலான அழுத்தம் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இது கர்ப்பப்பையினுள் உள்ள லைனிங் போலவே உள்ளது. கருத்தரிப்பினால் இரண்டிலும் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது.

அதிகமான சோர்வை அதிகபட்ச பெண்கள் உணருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குழந்தைக்கு வடிவம் கொடுக்க உங்கள் உடல் அதிக அளவு சக்தியை உபயோகிக்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பிற்குக் காரணம் கர்ப்பப்பை வளர்ந்து, மூத்திரப்பையை அழுத்துவதுதான்.

மார்னிங் சிக்னெஸ் உள்ள பெண்கள் மாவு சத்துள்ள உணவுப் பண்டங்களுக்காக சில சமயம் ஏங்குகின்றனர். ஏனெனில் மாவுச் சத்து குமட்டலை அடக்க உதவுகிறது.

கருத்தரித்த நிலையின் மாஸ்க் என்பது கன்னத்திலும் மூக்கிலும் ஆங்காங்கே காணப்படும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பிரசவத்திற்கு பிறகு இது மறைந்துவிடுகிறது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியே காரணம்.

இரண்டாவது மூன்று மாதம் : முதல் மூன்று மாத கால அசௌகரியங்கள் மறைந்தவுடன் ஒரு மொத்த ஆரோக்கியமான உணர்வு திரும்புகிறது.
இடுப்பு தடிப்பாகிறது. அடிவயிறு ரவுண்டாகவும் உறுதியாகவும் ஆகிறது.
நெஞ்சில் எரிப்பு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், கர்ப்பப் பை வளரும்போது, வயிற்றை அழுத்தி, உணவு செல்லும் குழாயைக் குருக்குகிறது. வயிற்றில் அமிலமும் அதிகமாக உற்பத்தியாகிறது.

கர்ப்பப் பை குடல்கள் மீது அழுத்துவதால், உணவின் போக்கு குறைகிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மார்பகம் மற்றும் அடிவயிற்றின் மீது தழும்புகள் ஏற்படுகின்றன.
அரிப்பு, சருமம் ஸ்ட்ரெச் ஆவதால் ஏற்படுகிறது.

சாதாரண பிக்மெண்டின் மாறுதல்களின் ஒரு பங்காக முலைக்காம்பைச் சுற்றியுள்ள சருமம் கருமையாகிறது. தொப்புள் வரை அல்லது அதற்கு மேலேயும் ஒரு மெல்லிய கருமை ரேகை வருகிறது.

குழந்தையின் அசைவு யாரோ லேசாகக் குத்துவதைப் போலிருக்கும்.
உணவுக்காக ஏக்கம் இதில் எழும். நெஞ்செரிச்சலை அடக்க எலுமிச்சை வகைப் பழங்கள் நல்லது. முக்கியமாக உப்பைக் குறைப்பது முக்கியம்.

மூன்றாவது மூன்று மாதம் : உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது.

நீங்கள் கீழே படுத்துக் கொள்வதால் காலில் இழுப்பு வருகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது.

மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு காரணம், குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை.

குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அதன் உதையையும், விக்கலையும் கூட நீங்கள் உணர முடிகிறது.

உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.

இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும். தாயாகப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்.

ஹெச்
nantri-kumutham

Sonntag, September 12, 2004

குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு

Dr . Jeyasiri Gayaraj

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை... உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா... கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்!

இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்.

நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப்பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது... அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.

தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அவர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.
உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்துவிடும். அந்தச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு.
இப்படி அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன..?
தாயின் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந் தாலும் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.

இப்படி ஆகும் போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்க முடியும்.
பிரசவமான பெண்களுக்கு மிகவும் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என்கிற நிலை ஏற்படுவதுண்டு. (இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)

இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாகவே காரணமின்றி அழுவார்கள். குழந்தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத்தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.
சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக்கிறோம். இது ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்லதல்ல. காரணம், அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இந்தச் சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பதுதான் நல்லது.
சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக் கொன்றுவிடும் அளவுக்கேகூடச் செல்வார்கள்!
தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவர, மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டி வரலாம்..

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இதுபோன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படுவதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற்படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை.. இது சாதாரண விஷயம்தான்.

கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல்பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அந்தச் சமயத்தில்தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டுவர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.

கர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரிதாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்ச்சியடைந்துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாகத் தொங்கினாற்போல காட்சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டால் தாயின் மார்பகம் நிரந்தரமாகவே தொங்கிப் போய்விடும் வாய்ப்புள்ளது.

கனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவது நல்லது. அதுவும் தனக்கு சரியான அளவிலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொருமுறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். இவர்கள் சாதாரண பிரா அணியாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக்கூடிய ‘மெட்டர்னிட்டி பிரா’ வாங்கி அணியலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.

கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.

இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே...’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.

இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும்கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?
குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.

அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.

Nantri - Kumutham sinehithi

Samstag, September 11, 2004

மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்?

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அல்லது சில நாள்களுக்கு முன்போ மார்பில் வலி வருவது பெண்களுக்கு காலங்காலமாய் நிகழ்ந்து வந்த ஒன்று. சில பெண்களுக்கு தலைவலி, கால்வலி, முதுகுவலி போல் மார்பில் வலியும் மாதவிடாயின் வரவைக் குறிக்கும் ஒரு சிக்னல்தான் எனலாம். மாதா மாதம் தவறாது அழையாது வந்து போகும் இவ்வலியை பெண்கள் சகித்துக் கொள்வது நடைமுறை விஷயம். இதை பிரெஸ்ட் டென்டர்னஸ் (Breast Tenderness) என்பார்கள். இவ்வலியை ஒன்றும் செய்ய இயலாது என்று கருதியே பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் சில எளிய டிப்ஸ் மூலம் பெண்கள் இதை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...

மார்பில் வலி தோன்றுவது ஏன் என மருத்துவர்களுக்கே சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோலேக்டின் அளவில் மாற்றம் இருப்பதால் மார்பு வலி வருவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

இச்சமயத்தில் மார்புகள் திரவங்களை அதிகமாக கிரகித்து தன் வசம் வைத்து கொள்வதால் மார்பு வீங்குகிறது. மாதவிடாயின்போது மார்பில் உள்ள பால் சுரப்பிகளிடம் புதுப்புது செல்கள் அதிகரிப்பதால் மார்பு வீங்கி மிகவும் மென்மையாகி-விடுகிறது. சிறு ஸ்பரிசம்கூட வேதனையாகி விடுகிறது.

இவ்வலியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றாலும் அதன் தாக்கத்தைக் குறைக்க இதோ சில வழிகள்..... முதலில் உள்ளாடையை (ப்ரா) சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். உறுதுணையாக இருக்கும் உள்ளாடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் பாதி வலி குறைந்த மாதிரி. அவை இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. மார்புக்கு கச்சிதமாக இருந்தால் வயை குறையும்.

மார்பு வலி அதிகரித்தால் ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அதை ஒரு துவாலையில் சுற்றி மார்புக்கு பத்து அல்லது பதினைந்து நிமிடம் வரை லேசான ஒத்தடம் கொடுக்கலாம். இது தண்ணீர் மற்றும் திரவங்கள் மார்புக்கு சென்றடைவதைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்கும்.

மற்றொரு பரிகாரம் நம் உணவில்தான் உள்ளது. நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ட்ரோஜன் கட்டுப்பாட்டில் இருக்கும். மார்பு வலியும் குறையும் வாய்ப்புண்டு.

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் மார்பு வலி நீங்கும். உப்பு அதிகம் சேர்ப்பதினால் உடலில் திரவ அளவு உயர்கிறது. அதனால் மார்பு வீங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவையும் நாம் நிராகரித்தால் நெஞ்சுவலி மட்டுமல்ல, மார்பு வலிக்கும் விடை தரலாம். கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் உடல் பருமனை அதிகரிப்பதால் நம் உடலால் ஈஸ்ட்ரோஜனை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போகிறது. அதனால் கொழுப்பு இல்லாத உப்புக் குறைவான நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பழக்கத்தை அனுசரித்தால் மார்பு வலி போயே போச்சு!

நிதர்ஷனி

Freitag, August 27, 2004

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox)

பெண்களைப் பாதிக்கும் அதீத மனநோய் விடுபட என்ன வழி

-இரா மணிகண்டன்-

ரம்யா செய்த காரியத்தைப் பார்த்தால் ஒருவகையில் சிரிப்புதான் வரும். ஆனால் அதில் உள்ள விபரீதத்தை நினைத்தால் மனசு அடித்துக் கொள்ளும்.

இருபது வயதுகூட ஆகாத ரம்யா இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா, என்றுகூட கேட்கத் தோன்றும். ஆனால் நடந்தது எதுவுமே அவருக்குத் தெரியாது என்கிறபோதுதான், அது எவ்வளவு பெரிய ஆபத்து என்று உணர முடிகிறது.

ரம்யா செய்த காரியத்தைப் படித்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

எம்.பி.ஏ. பரீட்சைக்குப் படித்துக்கொண்டு இருந்த ரம்யா, அப்படியே அசந்து தூங்கிவிட்டாள். காபி கலந்து எடுத்து வந்த அம்மா, ‘‘அசந்து தூங்குகிறாள். தூங்கட்டும்’’ என்று போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து மகளை எழுப்பிவிட்டு படிக்கச் சொல்லலாம் என்று வந்தால், படுக்கையில் மகளைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடியும் ரம்யாவைக் காணவில்லை. வீட்டில் நிறுத்தியிருந்த அவளது சைக்கிளையும் காணவில்லை.

இரவு நேரம் என்பதால் பதற்றம் கூடியது. பாடத்தில் சந்தேகம் கேட்க வகுப்புத் தோழிகள் யாரையாவது தேடிப்போய் விட்டாளோ, என்று எண்ணி ஆளாளுக்கு விசாரித்துப் பார்த்தார்கள். ‘‘வரவில்லை’’ என்ற பதில்தான் வந்தது. நேரமாக ஆக பெற்றோருக்குப் பயம் தொற்றிக்கொண்டது.

சுமார் ஒரு மணி நேரம் கழிந்த பின்னர், தூரத்து உறவினர் ஒருவர் ரம்யாவை அழைத்துவந்து வீட்டில் விட்டார். ரம்யாவின் முகமே ஒரு மாதிரியாக இருந்தது. என்ன, ஏது என்று விசாரித்தபோது, பெற்றோருக்கு அடிவயிறே கலங்கியது.

‘‘ரம்யா ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுட்டு இருந்தா? ‘என்ன ரம்யா. இங்ஙன இந்த நேரத்துல நிக்கிறே?’ன்னு ரயில்ல இருந்து இறங்கி வந்த நான் கேட்டேன். அதுக்கு அவள் ‘என் ஃப்ரெண்ட் உஷா இந்த ட்ரெயின்ல வர்றதா சொன்னா. அதுதான் அவள கூட்டிட்டுப் போகலாமுன்னு வந்தேன்’னு சொன்னா. உஷாவா, ‘அவளுக்குக் கல்யாணமாகி அமெரிக்கா போயி செட்டிலாகி மூணு மாசமாச்சே! அவ எப்படி தனியா வரப்போறான்?’னு கேட்டதும் ரம்யா முழிச்சா. ஏதோ தப்பு நடந்திருக்குன்னு, ‘ரம்யா நீ எதுவும் பேசாத எங்ககூட வா’ன்னு கூட்டிட்டு வந்துட்டோம்’’ என்றார்கள். ரம்யாவிடம் கேட்டால், ‘ஆமா உஷாதான் வரச் சொன்னா’ என்கிறாளே தவிர, தான் செய்த செயலைப் பற்றி எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தாள். அவளது காதில் உறக்கத்தில் உஷா பேசுவதுபோல் கேட்டிருக்கிறது. அதுதான் அவளை எழுந்து போக வைத்திருக்கிறது.

பிறகுதான் ரம்யாவின் பெற்றோர் உண்மையை ஒப்புக்கொண்டார்கள். ரம்யா இப்படி அடிக்கடி தன்னை யாரோ அழைப்பதாகத் தூக்கத்தில் எழுந்து போய்விடுவதும், அழைத்துவருவதும் சகஜமாகிவிட்டது என்று சொன்னார்கள். இனியும் தாமதித்தால் ரம்யாவின் மனநிலை பாதிக்கக்கூடும் என்று மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துப் போனார்கள். அவளை முற்றிலும் பரிசோதனை செய்த டாக்டர், ‘‘இது ஒரு இனம்புரியாத இன்னல் தரக்கூடிய மனநோய்தான். தங்கள் மனதிற்குள் சில குரல்களை இவர்களால் கேட்கமுடியும். அக்குரல்கள் சொல்கிறபடி அவர்கள் நடந்துகொள்வார்கள். இந்த மாதிரி சமயத்தில் யாராவது பார்த்து தடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் பெரிய விபரீதமாகிவிடும்’’ என்றார்
.

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோயின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப்பொருட்களின் மாற்றங்களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மனநோய்கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கும்போது, இப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்நோய்க்கான வேறு அறிகுறிகள் :

பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர்கள் நடந்துகொள்வார்கள்.

தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது தெளிவான ஆதாரம் இல்லாமல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டால், பேச்சைத் துண்டித்துக் கொள்வார்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன்னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன்னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்படிப் பேச்சு இருக்கும்.

ரம்யா மாதிரி மருத்துவப் பரிசோதனைக்கு வந்த நடுத்தரப் பெண் ஒருத்தி, யாரோ தன் காதில் ‘நீ செத்துப் போய்விடு. இந்த உலகத்தில் நீ இருக்காதே. செத்துப்போ’ என்று அடித்துப் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.

இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர்வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.

அதீத கற்பனைப் பேச்சும், நடத்தையும்கூட இந்நோய்க்கு அறிகுறியாகச் சொல்லப்படுகிறது. ‘மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கும் இடம் எங்களது. என் கொள்ளுத் தாத்தாதான் அதை தானமாகக் கொடுத்தார்’ என்பார்கள். எதாவது கல்யாண மண்டபத்தில் தரையைச் சுத்தம் செய்யும் வேலையில் இருப்பார்கள். ‘ஜனாதிபதி என் நெருங்கிய உறவினர்தான். ஏதோ என் போறாத காலம் இப்படி இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.

இவர்களின் பேச்சில் ஒழுங்கு இருக்கும். கட்டுக்கோப்பு இருக்கும். சில சமயம் நம்பும்படியாகவும் இருக்கும். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவே இருக்கும். இதற்குக் காரணம் எதிராளியைவிட, அவரே கற்பனையை உண்மை என்று நம்புவதன் விளைவுதான்.

இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு மருமகள், தன் மாமியார் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் சிரித்துக்கொண்டே இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்பேர்ப்பட்டவர்களின் உணர்வுகள் சூழ்நிலைக்குத் தக்கபடி இருக்காது. எது நடந்தாலும் பேசாமல் இருப்பார்கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். உச்சகட்ட நடவடிக்கையின்போது, திடீரென்று மூக்கை நுழைப்பார்கள். அதுதான் பலசமயம் அவருக்கோ எதிராளிக்கோ பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். உதாரணத்திற்கு சில மருமகள்கள் தீக்குளிப்பதைச் சொல்கிறார்கள்.

மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அதிக அளவு ஒருவரிடத்தில் இருந்தால் அவரை டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார்கள். இது ஒருவகையில் மனச்சிதைவு நோயை ஒட்டியதுதான். என்றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந்நோய்தான் என்ற முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விடமுடியும் என்கிறார்கள். மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடலளவில் நல்ல உடற்பயிற்சி, அன்பான சுற்றுச்சூழல் இருந்தாலே இதை எளிதில் நிவர்த்தி செய்யமுடியும் என்கிறார்கள்.

எளிதான வழிகள்:

1. வாக்கிங், ஜிம் : வாக்கிங் கட்டாயம் போகவேண்டும். குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்கவேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கியம். நடைப்பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்துவதாக அமையும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.

2. நல்ல மூடுக்கு வர முயற்சித்தல் : சம்பந்தப்பட்டவரை நல்ல சந்தோஷமான மூடில் இருக்கும்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவான பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவினர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத்திகள்.

3. ஒமேகா_3 : இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா _ 3 கொழுப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கலந்து நல்ல மூட் உருவாக உதவும் என்கிறார்கள். இதற்காக நீங்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.

4. மௌனமாக இருக்கவிடக் கூடாது : இத்தகைய மனநிலை பாதிப்பில் இருப்பவர்கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார்கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதாவது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவது அவசியம்.

5. தனியறையில் தூங்கவிடக் கூடாது : இப்படிப்பட்டவர்களை தனியறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மாவோ, தோழியோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங்கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின்தொடர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கிவிடாதீர்கள்.

6. யோகா, தியானம் : மனதில்மாற்று எண்ணங்கள் உருவாகாமல் இருக்க முறையான யோகாவும், தியானமும் இவர்களுக்கு உதவும்.

7. பொழுதுபோக்கு : புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக்கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கும் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்தனைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.

நன்றி - குமுதம்

Dienstag, Juli 13, 2004

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..

மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு

அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை அடையும்போது செய்கிறீர்களா?

‘ஐயய்ய.. இதையெல்லாம் பத்திப் பேசுவாங்களா?’ என்று நினைக்கிறீர்கள். ‘இந்த மனோபாவம்தான் முதல் தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘எல்லாம் ஹார்மோன் பண்ணுகிற வேலை’’ என்கிறார் ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.

‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு வருவதும், டீன் ஏஜும் கல்யாணமும் குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஆனால், காலம்காலமாக, ‘இது அசிங்கம். இதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்றே போதிக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாம் இழப்பது எத்தனை அதிகம்?’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் தமிழிசை.

‘‘இதுவும் ஒரு பருவம்தான். இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது. டென்ஷனற்ற, நிம்மதியான மெனோபாஸ்தான் இந்த வயதில் இருக்கிற எல்லாப் பெண்களின் தேவை’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன். ‘‘வலிகளை கவனிக்கிறீர்களா?’’ என்று கேட்கிறார் எலும்பு சிறப்பு நிபுணர் சௌந்தரபாண்டியன். ‘‘இதயமும் முக்கியமானது. மறந்துடாதீங்க’’ என்று எச்சரிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் ஆஷா குருமூர்த்தி. ‘‘கேன்சருக்கான சிறப்பு கவனமும் தேவை’’ என்கிறார் கேன்சர் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. ‘‘உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?’’ என்று கேட்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.

‘‘தாம்பத்திய வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்’’ என்று வழிநடத்துகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.. இத்தனை பேரின் துணையுடன் இந்த சிறப்புப் புத்தகமே இருக்க, உங்களுக்கு நிம்மதிக்கா குறைச்சல்? வாருங்கள்.. வாழ்க்கையைச் சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

ஹார்மோன் குறைஞ்சு போச்சு!

‘‘‘இனி எல்லாம் சுகமே’ என்று மெனோபாஸை சந்தோஷமாக வரவேற்பார்கள் சிலர். ‘அடடா.. நம்மளோட இளமை ஓடிப் போயிடுச்சே’ என்று வருந்துவார்கள் பலர். வருந்தும் படியான விஷயமில்லை இது’’ என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.

ஓவரி எனப்படும் சினைப் பையில் முட்டை உற்பத்தி நிற்கும் பருவமான மெனோபாஸ், பொதுவாக 45 வயதுக்குமேல்52 வயதுக்குள் ஏற்படும்.

ஓவரியின் செயல்பாட்டுத் திறன் சுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும் குறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை. அவ்வளவுதானே தவிர, ‘போச்சுடா.. இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவுதான் போல’ என்று பயப்படுமளவுக்கு ஒன்றுமேயில்லை.

வெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸ§க்குக் கூடுதல் கவனம் தருவார்கள். அதிலும் ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி‘ எனப்படுகிற ஹெச்.ஆர்.டி|க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து தத்தெடுப்பதுதான் ஹெச்.ஆர்.டி.!

‘இது எதற்கு என்றால், ஹார்மோன் களின் உற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப் பிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு தோன்றுவ தைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும். சிலருக்கு ஒரு நாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறை கூட இது போல ஏற்படலாம்.

சிலர் சாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த ஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. அது கேன்சர் போன்ற மிகப் பெரிய பிரச்னைகளில் கொண்டுபோய் விடக்கூடும். ஜாக்கிரதை.

ஹாட் ஃப்ளஷ் ஏற்பட்டதும் உடனடியாக காற்றோட்டமான இடத்துக்குச் செல்லுங்கள். மெல்லிய பருத்தி ஆடைகளையே அணியுங்கள். காற்றோட்டமில்லாத இடத்தில் குளிக்கும்போது, மசாலாப் பொருட்களைச் சேர்க்கும்போது என்று ஹாட் ஃப்ளஷ் எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் ஒரே மாதிரியான சூழலில்தான் இது வருகிறது. சிகிச்சை மூலம் இதைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முன்பே கண்டறிந்து தவிர்க்க முடியாது.

டென்ஷன்.. டென்ஷன்..

ஆனந்தியின் நாற்பத்தெட் டாவது பிறந்தநாள் முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. ஒருநாள் காலை பெரும் எரிச்சலும் குழப்பமுமாய் விடிந்தது ஆனந்திக்கு.

‘‘அம்மா.. ப்ரஷ் எங்கேனு தெரியல. கொஞ்சம் தேடிக்குடேன்’’ என்றான் நரேன். வழக்கமாக அவன் கேட்பதுதான். இவள் தேடித் தருவதுதான். ஆனாலும், அன்று ஏனோ அநியாயத்துக்கு எரிச்சல் வந்தது ஆனந்திக்கு. ‘‘வயசு என்னாகுது? இன்னும் ப்ரஷ்ஷை நான்தான் தேடித் தரணுமா? ஒனக்கா தேடிக்கத் துப்பில்ல? ஒன் பொண்டாட்டி மகாராணி என்ன செய்றா? அவள்ட்ட கேளு’’ என்று எகிற, நரேனின் மனைவியும் அங்கு வர...

நிலைமை என்னவாகியிருக்கும் என்பதைவிளக்கவும் வேண்டுமா?

மெனோபாஸால்தான் இந்தப் பிரச்னை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். விளக்கமாகப் பார்ப்போம்.

பெரிமெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் என்று மூன்று நிலைகள் இதில் உண்டு.

பெரிமெனோபாஸ்

நாற்பத்தெட்டு வயதில் மெனோபாஸ் ஆகப்போகிறதெனில், நாற்பத்தைந்து வயதிலேயே அதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிடும். இதுதான் பெரிமெனோபாஸ். சிடுசிடுவென்று விழுவது, அல்ப காரியங்களுக்கு எல்லாம் மூட் அவுட் ஆவது, ஹாட் ஃப்ளஷ், மூட்டு வலி, கைகால் உளைச்சல் இவையெல்லாமேதான் இதன் அறிகுறிகள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உடல் குழம்ப ஆரம்பிக்கும். வயதுக்கு வந்த புதிதில், என்னென்ன அறிகுறிகள் இருந்தனவோ அவையெல்லாம் இப்போது மீண்டும் ‘உள்ளேன் அம்மா..’ என்று தலை காட்டும். சரியாக இருபத்தெட்டு நாட்களில் வந்துகொண்டிருந்த மாத விடாய் சில மாதங்கள் கழித்தெல்லாம் திடீரென்று வந்து டென்ஷன் பண்ணுவது, மிக அதிகமான ரத்தப் போக்கு, ஸ்பாட்டிங் எனப்படுகிற திட்டுத் திட்டாகப் படுவது என்று எல்லாம் நடக்கும். காரணம் என்ன தெரியுமா? வயதுக்கு வந்த காலத்தில் திடீரென்று அதிகரித்த ஹார்மோன்களால் உடல் குழம்பிப் போய் தடுமாறி, சில காலம் கழித்து நார்மலானது இல்லையா? அதேபோலத்தான் இப்போதும் ஹார்மோன் குறைவதால் உடல் குழம்பிப் போகும். அதே நேரம், மேலே குறிப்பிட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் தகுந்த நிவாரணமுண்டு.

(ஒழுங்கற்ற மாதவிலக்கும் திட்டுத்திட்டாகப் படிவதும் சகஜம்தான் என்றாலும், இவை கேன்சருக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனம் தேவை.)

இந்த இடைப்பட்ட காலம் ஒவ்வொரு வரையும் படுத்துகிற பாடு இருக்கிறதே.. அது இந்தஅளவு என்றில்லை.

முதலாவது மனரீதி யான பிரச்னைகள். ‘ஓஹோ.. இனி நான் அவ்வளவுதான் போல’ என்கிற தன்னிரக்கம் எழுபது சதவிகிதத்தினருக்கு ஏற்படும். வேலையிலிருந்து ஓய்வுபெறுகிற ஒரு ஆண், ‘நாளையிலருந்து நான் இந்த ஆபீஸ§க்கு வரமாட்டேன்ல..’ என்கிற ஒரு கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போவதற்கு இதை ஒப்பிடலாம். சிலர், ரொம்பவே பயந்து போவார்கள். ‘இனி நான் தாம்பத்திய வாழ்க்கைக்கே லாயக்கில்லை. எதற்குமே உபயோகமில்லாதவள். முன்னைப்போல் அழகாக இருக்க முடியாது. வயதாகத் துவங்கி விட்டது. தோலெல்லாம் சுருங்கும். யாரும் மதிக்க மாட்டார்கள்’ என்றெல்லாம் பல எண்ணங்கள் மனதைப் பாடாய்ப் படுத்தும்.

ஏற்கெனவே இதுமாதிரி இருக்கும்போது உடல் வேறு பல அசௌகரியங் களைச் சுமந்துவந்து நோகடிக்கும். இரண்டும் கலந்த இந்த நேரத்தில்தான் முக்கால்வாசி வீடுகளில் மகனுக்குக் கல்யாணம் செய்துவைப்பார்கள். ஏற்கெனவே, ‘நாம எதுக்கும் உபயோகமில்ல போல’ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை உறுதி செய்வதுபோல, புதிதாக வருகிற மருமகள் பல விஷயங்களையும் கையில் எடுப்பாள்.

இந்த நேரத்தில் அந்தத் தாய்க்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும் ஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் புகுந்த வீடு போகிற மகளிடம் தாய், ‘எங்கியாவது வெளியில போனா, உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ’ என்பார். காரணம் இதுதான். ‘நான் உபயோகமில்லாதவள் போல’ என்ற எண்ணம் மாறி, ‘பரவால்லியே.. மருமக நம்மள மதிக்கிறாளே..’ என்கிற சந்தோஷம் ஏற்படும் அந்தத் தாய்க்கு.

‘‘இதற்கு என்னிடம் வந்த ஒரு நோயாளியே உதாரணம்...ÕÕ என்கிறார் டாக்டர். தமிழிசை.

‘‘ஒரு அம்மா, பெரிமெனோபாஸ் நிலையில் என்னிடம் வந்தார். அவருக்கு அதோடுகூட, பிபி, சர்க்கரை, கொழுப்பு, கைவலி என்று ஏகப் பட்ட பிரச்னைகள். ‘அது முடியல.. இது முடியல’ என்று சொல்பவர், திடீரென்று ÔÔஆனாக் கூட டாக்டர்.. சில நேரம்தான் இதெல்லாம். மத்தபடி சமாளிச்சிடுவேன். என் மருமக தங்கம் டாக்டர். என்னை ராஜாத்தி மாதிரி கவனிச்சுக்கிறா!Õ’ என்றார்.

உண்மையில் அவருக்கிருந்த பிரச்னைகள் எக்கச்சக்கம். மருமகளின் அன்பான பேச்சும் கவனிப்பும் மட்டுமே அந்த அம்மாவின் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது’’ என்கிறார் தமிழிசை.

மெனோபாஸ்

இது, மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோன காலகட்டம். இப்போது, பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவத்தின் சுரப்புக் குறையும். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஆகும். சிலருக்கு வெள்ளைப் படுதல் இருக்கும். அரிக்கும்.

இவையெல்லாவற்றுக்குமே தீர்வுண்டு. திரவத்தின் சுரப்புக் குறைவதால்தான் இந்தப் பிரச்னைகள். இதற்கு என்று க்ரீம்கள், ஜெல்கள் கிடைக்கின்றன. இன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும் சரிசெய்ய முடியும். மெனோபாஸ§க்குப் பிறகு ஏற்படுகிற வெள்ளைப்படுதல் அபாயகரமானது. இதையும் உடனே கவனித்தால் குணமாக்கிவிடலாம்.

போஸ்ட் மெனோபாஸ்

இது ஒருவகையில் நிம்மதியான காலகட்டம். ஆரம்பத்தில் கவலைப்பட்டவர்கள்கூட, ‘அப்பாடா.. இத்தனை வருஷ அவஸ்தை இனி இல்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இந்த நிலையில் ஒரு விஷயத்தில் கவனம் தேவை.

முற்றிலுமாக மாதவிலக்கு நின்றபிறகு, ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து ரத்தப்போக்கு இருந்தாலோ, சின்னதாகத் திட்டுக்கள் இருந்தாலோ, அது ஆரோக்கிய சீர்கேட்டுக்கான (கேன்சராகவும் இருக்கலாம்!) அலாரம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அடி இறங்குதலும் இந்தச் சமயத்தில் பலருக்கு ஏற்படும். கர்ப்பப்பை லூஸாகி இறங்கிவிடும். சிலருக்குப் பெண்ணுறுப்பு வழியே வெளியே வரைகூட வந்துவிடும். இப்படி ஆகிவிட்டால், சர்ஜரி செய்து பையை வெளியே எடுப்பதுதான் தீர்வு.

ஆரம்ப கட்டம் எனில், வளையம் போடுவது போன்ற சிகிச்சைகள் உண்டு. சிறுநீர் கழிக்கும்போது விட்டுவிட்டுக் கழிப்பது இதற்குச் சிறந்த சிகிச்சை.

அக்கறை காட்டுங்களேன்..

அவர் சினிமாத் துறையில் மிகவும் பிரபலமான புள்ளி. அவர் மனைவியை பண்புக்கும், பணிவுக்கும் உதாரணமாகச் சொல்வார்கள். அந்தத் தம்பதியின் அந்நியோன்னியம் அவ்வளவு பிரபலம். எங்கு சென்றாலும் எத்தனை நேரமானாலும் வீட்டுக்கு வந்து மனைவி கையால் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நல்ல தம்பதி என்ற வார்த்தைக்கு அர்த்தமாக விளங்கிய அவர்களின் வாழ்க்கையில் அந்த அம்மாவின் நாற்பத்தைந்தாவது வயதில் ஒரு வில்லி உள்ளே நுழைந்தாள், மெனோபாஸ் வடிவத்தில்.

மெனோபாஸின் எதிரொலிப்பான எரிச்சல், கோபம், ஆங்காரம்.. அதெல்லாம் அந்த அம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை சாதுவாகவே அவரைப் பார்த்துப் பழக்கப்பட்ட அத்தனை பேரும், எதற்கெடுத்தாலும் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டை ரணகளப்படுத்திய அவரின் புதிய முகத்தைக் கண்டு மிரண்டனர்.

‘அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு’ என்று எல்லோருமே விலகினார்கள். அதிலும் பாசமான கணவன் என்று புகழப்பட்ட அவரது கணவரும் அவரை விட்டு விலகியதுதான் கொடுமை.

இந்த மாறுபட்ட நடவடிக்கைகள் வெறும் ஆறேழு மாதங்களில் மறைந்துவிட்டது. ஆனால், அதற்குள் அந்தப் பெண்மணியின் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து, இவர்களது சந்தோஷ சாம்ராஜ்யமே குப்புறக் கவிழ்ந்து, பிறரது கேலிக்கு உள்ளானதுதான் சோகம்.

‘‘குடும்பத்தினரின் அக்கறை கொஞ்சம் அதிகமாக அப்போது அந்தப் பெண்மணியின்மீது விழுந்திருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்குமா?! மெனோபாஸில் காலெடுத்து வைக்கப்போகும் நிலையிலுள்ள பெண்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன்.

‘‘இப்படிப்பட்டவர்களைக் குடும்பத்தோடுதான் வரச்சொல்கிறோம். எங்களது முதல் கவுன்சிலிங் குடும்பத்தாருக்குத்தான்’’ என்கிறவர், இந்த நேரத்தில் மனதில் ஏற்படும் புதுவித உணர்வுகள், மாற்றங்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகள் பற்றியும் விவரிக் கிறார்.

‘‘மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்பதைவிடவும் குழப்பங்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.. எவ்வளவு தெளிவான ஆட்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடும் காலகட்டம் அது. பெரும்பாலான பெண்கள், அந்த நிலையை அடையும்வரை அதனைப் பற்றித் தெளிவாக ஏதும் தெரியாமல் இருக்கின்றனர். அதுதான் முதல் பிரச்னையே. முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

யாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல சோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த வேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு படபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.

இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் அவர்கள் மனதில் உள்ள பயம்தான். பெண்கள் உடல் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்.

ஒரு கதை சொல்வார்கள். ஒரு அம்மாவுக்குக் கை நடுங்கிக்கொண்டே இருந்ததாம். எத்தனையோ மருத்துவர்களிடம் அழைத்துப் போயும் குணமாக்க முடியவில்லை. கடைசியாக ஒரு டாக்டரிடம் போனபோது அவர், ‘வயசாகுதில்லையா.. அப்படித்தான் இருக்கும்’ என்றாராம். உடனே சட்டென்று கை நடுக்கம் காணாமல் போய்விட்டதாம்!

அப்படித்தான்.. மாதவிலக்கை ‘இன்னும் இளமையாக இருக்கிறோம்’ என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்கிறவர்களை மெனோபாஸ் பயமுறுத்துகிறது. தோற்றத்தில் உடனே முதுமை வந்து ஒட்டிக்கொள்ளுமோ.. அழகு குறைந்து விடுமோ.. கணவர் விலகிடுவாரோ.. இனி தாம்பத்திய வாழ்க்கைக்கு நாம் லாயக்கில்லையோ.. போன்ற பயங்கள் சூழ்ந்துகொள்கின்றன (உண்மையில் இவையெல்லாமே தேவையற்ற பயம்தான்!).

அந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளும் திருமணம், மேல்படிப்பு என்று பெற் றோரைப் பிரிந்திருப்பார்கள். வெளிஉலகத்தோடு அதிக தொடர்பு இல்லாத, பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபாடு இல்லாத, சதா குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இந்த வெறுமையை அவ்வளவு சுலபத்தில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.

தவிர, கணவருக்கும் வீட்டில் இருக்கும் வயதான பெரியவர் களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும். இல்லத்தரசி என்ற முறையில் அதை கவனித்தாக வேண்டிய பொறுப்பும் இவர்களுடையதாகத்தான் இருக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படும். எல்லாமே பெரிய அளவில் செலவு வைக்கும் சமாச்சாரங்கள். அதைச் சரிக்கட்ட வேண்டிய கடமையும் அழுத்தும். ஆக, உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்காததோடு, கூடுதல் பொறுப்புகளும் சேர மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தங்களுடைய பிரச்னைகளைக் குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள முடியாமலே போய்விடுகிறது.

இவை தாண்டி கணவரின் அனுசரணை இருந்தாலே மெனோபாஸைச் சுலபமாக எதிர்கொள்ளலாம். ‘அனுசரணையான கணவர் அமையப் பெறாதவர்கள், கணவனை இழந்த, திருமணமாகாத, விவாகரத்தான பெண்கள், தாமதமாகக் குழந்தை பெற்றதால் டீன்|ஏஜ் பிள்ளைகளைக் கொண்ட அம்மாக்கள் ஆகியோர் இதுபோன்ற மன உளைச்சலுக்கு மிக மிக அதிக அளவில் ஆளாகின்றனர்’ என்கிறது உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம்.

நம் ஊரில், பிரச்னையோடேயே வாழ்வதுதான் அம்மாக்கள் செய்கிற பெரிய தவறு. மன உளைச்சலை போக்க மாத்திரைகள் உள்ளன. மருத்துவரின் அனுமதியோடு எடுத்துக்கொள்ளலாம். மெடிடேஷனும் அதிகாலை நடைப்பயிற்சியும் சுலபமான நிவாரணிகள்.

மெனோபாஸில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தீர்வுள்ள பிரச்னைகள்தான். அதற்குப் பிறகான வாழ்க்கை நிம்மதியானது. மாதாந்திரத் தொல்லை இல்லை. கோயில், விசேஷங்களுக்கு நிம்மதியாகப் போய் வரலாம். குழந்தை உண்டாகுமோ என்ற பயமின்றி தைரியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மீண்டும் வளர்ந்த குழந்தையாக வாழ்வை அனுபவிக்கலாம்.ÕÕ

இயற்கை தந்த வரம்!

ஆயிரம் திரை கண்டு இன்றும் சளைக்காமல் நடிப்புலகில் ஓடிக்கொண்டிருக்கும் மனோரமா வுக்கு வயது அறுபதுக்கும் மேல். உடலையும் மனதையும் துவளச்செய்யும் மெனோபாஸ் பருவத்தைத் தான் கடந்துவந்த விதத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார் ஆச்சி.

‘‘பத்து வயசா இருக்கும்போதே மெனோபாஸ்னா என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். அந்தளவுக்கு என் கண்ணு முன்னால கஷ்டப்பட்டாங்க எங்கம்மா. அம்மாக்கு எந்நேரமும் அனல்ல குளிச்சு முறுக்குச் சுடற வேலை. வேலை பாத்துட்டிருக்கும்போதே திடுதிப்புனு காலோட தீட்டுப் போகும். அவங்க கட்டியிருக்கற 18 முழம் புடவை மொத்தமா நனஞ்சு தொப்பலாயிடும். ஒரு நாளைக்கு நாலஞ்சு புடவை மாத்துவாங்க. நான்தான் தொவைப்பேன்.

அம்மா படற வேதனையைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலிக்கும். அம்மா கஷ்டப்பட்டாத்தான் எங்க வயித்துக்கு சோறு. ஆனா, ‘சேர்ந்தாப்பல அரை மணி நேரம் உக்கார முடியாதபடிக்கு கைகாலெல்லாம் விட்டுப் போகுதும்மா’னு அழுதுட்டே போய் படுத்துடுவாங்க. ஒரு வருஷம் வரைக்கும் இந்த அவஸ்தை தொடர்ந்துச்சு. அம்மாவுக்கு நான், எனக்கு அம்மா, வேற துணை இல்லேங்கறதால தன் உடம்புக்கு என்னங்கறதை எங்கிட்ட விளக்கமாச் சொன்னாங்க. அப்பலேர்ந்தே என் அடி மனசுல இந்த வயச நெனச்சு சன்னமா ஒரு பயம் ஒட்டிக்கிட்டே இருந்துச்சு.

நாற்பத்தஞ்சாவது வயசுல அந்தக் கட்டம் எனக்கு வந்துச்சு. இந்த விஷயத்துல ‘அம்மா மாதிரிதான் பொண்ணுக் கும்’னு பலபேர் சொன்னதால பயம் கூடிடுச்சு. மகமாயி தயவால எனக்கு அவ்வளவு சோதனை வரலை.

அந்த ரெண்டு வருஷமும் அடிக்கடி மூளையே குழம்பிப் போற மாதிரி ஆகிடும். திடீர்னு உடம்பு முழுக்க அனலடிக்கும். குப்புனு வேர்க்கும். அதை வெளில காட்டிக்காம, காத்தாட உக்காந்து உடம்பு பழைய நிலைமைக்கு வந்ததும் வேலையைப் பார்ப்பேன். இப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்ததால தன்னால சரியாகிடும்னு நானே என்னை சமாதானப்படுத்திக்கு வேன்.

எப்போ வரும்னு தெரியாம, திடீர் திடீர்னு விலக்காகும் பாருங்க. அதுலதான் ரொம்பவும் அவஸ்தைப்பட்டுட்டேன். அப்படித்தான் ‘வருவான் வடிவேலன்’ படத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனப்போ விலக்காயிட்டேன். எல்லாரும் காத்திருக்காங்க. நான் தயங்கினா பல பேர் பொழப்பு கெட்டுடும். கடைசியா ஆத்தாமேல பாரத்தைப் போட்டுட்டு, ‘இது பொம்பள பொறப்புக்கு நீ ஏற்படுத்தின நியதி.. இதுல என் தப்பு ஒண்ணுமில்லை. தாயேÕனு கண்ணீரோட வேண்டிக்கிட்டு பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சு நடிச்சேன். அந்த ஒரு நாள் முழுக்கப் பச்சைத் தண்ணி பல்லுல படாம பார்த்துக் கிட்டேன். அதுதான் ஆத்தாக்கு என்னால செய்யமுடிஞ்சது.

இத்தனை அவஸ்தைப்பட்டதனாலயோ என்னமோ அப்புறமா அந்த மாதாந்தரத் தொல்லையிலிருந்து கிடைச்ச.. விடுதலை, பிரசவ வேதனையை மறக்கடிச்சு குழந்தை முகம் பாக்கிற மாதிரி அத்தனை சுகமா இருக்கு. ஒருவேளை.. இளமை போய்டுச்சேனு சங்கடப்படக்கூடாதுனுதான் இயற்கை இத்தனை கஷ்டங்களைத் தருதோ, என்னவோ..” என்கிறார் கவித்துவமாக.

இன்னும் நான்இளமைதான்ÕÕ

சிரித்த முகம் எழுத்தாளர் அனுராதா ரமணனுக்கு. வரும் ஜூனில் ஐம்பத்தேழு வயதைத் தாண்டுகிற அனுராதா, தான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார்.

‘‘அப்போ எனக்கு முப்பத்தேழு வயசு. எழுத்தாளரா ரொம்பப் புகழோட இருந்த நேரம். மீட்டிங், விழானு எங்கேயாவது போய்ட்டே இருப்பேன். அப்போதான் அந்தப் பிரச்னை ஆரம்பிச்சது. பதினஞ்சு நாள், இருபது நாளுக்கு ஒருமுறை விலக்காகிடுவேன். உடம்பே கரைஞ்சுபோற மாதிரி ரொம்பக் கஷ்டப்பட்டேன்.

டாக்டர்ட்ட போனப்போ ஸ்கேன் பண்ணிப் பாத்துட்டு, ‘யூட்ரஸ்ல சின்ன கட்டி இருக்கு. யூட்ரஸையே எடுக்கணும்’ னுட்டாங்க. எனக்கு சர்ஜரி பண்ணின டாக்டர் கனகவல்லி, ‘உனக்கு முப்பத்தேழு வயசுதானே ஆகுது. ஓவரிஸை எடுக்க வேணாம். அதைஎடுத்துட்டா, ரொமான்டிக்கான உணர்வுகள் செத்துப் போய்டும்’னு சொன்னாங்க. அதுக்கு எங்கம்மா, ‘அதனால என்ன டாக்டர்? அவ புருஷன்தான் உயிரோட இல்லையே’னு சொல்லவும் டாக்டர், ‘அப்படிச் சொல்லாதீங்கம்மா. உணர்வுகள் வேற. கல்யாணம், புருஷன்ங்கிறதெல்லாம் வேற. அதிலயும் அவ எழுதுறவ. ஒரு லவ்ஸ்டோரி எழுதணும்னாக்கூட இந்த உணர்வுகள் வேணும்’னு சொல்லிட்டாங்க. நல்லவேளையா, கால் உடைஞ்சு ஆஸ்டியோபொராஸிஸ் வந்து நான் கஷ்டப்பட்டப்போ, அந்த ஓவரீஸ்தான் என்னைக் காப்பாத்துச்சு. அதுலருந்து சுரக்குற ஹார்மோன்களால தான் என் உடம்புக்கு இன்னிக்கு வரைக்கும் கால்சியம் கிடைச்சிட்டிருக்கு.

யூட்ரஸ் எடுத்ததுக்கப்புறமா, நாற்பத்தோரு வயசுல எனக்கும் மெனோபாஸ் வந்தது. திடீர்னு தலைக்குள்ள என்னவோ கொதிக்கிற மாதிரி இருக்கும். சட் சட்னு கோபம் வரும். பிபி|தான் அதிகமாகிடுச்சு போலனு டாக்டர்ட்ட போனா, பிபி நார்மலா இருக்கும். அப்போதான், டாக்டர், ‘இது மெனோபாஸ். உங்க விஷயத்துல மாதவிலக்கு இருக்காதே தவிர, மத்த எல்லாக் குழப்பங்களும் இருக்கும்’னாங்க. இப்போ யோசிச்சுப் பாத்தா, ‘நான்தானா அப் படி எரிச்சல் பட்டேன்’னு ஆச்சரியமா இருக்கு. அது ஒருமாதிரி, ‘நம்மள நாமே இழந்துடற’ நிலைமை. மத்தவங்களுக்கு அந்த நேரத்துல ஆறுதல் சொல்ல, வீட்டுக்காரர் இருப்பாங்க. என் விஷயத்துல வீட்டுக்காரனும் நானே. வீட்டுக்காரியும் நானே. என்னை நானேதான் தேத்திக்கணும்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு புத்தி. எதுக்காகவும் ரொம்ப நேரம் அழவோ வருத்தப்படவோ மாட்டேன். கொஞ்ச நேரம் மனசு விட்டு அழுதிட்டு விட்டுடுவேன்.

அப்படிப்பட்ட நானே அந்த நேரத்துல ‘நானுறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்.. என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்’னு ஒரு சினிமா பாட்டுல வருமே அது மாதிரி, எனக்குனு யாருமே இல்லையேனு ரொம்பத் தவிச்சுப் போய்ட்டேன். அந்த நேரம் என் தங்கை என்கூடவே ஆறுதலா இருந்தா.

இப்போ பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நேத்து பெய்த மழையில ஒரு பையனும் பொண்ணும் வீட்டுக்குத் தெரியாம வந்திருக்குங்க போல.. ஸ்கூட்டர்ல நனைஞ்சுட்டு, என் வீட்டு வழியா போச்சுங்க. எனக்கு அதுங்கள பாக்க ஆசையா இருந்தது. என்னோட உணர்வுகள நல்லபடியா வெச்சிருக்கிற கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

என் உடலுக்குத்தான் வயசாச்சே தவிர, மனசு இன் னும் இளமைத்துள்ளலோட தான் இருக்கு’’

சந்தோஷத்தை மீட்க முடியும்..

வசுமதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஏன் தன் கணவரின் புத்தி இப்படிப் போனது? இத்தனை வருடங்களாகத் தன்னைத் தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர் திடீரென்று வேலைக்காரியிடம் போய் இப்படி நடந்து கொள்வார் என்பதை வசுமதி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. முதலில் வேலைக்காரியின் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால், கணவரிடம் கேட்டபோது அவர் அதை மறுக்காததும் வேலைக்காரியின் முகம் பார்க்கக் கூசியதும் உண்மையை டமாரம் அடித்தன. கூசிப் போனார் வசுமதி. நல்லவேளையாகத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்ட வேலைக்காரி, ‘இனிமே ஒன் சங்காத்தமே வாணாம்மா.. நாங்க வயித்துக்கு இல்லேன்னாலும் ஈனப் பொழப்புப் பொழக்கிறவங்க இல்லÕ என்று தூற்றி வாரிப் பேசியது மனதை என்னவோ செய்தது. ‘தன் கணவன் இப்படியா?Õ என்று குறுகிப் போய் இருந்தவளை மேலும் குறுக்கின கணவனின் வார்த்தைகள்.

‘‘வசு.. என்னை மன்னிச்சிடும்மா.. ஒரேடியா எல்லாத்தையும் சொல்லிடுறேன்’’ என்று ஆரம்பித்தபோதுகூட இப்படியான விஷயங்கள் அவர் வாயிலிருந்து வரும் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.

‘‘நான்.. ரெண்டு மூணு தடவ சிவப்பு விளக்குப் பகுதிக்குக்கூடப் போய்ட்டு வந்தேன் வசு..’’ என்று அவர் சொல்லி முடித்தபோது வசுமதிக்குத் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா என்கிற சந்தேகம் வந்தது. ஆத்திரம், அழுகை, கோபம் எல்லாம் முடிந்து யோசித்துப் பார்த்தபோது ‘இது சாதாரணமாக விடக்கூடிய விஷயமில்லை’ என்பது புரிந்தது.

‘‘உடனடியாக என்னிடம் வந்தார்கள்’’ என்று தொடங்கினார் டாக்டர் நாராயண ரெட்டி.

‘‘ ‘இவருக்கு கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர்’ என்றுதான் அந்த அம்மா கேட்டார்கள். ஆனால், கவுன்சிலிங் தேவைப்பட்டது அந்த அம்மாவுக்குத்தான். மெனோபாஸை அடைந்திருந்த அவருக்கு தாம்பத்திய உறவு பெரும் வலி தரும் விஷயமாக மாறிவிட்டது. காரணம்.. பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவம் சுரக்காமல் போனதுதான். பயத்தில் அந்த அம்மா தன் கணவரை நெருங்கவே விடவில்லை. அதன் விளைவுதான் இது. குறைந்தபட்சம் தன் கணவருடன் இந்தப் பிரச்னைகளை அவர் பகிர்ந்து கொண்டிருந் தால்கூட, அவருக்குப் புரிந்திருக்கும். இவர் காரணமே சொல்லாமல் நெருங்கவும் விடாமல் முரண்டு பிடிக்கவும் தான் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறார்.

தான் மாதவிலக்கு நிற்கிற நிலையில் இருப்பதைச் சொன் னால், எங்கே தன்னைக் கணவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்கிற பயம் தான் பகிர்ந்து கொள்ளாததற்குக் காரணம். பிறகு, அவர்கள் இருவருக்குமே கவுன்சிலிங் செய்து, ஹெச்.ஆர்.டி. (ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி) பற்றிச் சொல்லி, சிகிச்சையும் எடுத்த பிறகு இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்’’ என்றார்.

ÔÔஇந்தச் சமயத்தில் தாம்பத்தியம் தொடர்பான என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?ÕÕ என்று கேட்டோம்.

ÔÔமனரீதியான, உடல்ரீதியான என்று இரண்டு வித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, செக்ஸ் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். சிலருக்கு நார்மலாக இருந்த காலகட்டத்திலேயே செக்ஸ் மேல் பெரிய ஆர்வம் இருந்திருக்காது. அதற்கு அவருடைய கணவர்தான் முக்கியக் காரணம். ‘ஃபோர்ப்ளே’ எனப்படுகிற தாம்பத்தியத்துக்கு முந்தின விளையாட்டுக்கள் பற்றியெல்லாம் தெரியாமல் தாம்பத்திய சுகம் பற்றிய உணர்வே இல்லாமல் இத்தனை காலமும் அதை ஒரு சுமையாகவும் வலியாகவும் பயம் தரக்கூடிய நிகழ்வாகவுமே நினைத்தவர்கள் இப்போது மிகப் பெரிய விடுதலையை அடைந்து விட்டதாகவே நினைப்பார்கள். ‘இனி, கணவரிடம் சொல்வதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது’ என்று சந்தோஷப்படுவார்கள். இவர்கள் தாம்பத்தியத்தை மன ரீதியான சந்தோஷமாகவே உணரவே முடியாமல் போனவர்கள். இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து இனியும்கூட சந்தோஷத்தை உணரச் செய்ய முடியும்.

இன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல வருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தி யம் இருப்பதால் போரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். வருடம் ஒருமுறை வெளியூருக்குப் போவது, விதம்விதமான ஃபோர்ப்ளேயில் ஈடுபடுவது, உறவுக்கான பொசிஷன்களை மாற்றுவது போன்றவை இவர்களை கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில் வைத்திருக்கும்.

இனி, உடல்ரீதியான பிரச்னை களைப் பார்க்கலாம். முதலாவது, வெஜைனிஸ்மஸ்.

பெண்ணுறுப்பு வறண்டு போனதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று பயங்கர வலி இருந்திருக் கும் இவர்களுக்கு. இரண்டாவது முறை அப்படி வலித்து விடுமோ என்கிற பயத்தில் பெண்ணுறுப்பின் சதையைக் கையால் இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள் இவர்கள். இதனால், உறவு சாத்தியமற்றுப் போய் விடும். கை வலி, கால் வலி என்றால் மருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் முதலிலேயே மருத்துவரிடம் போயிருந்தால் மருந்து கொடுத்திருப்பார். சரியாகியிருக்கும்.

இரண்டாவது, ஆர்காஸ்மிக் டிஸ்ஃபங்ஷன் எனப்படுகிற பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஏற்படுவது. இவர்களுக்கு ஹெச்.ஆர்.டி. தர வேண்டும். கூடவே பெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ வேண்டும். சிலர், தாங்களாகவே விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவுவார்கள். இது ரொம்பத் தப்பு. ஏற்கனவே இருக்கிற பிரச்னை போதாதென்று புதிதாக இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தி விடும் இந்த சுய மருத்துவம்.

மூன்றாவது, உடல்நலமில்லாததால் ஏற்படுகிற ஈடுபாட்டின்மை. ஏற்கெனவே, உடல் வலி, மூட்டு வலி என்று சிரமப்படுகிறவர்களுக்கு மனதில் ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு, நினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்துக்கானதல்ல.சொல்லப் போனால், மெனோபாஸ§க்குப் பிறகுமுன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு. வாக் போவது,யோகா செய்வது, சரிவிகித உணவு சாப்பிடுவது, எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடலுக்கு முக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது இவற்றைத் தொடர்ந்து செய்தாலே கடைசி வரையிலும் இயல்பான சந்தோஷமான தாம்பத்தியம் எல்லாருக்குமே சாத்தியம்தான்ÕÕ என்றார் டாக்டர் நாராயணரெட்டி.

இதயத்துக்கு இதமானது எது?

‘‘‘இந்த உலகத்தில் அம்மாவின் இதயத்தை விட இனிமையானது எதுவுமே இல்லை’ என்பார்கள். அம்மாதான் மொத்தக் குடும்பத்தையும் பாதுகாப்பவர். அவருடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.

இந்த அம்மாக்கள்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்றால்.. பிள்ளைகள் அவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது. தன்னுடைய உடம்புக்கு ஏதேனும் வந்தால் வற்புறுத்தி, வலியுறுத்தி மிரட்டியாவது மருத்துவரிடம் அழைத்துப் போகும் அம்மாவை அதே முறையில் ரெகுலர் செக்கப்புகளுக்கு அழைத்துச் செல் வது ஒவ்வொரு பிள்ளையின் கடமை’’ என்கிறார் டாக்டர் ஆஷா குருமூர்த்தி.

‘‘மாதவிலக்கு ஏற்படும் காலகட்டங்களில் பெண் களாகிய நாம் கிட்டத்தட்ட எல்லாவிதமான இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுகிறோம். அந்த வகையில் மெனோபாஸ் சற்று சிக்கலான பருவம்தான்.

சரியாக, மெனோபாஸை அடைந்ததும் இதயநோய் ஏற்பட ஆணுக்கு இருக்கிற அதே அளவு ரிஸ்க்.. சமயத்தில் ஆணை விடவும் இரண்டு மடங்கு ரிஸ்க் நமக்கு இருக்கிறது. திடீரென்று ஹார்மோன்கள் சுரக்காமல் போவதுதான் இதன் காரணம்ÕÕ என்கிறார் டாக்டர் ஆஷா.

‘‘நம் உடலில் சுரக்கின்ற விசேஷ ஹார்மோன்கள்தான் நம்மை ஆணை விடவும் வலிமை மிக்கவர்களாக வைத்திருக்கின்றன. அவர்களை விடவும் வலி தாங்குகிறோம். வீடு, அலுவலகம் என்று இரண்டையும் அநாயாச மாகக் கையாளுகிறோம். ஆனால், இதிலும் ஒரு விநோதம் இருக்கிறது. இயற்கையாக இந்த ஹார்மோன்கள் சுரக்கும்போது அவை இதயநோயைத் தள்ளி வைக்கின்றன. செயற்கை யாக இவை தரப்படும்போது இவையே இதயநோயை வரவைக்கின்றன.

கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.கர்ப்பத் தடைக்கு,மாதவிலக்கைத் தள்ளிப்போடுவதற்கு என்று ஹார்மோன் மாத்திரை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

மாதவிலக்கு வரும் காலத்தில் இந்த விஷயங்களில் கவனம் தேவை. சும்மா எதற்கெடுத்தாலும் மாதவிலக்கைத் தள்ளிப்போட ஹார்மோன் மாத்திரை சாப்பிடக் கூடாது. அதேபோல, கர்ப்பத் தடைக்கும் மாத்திரை தவிர்த்து மற்ற வழிகளை முயற்சிக்கலாம்.

மெனோபாஸ் சமயத்தில்தான் முன்பு எடுத்த ஹார்மோன் மாத்திரைகளின் தாக்கம் தெரியும். அப்படியெனில், ‘மெனோபாஸ§க் குப் பிறகு, ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி’ எடுப்பதும் இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமா?’ என்றொரு கேள்வி உங்களுக்கு எழும்.

இல்லவே இல்லை. ஹெச். ஆர்.டி. இதய நோயைத் தள்ளிப் போடும்.

‘என்னங்க.. டாக்டர் குழப்புறீங்களே..’ என்கிறீர்களா? முன்பு எடுத்தது ஏற்கெனவே இருக்கிற ஹார் மோனுடன் கூடுதலாக. இப்போது எடுப்பது இல்லாத ஹார்மோனை ஈடுசெய்ய.

ஹார்மோன் இல்லாததால்தான் இதயநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஈடுசெய்வதால் அந்த வாய்ப்புக் குறைகிறது. வெளி நாட்டவர்கள் மெனோபாஸ் நிலையில் பதறியடித்துப் போய் ஹெச்.ஆர்.டி. சிகிச்சைக்கு ஓடுவது இளமைத் தோற்றம் தர மட்டுமல்ல. இதயநோயைத் துரத்தவும்தான்.

இதயநோயைத் துரத்த வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

தினம் தினம் கண்டிப்பாக 15 நிமிடமாவது நடக்க வேண்டும். வெளியில் போய் நடக்க சங்கடமெனில் வீட்டிலேயே ‘ட்ரெட் மில்’ வாங்கி வைத்து நடக்கலாம். சாப்பாட்டு முறையையே மாற்ற வேண்டும். ‘முன்னே சாப்பிட்ட அதே அளவுதான் இப்பவும் சாப்பிடுறேன். திடீர்னு ஏன் குண்டானேன்?Õ என்பார்கள் சிலர். முன்பு செரித்த அளவுக்கு இப்போது செரிப்பதில்லை என்பதுதான் காரணம்.

சுலபமாக செரிக்கக்கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்குப் போவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் மூழ்கடிக்கப்பட்டு, பொரித்தெடுக் கப்பட்ட ஐட்டங்களை மறக்க வேண்டும்.

அப்புறம்.. மிக முக்கியமானது டென்ஷனுக்கு பை சொல்ல வேண்டும். இந்தச் சமயத்தில் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிதாகக் கோபம் வரும். பிபி எகிறும். இதைக் கட்டுப்படுத்த, யோகா, மெடிட்டேஷன் செய்ய லாம். இவை மனதுக்கு அமைதி தருகின்றன. எக்கச்சக்கமாகத் துடிக்கிற இதயத்தை ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோப்பாÕ என்று கட்டுப்படுத்துகின்றன இவை.

‘சரி.. இதயத்தில் பிரச்னை ஏற்பட்டால்தான் என்ன? இப்போதெல்லாம் பைபாஸ் சர்ஜரி என்பது மிகச் சாதாரண விஷயமாகி விட்டதே’ என்கிறீர்களா?

அது ஆண்களுக்கு. இயல்பாகவே அவர்களுக்கு பைபாஸ் செய்யப்படுகிற ரத்த நாளம் பலமாக இருக்கிறது. பெண்களுக்கு இது ரொம்ப வீக். இதனால், பைபாஸ் ஆண்களுக்கு ரொம்பச் சாதாரணமாகி விட்டாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அது இன்னமும் சற்று சீரியஸ் ரகம்தான். வரும்முன் காப்பது எப்போதுமே நல்லது. அதிலும், பெண்களின் இதய விஷயத்தில் ரொம்ப ரொம்ப நல்லது’’ என்கிறார் டாக்டர் ஆஷா.

வரும்முன் காப்போம்!

‘‘மாதவிலக்கு முற்றிலும் நின்றுபோன பிறகு திடீரென்று ஒரு வருடம் கழித்து ரத்தப்போக்கு இருந்தால், அது கேன்சர் முற்றிய நிலையாக இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். அதனால்தான் மெனோபாஸ் நிலையில் சில பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம்’’ என்கிறார் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா.

மேமோக்ராஃபி, வெஜினல் அல்ட்ராசவுண்ட் எனப்படுகிற பிறப்புறுப்பில் ஸ்கேன் செய்வது, பாப்ஸ்மெர் டெஸ்ட்.. இந்த மூன்றும் அத்தியாவசியப் பரிசோதனைகள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேமோக்ராஃபி, மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்று பார்ப்பதற்கான பரிசோதனை. வருஷா வருஷம் ஒரே சென்டரில் இதைச் செய்ய வேண்டியதும் ஒவ்வொரு வருடத்துக்கான ரிசல்ட்டுகளையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

இது தவிர, மார்பகங்களில் கட்டி இருக்கிறதா என்று பார்க்கிற சுய பரிசோதனையையும் தவறாமல் மாதாமாதம் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது பரிசோதனை வெஜினல் அல்ட்ராசவுண்ட். இது எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

கர்ப்பப்பையின் உள்ளே இருக்கிற எண்டோமெட்ரியம்தான் மாதவிலக்காக வெளிப்படுகிறது. மெனோபாஸ§க்குப் பிறகு இந்த எண்டோமெட்ரியம் வளர்வதில்லை. மாதவிலக்கும் ஆவதில்லை. இது நார்மல்.

சிலருக்கு, மெனோபாஸ§க்குப் பிறகும் இந்த எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சி இருக்கும். ஆனால், மாதவிலக்கு ஏற்படாது. இப்படி வளர்ச்சியடைகிற எண்டோமெட்ரியம், எண்டோமெட்ரியல் கேன்சராக மாறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

இந்த வளர்ச்சியை டக்கென்று காட்டிக் கொடுத்து விடும் வெஜினல் அல்ட்ராசவுண்ட்.

இந்த வளர்ச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் எண்டோமெட்ரியத்திலிருந்து கொஞ்சம் வெட்டி எடுத்து பயாப்ஸிக்கு அனுப்புவார்கள்.. கேன்சராக இருக்குமோ என்று பார்க்க. கேன்சராக இல்லாவிட்டாலும்கூட, இதை அகற்றி விடுவதும் தொடர்ந்து சிகிச்சை எடுப்பதும் அவசிய மானது.

அடுத்தது பாப்ஸ்மெர் டெஸ்ட்.

இதில் பிரமாதமான விஷயம் என்ன தெரியுமா? கேன்சரை மிக மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதுதான். இதனால் கேன்சரை முற்றிலும் குணப்படுத்துவதும் சுலபம். முப்பதாவது வயதிலிருந்தே இந்த டெஸ்ட்டை செய்து பார்க்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இந்த மெனோபாஸ் நிலையிலாவது செய்வது மிக மிக அவசியம்.

இன்னொரு முக்கியமான விஷயம்.. ஹெச்.ஆர்.டி. எடுக்கிறவர்கள் கேன்சர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கேன்சர் வருவதற்கான சாத்தியம் உண்டு. அதற்காக, ஹெச்.ஆர்.டி. எடுக்கவே கூடாது என்று அர்த்தமில்லை. நம் ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஐம்பது வயதில் எடுக்கிற ஹெச்.ஆர்.டி. மாத்திரைகளை அடுத்த ஐந்து வருடங்களுக்கு டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிடுவார் கள். இதுதான் தவறு. ஆறு மாதங்களுக்கொருமுறை டாக்டரை சந்தித்து அவர் அனுமதியுடன் எடுத்தால் ஒரு பிரச்னையு மில்லை.

கூடாகும் எலும்பு!

மெனோபாஸ் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பெரிமெனோபாஸ் நிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக ‘ஆஸ்டியோபொராஸிஸ்’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘‘நமது உடலில் இரும்புபோல உறுதியாக இருக்கும் எலும்புகள் உறுதியிழந்து பேப்பர் சுருள் போல மாற ஆரம்பிப்பதுதான் ஆஸ்டியோபொராஸிஸ்’’ என்கிறார் டாக்டர். சௌந்தரபாண்டியன்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் அழுத்தமாகக் கையூன்றி எழுந்தாலே மணிக்கட்டு எலும்புகள் முறிந்துவிட வாய்ப்பு உண்டு. அவ்வளவு ஏன்? ஆட்டோவில் சென்றால் அதன் குலுக்கலிலேயே இடுப்பு எலும்பும் முதுகெலும்பும் முறிந்துவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆண்களுக்கும் வரும் என்றாலும் இது பெண்களைத்தான் அதிகமாகக் குறிவைத்துத் தாக்குகிறது. அதிலும் குறிப்பாக, மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட நால்வரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆஸ்டியோபொரோஸிஸ் பற்றி இங்கே விரிவாக விளக்குகிறார் டாக்டர் சௌந்தர பாண்டியன்.

‘‘நம் உடல் எலும்பு தேனடை மாதிரியான ஒரு அமைப்பில் இருக்கிறது. புரோட்டினால் ஆன தேனடை என்று சொல்லலாம். தேனீக்கள் தேனடையின் ஒவ்வொரு இடைவெளியிலும் தேனை சேகரித்து வைப்பதுபோல நம் உடம்பில் சேர்கிற மொத்த கால்சியமும் இந்த புரோட்டீன் தேனடையின் இடைவெளியில்தான் சேகரித்து வைக்கப்படுகிறது. அங்கு கால்சியம் சேர்ந்திருக்கும்போது எலும்பு உறுதியாக இருக்கும். அந்த கால்சியம் நம் உடம்பின் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கும்போது எலும்பில் இருக்கும் கால்சியம் மெதுமெதுவாகக் குறைந்து உள்ளே வெறும் கூடாக எலும்பு மாறிப் போகிறது.. அதனால்தான் சின்ன அதிர்வு என்றால்கூட அத்தனை பாதிப்பு.

இந்த ஆஸ்டியோபொரோஸிஸ் இளமையில் வருவதில்லை. காரணம், குழந்தை வளரும்போது அதன் எலும்பில் கால்சியம் அதிகமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது உடல் தேவைக்காக கால்சியம் ரத்தத்தில் கலந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் திரும்பவும் எலும்புகளை அடைந்து அதன் உறுதியை ஈடுகட்டிவிடும். முப்பத்தைந்து வயதிற்குப் பிறகுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன.

ஏனென்றால், அதன்பிறகுதான் நாம் உணவாக எடுத்துகொள்ளும் கால்சியத்தின் அளவு மெதுவாகக் குறைகிறது. இன்னொரு பக்கம் கால்சியத்தை எலும்பில் சேர்த்து வைக்க உதவும் ஹார்மோன்களின் சுரப்பும் குறைய ஆரம்பிக்கிறது. அதனால் இந்தப் பிரச்னை இன்னும் கொஞ்சம் பெரிதாகிறது. வயதானவர்கள் கூன் போட்டு நடப்பது இதனால்தான். முதுகுத்தண்டு எலும்புகள் வலுவிழந்து கொஞ்சம் கொஞ்ச மாக நுனியிலிருந்து நொறுங்கிக் கொண்டே வருகின்றன.

மெனோபாஸான பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக வரும். வயதாக ஆக இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். அதிலும் சில பெண்களுக்கு ஏற்கெனவே எலும்பு மென்மையாக இருக்கும். எலும்பு தன் எடையை இழக்கும்போது இன்னும் மென்மையாகி வலுவிழந்து விடும்.

அதற்காக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகம் என்று அர்த்தமல்ல. ஒல்லி எலும்பு உள்ளவர்கள், பார்க்க பருமனாகவும் இருக்கலாம். உடல் தோற்றத்தை வைத்து கணிக்க முடியாது. எக்ஸ்ரேயின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும்.

ஆஸ்டியோபொராஸிஸ் தாக்குதலுக்கு உள்ளாக சந்தர்ப்பம் இருக்கும் அடுத்த ரகத்தினர், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையுடன் ஓவரியையும் எடுத்த இளம் பெண்கள். பொதுவாக, கர்ப்பப்பை நீக்கும்போது ஓவரியை எடுக்க மாட்டார்கள். காரணம், ஓவரியிலிருந்து தான் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் இரண்டும் சுரக்கின்றன. ஓவரியை எடுப்பதன் மூலம் அந்த ஹார்மோன்களின் சுரப்பு தடுக்கப்படுகிறது.

இயல்பாகவே இந்த ஹார்மோன்கள் குறைவாகச் சுரக்கும் பெண்களும்கூட (மாதவிலக்கு மூன்று மாதம் ஆறுமாதம் என்று விட்டுவிட்டு வரும் பெண்கள்) இந்த நோயின் பிடிக்குச் சுலபமாக ஆளாகிறார்கள். பாட்டியோ, அம்மாவோ இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவில் தேவையான கால்சியம் சேர்க்காதவர்கள், வெயிலுக்கே முகம் காட்டாதவர்கள், சாதாரண உடற் பயிற்சிகூட இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு.

இந்த நோய் தாக்குவது பெரும்பாலும் மெனோபாஸ§க்கு பிறகுதான் என்பதால், எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த வயதில் எலும்புகள் திரும்ப ஒன்று சேர்வது கடினம். இளம் வயதில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருப்பவர்களைவிட, இவர்கள் இன்னும் சீக்கிரமே படுக்கையைவிட்டு எழுந்து நடமாட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், நோயின் தீவிரம் அதிகமாகும். எந்த அளவுக்கு உடல் ஆக்டிவாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஆஸ்டியோபொரோஸிஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

இதை வர விடாமல் தடுக்க, கால்சியம், புரோட்டீன் கலந்த உணவுகளைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். மெனோபாஸான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 1500 மி.லி கிராம் கால்சியம் தேவை.

விட்டமின் டி ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு தினமும் மாலை நேரத்தில் வெயில் உடம்பில் படுமாறு ஒரு வாக் போய் வாருங்கள்.

உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலும் எலும்பும் வலுவேறும். சைக்கிள் ஓட்டுவது, பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளை யாட்டுக்களும் எலும்பின் அடர்த்திக்கு உரம் சேர்க்கும். கால்சிடோனின் என்ற ஹார்மோன் எலும்பின் அடர்த்திக்கு உதவுகிறது. இது ஊசியாகவும் மூக்கினால் உறிஞ்சக்கூடிய வகையில் மருந்தாகவும் கிடைக்கிறது.

எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி ஆஸ்டியோபொரோஸிஸ் வந்தேவிட்டால், கால்சியம், புரோட்டீன் நிறைந்த சாப்பாடு, உடற்பயிற்சி, மாலை வெயில் என்று அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் என்ற சூழ்நிலையில் கால்சியம் மாத்திரைகளையும் விட்டமின் டி மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையோடு சாப்பிடலாம்.

இதுதவிர, ஈஸ்ட்ரோஜென் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியையும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவென்றே இருக்கிற சிறப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நோய் வருவதற்கு முன்பே கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்டால், முடியும். செலவு கம்மியான சுலபமான விஷயம் இது. எக்ஸ்ரே மூலம் எலும்பின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று எலும்பு நோய் சிகிச்சை நிபுணரால் ஓரளவு கண்டுபிடிக்க முடியும். அதில் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் டெக்ஸா (DEXA) எனப்படுகிற ஒருவகை சிறப்பு டெஸ்ட் செய்து தெரிந்து கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்டு, சி.டி.ஸ்கேன் போன்றவற்றாலும் இந்த நோயை கண்டுபிடிக்க முடியும். இந்தப் பரிசோதனை முறைகள் வலியோ பக்க விளைவுகளோ இல்லாதவை.எதிர்காலத்தில் ஆஸ்டியோ பொரோஸிஸ் தாக்கும் வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை துல்லியமாககணித்துச் சொல்பவை.

மெனோபாஸ§க்குப் பிறகு இவற்றை வருடம் ஒருமுறை செய்து வந்தால் ‘ஆஸ்டியோபொராஸிஸா அப்படினா?!’ என்று கேட்கலாம்..”

உணவே மருந்து!

கால்சியம் இல்லாததால் என்னென்ன பிரச்னைகள் என்று பார்த்தோம்.

‘‘சரியான உணவுப் பழக்கம் இருந்தாலே எந்தப் பிரச்னையும் வராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.

‘பெரிமெனோ பாஸ்’ சமயத்தில் இருந்தே தினமும் உணவில் 600 மில்லிலிட்டர் தயிர் சேர்த்து வர வேண்டும். பாலை விடவும் தயிரில்தான் அதிக கால்சியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலால் ஆன தயிர்தான் சேர்க்க வேண்டும். அல்லது, தயிரில் உள்ள கொழுப்பு, எலும்பின் மேல் எடையாகச் சேரத் தொடங்கி வேறு பிரச்னைகளில் கொண்டு போய் விட்டுவிடும். தயிருடன் பாலும் ஒருநாளுக்கு 300 மில்லி சேர்க்க வேண்டும். இதோடுகூட, சீஸ், பனீர், பால்கோவா, நெல்லிக்காய் போன்றவையும் சாப்பிடலாம்.

எள் நிறையச் சேர்க்கலாம். வெள்ளை, கறுப்பு இரண்டு எள்ளிலுமே கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. கறுப்பு, வெள்ளை எள் இரண்டையும் சம அளவு கலந்து பொடி செய்து தினமும் மதிய, இரவு உணவின்போது ஒரு டீஸ்பூன் சேர்த்து வந்தால் ஹார்மோன்களால் உடல் இழக்கிற சத்துக்களை இது ஈடு செய்யும்.

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, கொழுப்புச் சத்து இருக்கிறவர்களும் எள் சாப்பிடலாம். இதில் இருப்பது ஈ.எஸ்.ஏ. எனப்படுகிற எஸன்ஷியல் ஃபேட்டி ஆசிட்தான்.

பச்சைக் காய்கறிகளும் பழங்களும் எக்கச்சக்கம் சேர்க்க வேண்டும். அளவோடு சோயா சேர்க்கலாம். இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைவை ஈடுசெய்யும். கைக்குத்தல் அரிசி மற்றும் முழு கோதுமை மாவாலான உணவைச் சாப்பிடுங்கள்.

பூசணி,வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றின் விதைகளையும் உணவில் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ இருக்கிற டானிக்கு கள், மீன் சேர்க்க வேண்டும்.

வெற்றிலை, பாக்கு போடுவதின் மூலம் சுலபமாக கால்சியம் கிடைக்கும்.

அடுத்தது வாக்கிங்! தொண்ணூறு சதவிகித வியாதிகளை அண்டவே விடுவதில்லை வாக்கிங்! ‘நானெல்லாம் வீட்டிலேயே அங்கயும் இங்கயுமா நடந்துட்டேதான் இருக்கேன்..’ என்று சொல்கிறவரா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. ஒரு நாளுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் அடிகள் மிக வேகமாக நடப்பதுதான் சரியான பயிற்சி. இப்போது யோசியுங்கள்.. வீட்டுக்குள் நீங்கள் எத்தனை அடிகள் நடக்கிறீர்கள்? நடக்க ஆரம்பியுங்கள். சந்தோஷ மாக, அமைதியாக, சிரித்த முகத்துடன் மெனோபாஸை வரவேற்கும் உற்சாகத்தை அந்த நடையும் நீங்கள் சாப்பிடுகிற உணவும் தரும்.

தொகுப்பு: தயாமலர், ஜி.கோமளா
nantri-avalvikatan

Donnerstag, Juli 08, 2004

நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

சித்த மருத்துவர் ஜமுனா.

திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தைப்பேறு. நமது நாட்டைப் பொறுத்தவரை 75 சதவீத தம்பதிகளே திருமணமான முதல் ஆண்டில் குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இரு ஆண்டிற்குள் 85 சதவீத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பொதுவாக பெண்கள் 21 வயதிலிருந்து 27 வயதுக்குள் குழந்தைப் பெற்றுக் கொள்வது தாய்க்கு ஆரோக்கியம். இந்த வயதில் இருக்கும் பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியில் பாதிப்பு இருக்காது. இந்த வயதுக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஓராண்டு முன்னே பின்னே இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது.

சமீபகாலமாக திருமணமான வேலை பார்க்கும் பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப் போடுவதைப் பார்க்க முடிகிறது. 20,21 வயதில் திருமணமான பெண்கள் இப்படி குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம். ஆனால் 30,35 வயதில் திருமணம் செய்து கொண்டு, நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது காலகாலமாய் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும். ஏனெனில் வயது கூடக் கூட சிறிய குறைபாடுகள் கூட பெரிய குறைபாடுகளாக மாறக் கூடும். பெண்களென்றால் சினை முட்டை உற்பத்தி குறைந்து விடும். ஆண்களென்றால் உயிரணுக்களின் உயிரோட்ட வேகம் குறைந்து விடும். முப்பது வயதில் கல்யாணம் செய்து கொண்டவர்கள் இயற்கையாகவே குழந்தைப்பேறு நமக்கு இருக்கும் என்று மூன்று, நான்கு வருடங்கள் காத்திருக்கக் கூடாது. காலம் தாழ்த்திய அல்லது பருவம் கடந்த திருமணம் என்றால் ஆண், பெண் இருவருமே உரிய மருத்துவ சோதனை செய்து கொள்வது பின்னால் சில பிரச்சனைகள் வராது தடுக்க உதவும். திருமணத்திற்கு முன் தெரிந்தோ, தெரியாமலோ முறையற்ற உறவுகளில் ஈடுபட்டிருந்தால் பால்வினை நோய்கள் தாக்கம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் உயிரணு எண்ணிக்கையை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள் ஏதேனும் குறைகள் இருப்பதை நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே, இல்லறத்தில் ஈடுபட வேண்டும் அப்போது தான் இனிய மணவாழ்க்கை அமையும்.

நாகரிகம் என்ற பெயரிலும் பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற பெயரிலும், திருமணத்திற்கு முன்பே ஆண்களுடன் "டேட்டிங்" வைத்துக் கொள்ளல் மற்றும் பிற ஆண்களுடன் உறவு ஏதேனும் வைத்திருந்தால் பால்வினை நோயின் தாக்கம் இருக்கிறதா என்று பெண்கள் சோதனை செய்து கண்டறிந்து கொள்வது நல்லது. இன்னமும் சொல்லப்போனால், எந்தத் தவறும் செய்யாத ஆணும், பெண்ணும் கூட, திருமணத்திற்கு முன் உயிரணு சோதனை, கருக்குழாய் சோதனை ஆகியவைகளைச் செய்து கொள்வது நல்லது.

அண்மைக் காலமாக பல பெண்கள் என்னிடம் வந்து "டாக்டர் என் பெற்றோரை எனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லுங்கள்" என்று சொன்னபோது உள்ளபடியே உடைந்து போகிறேன். ஆனால் பெற்றோர்களைக் கேட்டால் "என் மகள் திருமணம் செய்து வையுங்கள்" என்று கேட்கவில்லையே, இன்னமும் சொல்லப் போனால் திருமணம் வேண்டாம் என்றும், கூறுகிறாரே என்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலையோ ரத்தத்தைக் கொதிக்க வைக்கும். சம்பாதிக்கும் தன் மகள் திருமணம் செய்து கொண்டு போய் விட்டால் வருமானம் போய் விடுமே என்ற பயத்தில் பல பெற்றோர்கள் வேலை பார்க்கும் பெண்களின் திருமணப் பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இது மிகவும் கொடுமையான போக்கு. பெண்ணின் கனவுகளை பெற்றோர்களே கருக்கி விடுகிறார்கள். எந்த பெண்ணும் பெற்றோரிடம் வந்து "எனக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று கேட்க மாட்டாள்.

சில குடும்பங்களில் உரிய வயது கடந்தும், ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் இருக்கிறார்கள். "அவனது தங்கைக்கு திருமணம் முடித்த பிறகே அவனுக்கு திருமணம்" என்று முடிவெடுதது விடுவார்கள். இதன் விளைவு ஆண்கள் தங்கள் ஆசைகளை தவறான வழிகளில் சென்று நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக எய்ட்ஸ் போன்ற பயங்கர நோய்க்கும் ஆளாகிறார்கள்.

குறித்த வயதில் திருமணம் ஆகவில்லையென்றால் பொருளாதார பிரச்சனைகள், தாம்பத்ய வாழ்வில் நாட்டம் குறைவு, பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்ற விபரீதங்கள் நிகழ்ந்து விட வாய்ப்புண்டு. கணவன்-மனைவிக்கிடையே தாழ்வு மனப்பான்மை தோன்றி கருத்தொருமித்த மணவாழ்க்கை அமையாமல் போய்விடக்கூடும்.

மனைவி வேலைக்கு போக வேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களின் எதிர்ப்பார்ப்பு. வேலை பார்க்கும் பெண்களுக்கும், வேலை பார்க்காத பெண்களுக்கும சினை முட்டை கருத்தரிப்பதில் கூட வேறுபாடு இருப்பதை பல்லாண்டு காலமாக நான் கண்டு வருகிறேன். மனசு, உடல், கருமுட்டை சினைப்பு இம்மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என்னிடம் வரும் பெண்களில் வேலை பார்க்காத பெண்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பதில் வெற்றி கிடைப்பது அதிகம். காரணம் எந்த டென்ஷனும் இல்லாமல், மனசு லேசாகி, உடலும் லேசாகி உறவில் ஈடுபடும் போது கருமுட்டை சினைப்பது எளிதாகிறது.

Samstag, Juni 19, 2004

கருவிலே குறையிருந்தால் திருத்திக் கொள்ளலாம்

ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

‘‘மருத்துவத்துறை வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. முன்பெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இப்போது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கிறபோதே என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சைகளை செய்துவிட முடியும். அதற்கு அடிப்படையாக இருப்பது அல்ட்ரா ஸ்கேன் என்கிற கருவி. இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட மிக முக்கியமான சாதனம் எது என்று கேட்டால் அல்ட்ரா ஸ்கேன் என்றுதான் சொல்வேன். அதனால் ஏற்படும் நன்மைகளை நினைத்து நினைத்து தினமும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன் மகப்பேறு மருத்துவர் மட்டுமல்ல. அல்ட்ரா ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் நிபுணர். அல்ட்ரா ஸ்கேன் சாதனத்தினால் ஏற்படும் பலன்கள் பற்றி அவர் விளக்கமாகச் சொல்கிறார்.

‘‘ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்கப் போகிற குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியத்தான் ஸ்கேன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து. குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்வது ஸ்கேன் இயந்திரத்தின் ஒரேயரு செயல்பாடுதான். ஸ்கேனின் மற்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது ஆணா, பெண்ணா என்று அறிவது மிக மிகச் சாதாரண விஷயம்தான்.

கருத்தரித்த பெண்கள் கட்டாயமாக ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று நினைப்பதேயில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

முதலில், ஸ்கேன் செய்து பார்ப்பதையே தேவையில்லாத ஒரு விஷயமாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, பெண்களிடம் ஸ்கேன் சாதனம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை.

வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். சில நாட்களுக்கு முன்பு பிரசவ காலத்தை நெருங்கிவிட்ட ஒரு பெண் என்னிடம் ஸ்கேன் செய்துகொள்ள வந்தார். அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி! கிட்டத்தட்ட ஒன்பது மாதத்தைத் தாண்டிவிட்ட அந்தக் குழந்தை கபாலம் இல்லாமலே வளர்ந்திருந்தது. ‘அனன்கேபாலி’ என்று அதற்குப் பெயர். மண்டையோடு இல்லாமலே வளர்ந்துவிட்ட அந்தக் குழந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தலையில்லாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, தனக்கும் ஒரு அழகான குழந்தை பிறக்கப்போகிறது என்று அந்தத் தாய் எவ்வளவு கனவு கண்டிருப்பாள்? கருத்தரித்த ஒன்பது வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்திருந்தாலே குழந்தையின் நிலை என்ன என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த அளவுக்கு குறைபாடுகளோடு ஒரு குழந்தை வயிற்றில் வளர்வதை விட, கருக்கலைப்புச் செய்திருக்கலாம். ஆனால் ஸ்கேன் செய்து பார்க்காமல் விட்டதன் தவறு, மண்டையோடு இல்லாமல் குழந்தை ஒன்பது மாதங்களுக்கு வளர்ந்துவிட்டது. இந்தக் குழந்தை வெகு நாட்களுக்கு வாழ முடியாது என்பதால் வயிற்றிலேயே இறந்துவிட்டது. எனவே, கஷ்டப்பட்டு சிசேரியன் செய்துதான் அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்தோம். இத்தனை சிரமம் நமக்குத் தேவைதானா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது காரணம், பெரியவர்களின் ஆதரவின்மை. ‘ஸ்கேனெல்லாம் எதற்கு? எங்கள் காலத்தில் நாங்கள் ஸ்கேனெல்லாம் செய்துகொண்டோமா என்ன? அஞ்சாறு குழந்தையை நாங்க பெத்துக்கலையா?’ என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் கேட்கிறார்கள்.

அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிற வாதம் இது. முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது நாம் வாழும் வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. முக்கியமாக, நம்முடைய உணவுமுறை மாறியிருக்கிறது. முன்பு இயற்கையாக விளைந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது பல்வேறு இரசாயனப் பொடிகளைத் தூவி வளர்க்கப்பட்ட காய்கறிகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம். எனவே, அதன் பாதிப்பு வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நிச்சயம் ஏற்படும். இதை நம்முடைய பெரியவர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் காலத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருக்கலாம். அதற்கான மருத்துவ ஆதாரங்கள் இப்போது நம்மிடம் இல்லை என்பதால் அந்தக் காலத்தில் இது போன்ற பிரச்சினை இல்லை என்று சொல்லமுடியாது.

ஸ்கேன் செய்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது. ஸ்கேன் செய்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் பணத்தை வசூல் செய்கிறார்கள். இதில் உள்ள வேறுபாடுகளை கவனிக்கும் மக்கள் ஸ்கேன் சாதனத்தின் மீதே சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். 125 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை ஸ்கேனுக்காக வசூல் செய்கிறார்கள். சிலர் அளவுக்கதிகமாக லாபம் சம்பாதிக்க நினைப்பதால் ஸ்கேன் செய்வதற்கான கட்டணம் அதிகமாகியிருக்கிறது. இதற்காக ஸ்கேன் செய்வதையே வெறுத்தால் அது சரியாக இருக்குமா? எனவே, கருத்தரித்த ஒவ்வொரு பெண்ணும் அவசியம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் அதை அப்போதே சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு மருத்துவமுறை முன்னேறிவிட்டது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்போதே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்போதே செய்துவிடலாம். அல்லது குழந்தை பிறந்த பிறகு செய்யலாம் என்கிற நிலையில் இருந்தால், பிறகு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிடுவோம்.

உதாரணமாக, குழந்தைகளுக்கு அன்னப்பிளவு ஏற்பட்டிருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு ஆறாவது விரல் வளரும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. எனவே, குழந்தை பிறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் வயிற்றுக்குள் இருக்கிறபோதே சில குழந்தைகளுக்கு கடுமையான உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது முக்கியமான உறுப்புகள் வளராமலே போயிருக்கும். அந்தக் குறைகளை வயிற்றுக்குள்ளேயே சரிசெய்தால்தான் குழந்தை பிழைக்கும். இல்லாவிட்டால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடும்.

உதாரணமாக, சில குழந்தைகளுக்கு இருதயத்தில் ஓட்டை விழுந்திருக்கும். இந்த ஓட்டைகளைச் சரி செய்யக் கூடிய அளவுக்கு இருந்தால் உடனே ஆபரேஷன் மூலம் சரி செய்துவிடலாம். அல்ட்ரா ஸ்கேன் கருவின் உதவியோடு தாயின் வயிற்றின் மேலிருந்து கருவிகளைச் செலுத்தி குழந்தையின் இருதயத்தில் நுழைத்து ஆபரேஷன் செய்து விடலாம்.

இன்னும் சில குழந்தைகளுக்கு சிறுநீரில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இந்தக் குறையை அந்த நிலையிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீரைச் சுற்றியுள்ள திசுக்கள் அழுகி, மொத்த சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு, குழந்தை இறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். எனவே, ஸ்கேன் மூலம் குழந்தையின் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பைப் போக்கிவிடுவோம்.

மேற்சொன்ன இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் நம் ஊரிலேயே அடிக்கடி நடக்கும் விஷயங்களாகி விட்டன. ஆனால் வெளிநாட்டில் நடக்கும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு தாயின் ரத்தம் ஒரு பிரிவாகவும், குழந்தையின் ரத்தம் வேறு ஒரு பிரிவாகவும் இருக்கும். இந்தக் குளறுபடியினால் குழந்தையின் உயிர் பிரிவதற்கு வாய்ப்புண்டு. எனவே, குழந்தையின் ரத்தத்தை எடுத்து முதலில் பரிசோதனை செய்கிறார்கள். அதில் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால் குழந்தைகளுக்கே புதிய ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் ஏற்றுவது என்பது வியக்கத்தக்க நிகழ்ச்சிதானே!

மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல குழந்தைகளுக்குக்கூட குளுக்கோஸ் ஏற்றலாம். இதுபோன்று நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களெல்லாம் இப்போது நடந்து வருகிறது.

சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் இருதயத்தையும், வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் முக்கியமான ஜவ்வு இருக்காது. இதனால் குடல் பகுதி இருதயத்துக்கு அருகே சென்று அதை செயலிழக்கச் செய்யும். அல்லது இருதயம், மூளைப் பகுதியை நெருங்கி வந்து அதன் செயல்பாட்டைச் செய்ய மறந்துவிடும். இதனால் குழந்தை உயிருக்கு உடனே ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தைத் தடுக்க குழந்தை பிறந்தவுடன் குடல் பகுதியையும், இருதயப் பகுதியையும் பிரிக்கிற மாதிரி செயற்கையாக ஒரு தடுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது. குழந்தை வயிற்றுக்குள் இருக்கிறபோது இப்படிப்பட்ட பிரச்சினையோடு இருக்கிறது என்பது தெரிந்தால்தானே பிறந்தவுடன் ஆபிரேஷன் செய்யமுடியும்?

முன்பை விட இப்போது உடல் ஊனத்தோடு நிறைய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, காலம் கடந்து திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு உடல் ஊனமுற்ற குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. முன்பு அதிகபட்சமாக இருபத்துநான்கு வயதிற்குள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது பெண்கள் படித்து, வேலைக்குப் போய் செட்டிலான பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட மேலை நாட்டவர்கள் இப்போதெல்லாம் காலக்கிரமத்தில் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள். தப்பித் தவறி காலம் கடந்து திருமணமாகி, பிள்ளைப்பேறு ஏற்பட்டிருந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கிறபோதே ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்திருக்கிறார்கள். தொப்புள் கொடி மூலமாக ரத்தத்தை எடுத்து, அந்த ரத்தத்தில் ஏதும் குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்து அப்போதோ அல்லது குழந்தை பிறந்த உடனேயோ சரி செய்துவிடுகிறார்கள்.

நெருங்கிய உறவில் திருமணம் புரிந்து கொள்வதாலும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, குரலில் குறைபாடுடையவர்கள் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய் கண்ட பெண்கள் கருத்தரித்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, சர்க்கரை நோய் கண்ட பெண்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு அதற்கான மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க வேண்டும் என்பது கட்டாயத்திலும் கட்டாயம். அதேபோல கருத்தரித்த பிறகு அவர்கள் அவசியம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

இத்தனை வளர்ச்சிக்குக் காரணமான அல்ட்ரா ஸ்கேன் மெஷினை மிகச் சிறந்த சாதனம் என்று நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லையே?’’ சிரித்துக் கொண்டே முடித்தார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

சந்திப்பு : ஏ.ஆர். குமார்
nantri- Kumutham

Freitag, Mai 21, 2004

வெள்ளை படுதல்

வெள்ளை படுதல்
எப்படித்தான் தோன்றுகிறது?

எச்சரிக்கையும் தீர்வும்.
சித்த வைத்திய நிபுணர் பார்த்தசாரதி

அந்தப் பெண்மணியை என்னிடம் கொண்டு வந்து நிறுத்தி, அவரின் மகள் கேட்ட முதல் கேள்வி, ‘‘எங்கம்மா உயிர் பிழைப்பாங்களா டாக்டர்?’’ என்பதுதான். கேள்வியால் அதிர்ச்சியுற்ற நான், அந்தப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தேன். ஒட்டடைக்குச்சி போன்று உடல் மெலிந்து காணப்பட்டார். கண்கள் சொருகி மயக்கநிலையில் நின்றுகொண்டிருந்தார். பெட்டில் அவரை படுக்க வைத்துவிட்டு நாடித்துடிப்பை முதலில் பரிசோதித்தேன். ‘என்ன பிரச்னை?’ என்று கேட்டபோது, மகள் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டார். சற்று நேரம் கழித்து அவரே சமாதானமாகி, ‘‘எங்கம்மாவுக்கு ரொம்ப நாளாவே வெள்ளைப்படுற பிரச்னை இருக்கு. கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில காட்டிட்டிருந்தோம். ‘அது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்ல... எல்லாம் சரியாயிடும்’னு அப்பப்போ மருந்து தருவாங்க. நேத்திக்கு என்னடான்னா அம்மா நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. கொண்டுட்டு ஓடினேன். சோதிச்சுப் பார்த்தவங்க, ‘உங்கம்மாவுக்கு வியாதி முத்திப்போச்சு. இனி அவங்க பொழைக்கிறது கஷ்டம்தான்’னு சொல்லி கொண்டு போகச் சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நீங்கதான் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்தணும். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க’’ என்று கூறினார்.

நான் நோயாளியைத் தீவிரமாக பரிசோதிக்கத் தொடங்கினேன். அலோபதி மருத்துவர்கள் கூறியதுபோல் அவருக்கு வெள்ளைபடுதல் முற்றிப்போயிருந்தது. அதாவது வெள்ளைபடுதல் முற்றி, வெட்டை நிலைக்கு அவர் வந்திருந்தார். ஆனால், உரிய சரியான சித்த மருத்துவ சிகிச்சையளித்தால் அவர் பிழைத்துவிடுவார் என்று எனக்குத் தோன்றியது. தாமதமின்றி உடனே சிகிச்சையை ஆரம்பித்தேன்.

சிலாசித்து பற்பத்தை வெண்ணெயுடன் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தேன். தென்னம்பாலை இடித்துச் சாறு பிழிந்து அதனையும் உள்ளுக்குக் கொடுத்தேன். அன்னபேதி செந்து}ரத்தை ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து கொடுத்தேன். துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அவரது பிறப்புறுப்பை சுத்தப்படுத்தி, ஆமணக்கு எண்ணெயில் நனைத்த சிறுபஞ்சை பிறப்புறுப்பில் துணி வைத்துக் கட்டப் பணித்தேன். இதனைத் தொடர்ந்து அன்று முழுக்க எனது கண்காணிப்பிலேயே வைத்திருந்து சிகிச்சை செய்தேன். மறுநாள் அவரை வீட்டுக்கு அனுப்பி, சிலாசித்து பற்பத்தை காலை, மதியம், இரவு என மூன்று மாதங்களும், தென்னம்பாலைச் சாறு வாரம் ஒரு குவளை, தினமும் இரண்டு இளநீர் என மூன்று மாதங்களும், ஆமணக்கு எண்ணெயில் சிறுபஞ்சை நனைத்து மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பிறப்புறுப்பில் துணிவைத்துத் தொடர்ந்து கட்டி வருமாறும், அன்னபேதி செந்து}ரத்தை காலை, மாலை ஒரு சிட்டிகை தேனுடன் மூன்று மாதங்களும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன். கூடவே, உடலுக்கு சூடு தரக்கூடிய உணவை தவிர்த்து குளிர்ச்சி தரும் உணவு முறையைக் கையாளுமாறு கூறினேன்.

அடுத்த ஒருவாரத்தில் அந்தப் பெண், தனது தாயாருடன் மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். இறந்துவிடுவார் என்று கூறப்பட்ட அந்தப் பெண்மணியிடம் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள். முகத்தில் தெளிவு தெரிந்தது. மகளின் உதவியின்றி மெதுமெதுவாக தானே நடந்து வந்தார். உடல் மெலிவு சற்று சரியாகியிருந்தது. அன்னபேதி செந்து}ரத்தின் விளைவால் உடலில் இரத்த விருத்தி ஏற்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து சிகிச்சையை தொடரச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அடுத்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் நான் க்ளினிக்கில் இருந்தபோது திடீரென்று எனக்கு போன். பேசியது அந்தப் பெண்தான். ‘‘டாக்டர், உங்களைப் பார்க்க வரலாமா? அம்மா உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார்’’ என்று கேட்டார். வரச்சொல்லி காத்திருந்தேன். தனது தாயாருடன் அந்தப் பெண் வந்தார். எனக்கு ஆச்சர்யம். அன்றைக்கு பார்த்தவர்தானா இந்தப் பெண்மணி என்று. நல்ல மாற்றங்களுடன் நிறைவான பெண்மணியாகக் காட்சியளித்தார். ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்றேன். ‘‘எனது உடல் சூடு முற்றிலும் தணிந்துவிட்டது. வெள்ளைப்போக்கும் முழுமையாக நின்றுவிட்டது. நான் உங்களிடம் வந்து சிகிச்சை பெற்றது உட்பட எதுவுமே எனக்கு அந்தளவுக்கு நினைவில் இல்லை. அவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போது உங்களால் பூரணமாக குணமடைந்துவிட்டேன். என்றாலும், மீண்டும் வெள்ளைப்போக்கு என்னைத் தாக்காமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும் டாக்டர்? மேலும் வெள்ளைப்போக்கு பற்றி எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்’’ என்றார். அவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை பாராட்டியபடி வெள்ளைப்போக்கு குறித்து இருவருக்கும் கூற ஆரம்பித்தேன்...


‘‘பொதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... வெள்ளைப்படுதல் என்பது பரம்பரை நோயல்ல... தாய்க்கு வந்தால் மகளுக்கும் வருவதற்கு. அது உஷ்ணம் என்னும் வெட்டைச் சூட்டால் ஏற்படுவது. உங்களுக்கு இருப்பது போலவே உங்கள் மகளுக்கும் சூட்டாு உடம்பாக இயற்கையிலேயே இருந்தால், அவருக்கும் வெள்ளைப்படுதல் வருவதற்கு வாய்ப்புண்டு. மற்றபடி அம்மாவுக்கு, பாட்டிக்கு இருப்பதாலேயே மகளுக்கு வரும் என்பதெல்லாம் இல்லை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்மணியின் மகள் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘‘அப்போ வெள்ளைப்படுறது எப்படித்தான் தோன்றுகிறது டாக்டர்?’’

‘‘பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பி அதிகரித்து விடுவதால் உஷ்ணம் ஏற்பட்டு, கருப்பையின் வாய்ப் பகுதியில் பெண்களுக்குக் கட்டிகள், புண்கள் மற்றும் சதைகள் தோன்றுகின்றன. வெள்ளைப்படுதல் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாகிறது. கருப்பையில் ஏற்படும் பால்வினை நோய்க் கிருமிகளின் தொற்று, கருப்பை இடம் விட்டு இடம் மாறல், இரத்தக் குறைவு, கருப்பை பலவீனம், வீக்கம், முறையற்ற புணர்ச்சி முறையால் கருப்பை தாபிதம், அடிக்கடி பிள்ளைப்பேறு, மனக்கவலை, கடின வேலை, மிகுதியான உடலுறவு போன்றவைகளினால் கூட பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்பட்டு பெரும் வேதனை தருகிறது.

சினைப்பையிலிருந்து சினை முட்டை கருப்பை நோக்கிப் போகும்போதும் உடலுறவின் உச்ச நேரத்திலும்கூட இந்த வெள்ளைப்படுதல் ஏற்படும். சிலருக்கு மாதவிலக்கிற்கு முன்பாக இது கூடுதலாக இருக்கும். மாதவிலக்கு வருவதற்கான அறிகுறியாக இது தென்படும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த வெள்ளைப்படுதல் நோய் உண்டாகும். மாதவிலக்கு தோன்றி 8 தினங்களுக்குப் பின்புகூட சிலருக்கு இந்நோய் ஏற்படுவதுண்டு.’’

‘‘டாக்டர், வெள்ளைப்படுதலில் வகைகள் உண்டா? எனக்கு ஏற்பட்டது எந்த மாதிரியான வெள்ளைப்போக்கு?’’ என்றார் அந்தப் பெண்மணி.

‘‘வெள்ளைப்படுதலில் பெண்களுக்குப் பெண்கள் வித்தியாசம் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிலருக்கும், பச்சை நிறமாக ரத்தத்துடனும் சிலருக்கு வெள்ளைப்படுதல் வெளியேறும். சிலருக்கு நிணநீருடன் ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் வெளிவரும். உங்களுக்கு ஏற்பட்டது முற்றுவதற்கு முந்தைய நிலை வெள்ளைப்படுதல். இன்னும் கொஞ்ச காலம் கவனிக்காது விட்டிருந்தாலும், அது உங்களை பிறப்புறுப்பு புற்றுநோயில் கொண்டு போய் தள்ளியிருக்கும். வெள்ளைப்படுதலின்போதே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். குறைந்தபட்சம் துர்நாற்றம் ஏற்படும்போதாவது கவனித்தாக வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் மோசமான விளைவுகளை பெண்களிடம் ஏற்படுத்திவிடும். பிறப்புறுப்பின் செல்களை அழிக்கும். கருப்பை உட்பகுதியில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். கருச்சிதைவை உண்டாக்கும். நுண்ணுயிர்த் தாக்குதலை ஏற்படுத்தும். இறுதிக் கட்டத்தில் புற்றுநோயை உண்டாக்கி ஆளையே காலி செய்துவிடும்.’’

இருவரின் முகத்திலும் அதிர்ச்சி தென்பட்டது. பயந்துகொண்டே மகள் கேட்டார். ‘‘வெள்ளைப்படுறது ஒருத்தர்கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவுமா டாக்டர்?’’

‘‘சாதாரணமாகப் பரவாது. ஆனால், வெள்ளைப்படுதல் உள்ள பெண்களின் பேண்ட்டீஸ், பாவாடை போன்றவற்றை அடுத்த பெண்கள் அணிய நேரும்போது அவர்களுக்கு இது தொற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதேபோல், வெள்ளைப்படுதல் உள்ள பெண்ணைப் புணரும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பிடரி ஜன்னி என்னும் நோயால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.’’

பிரமிப்பு விலகாத முகத்தோடு அந்தப் பெண்மணி கேட்டார்... ‘‘வெள்ளைப்படுதலை சித்த வைத்தியத்தின் மூலம் ஆரம்பத்திலேயே எப்படி எளிதாக குணப்படுத்தலாம் டாக்டர்?’’

‘‘இந்நோயை விரட்டுவது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்து மருத்துவம் பார்த்தால் குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால், நம் பெண்கள் வெட்கப்பட்டுக்கொண்டு இப்பிரச்னை குறித்து வெளியே சொல்வதில்லை. முற்றிய பிறகுதான் முனகுகிறார்கள். சித்த மருத்துவத்தில் இதற்கென ஏராள மருந்துகள் உள்ளன. உலர்ந்த மணத்தக்காளி சாறெடுத்து பசும்பாலில் கலந்து குடிக்கலாம். வெள்ளை கல்யாணப் பூசணியை சமைத்துச் சாப்பிடலாம். செம்பருத்தி இலைக் கொழுந்தை பாலில் அரைத்துச் சாப்பிட இந்நோய் விலகும். கருவேலம் கொழுந்தையும் அரைத்துச் சாப்பிடலாம். கொன்றைப் பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தலாம். புளியங்கொட்டை தோலைப் பொடிசெய்து தேன் சேர்த்துப் பருகலாம். இதெல்லாம் வெள்ளைப்படுதலுக்கான எளிய சித்தவைத்திய முறைகள். வெள்ளைப்படுதலின் அளவு, நோயாளியின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு வைத்திய முறைகள் மாறும்’’ என்றேன்.

_திவ்யா
nantry Kumutham

Sonntag, Mai 09, 2004

மாதவிலக்கு... தயங்காம பேசுவோம்..

தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய்...
பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள், பயங்கள்..

மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... இப்படி பல கூடாதுகள்.

கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்!
இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது. இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, 'ஏன்தான் பெண்ணாக பிறந்தோமோ' என்ற சலிப்பு தட்டுகிறது.

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரிய வைக்கும் முயற்சியில்தான் இந்த இணைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அந்த மூன்று நாட்களில் (சிலருக்கு கூடலாம், குறையலாம்) உண்டாகும் அத்தனை பிரச்னைகளை பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி, டாக்டர் தமிழிசை, டாக்டர் சுமதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு A to Z தெளிவு படுத்தி சுலபமான கேள்வி-பதில் வடிவில் வழங்கியிருக்கிறோம்.

கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக் கூட அத்தனை தயங்கும் நாம் எப்படி குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றி புரியவைக்கப் போகிறோம்? நம் உடல் பற்றி, அதன் மாற்றங்கள், இயல்பு, பிரச்னைகள் பற்றி நாம்தான் தயங்காமல் பேசியாக வேண்டும். அதற்கான முதல் முயற்சியாக இதை வைத்துக் கொள்ளலாமே..

படித்துப் பயனடையும் தாய்மார்கள் மறக்காமல் மகளுக்காக இந்த இணைப்பை பத்திரப்படுத்துங்கள்.

பூப்பூக்கும் நேரம்
பூப்பெய்துதல் என்கிற பருவமடையும் கட்டம் எப்படிப்பட்டது? அது எவ்வாறு நிகழ்கிறது?
பூப்பெய்துதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி.
முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. 10-11 வயதில் (இப்போது 9 முதல் 13) இது துவங்கும். ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும். பின்பு உடல் வளர்ச்சியில் வேகம் தென்படும். அந்த வயது பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்தவளாக தெரிவாள். இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிக மாகும். பூசினாற்போல் சதைப் பற்று ஏற்படும். அக்குளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது. அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக மாத விலக்கு நேர்கிறது.

உள்ளே என்ன நடக்கிறது
இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள். உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன?
பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை.
மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியை தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்து வரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பை மீதும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் ஹார்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் முதல் மாத விலக்கு நிகழ்கிறது.

ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம். அதனால் தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாக வராது. இந்த கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம். போகப் போக சரியாகிவிடும்.

ஐந்துக்குள் அம்மா..டி!
இன்ன வயதுக்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா?
18 வயதில்கூட ஏற்படாவிட்டால் டாக்டரை பார்க்க வேண்டும். நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள் கூட உண்டு. அதெல்லாம் அபூர்வம். 7 முதல் 9 வயதுக்குள் பூப்படைதலை 'விரைவுபடுத்தப்பட்ட பூப்பெய்தல்' என்கிறோம். அதிக உடல் வளர்ச்சியால் அல்லது பரம்பரை காரணமாக இது நிகழலாம். மிகச்சிறிய வயதில் பூப்படைந்தாலும் அதிகப்படியான ஹார்மோன் சுரந்தால் மட்டுமே மாதா மாதம் விலக்காக முடியும். சிறு வயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சரியான சைக்கிள் எது? பாதுகாப்பானது எது?
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம்?
அதை சுழற்சி என்போம். சைக்கிள். சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி. சிலருக்கு இரண்டு, மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக வரலாம். அது தப்பில்லை.

இந்த சுழற்சிக்குள் என்னென்ன நடக்கிறது?
அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக் கூடிய, உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எவை என்று எப்படி வகைப்படுத்துவது?
அந்த 28 நாட்களை பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1 முதல் 5 மாதவிலக்கு நாட்கள்.
5 முதல் 10 ஆரம்ப நாட்கள்.
அப்போது ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். கருமுட்டை வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.
10 முதல் 14 நாட்கள்
அதே வளர்ச்சி வேகமாகி 14-ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும். எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.
14 முதல் 28-வது நாள் வரைபின்பகுதி நாட்கள்.
ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். கர்ப்பப்பையின் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாக தென்படும். (ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தை போல!)
கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் அளவும் குறைந்துவிடும்.
தண்ணீரும் உரமும் போட்டபோது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லை யென்றால் கருகுவதுபோல கர்ப்பப்பை யில் வளர்ந்திருக்கும் நடுசதை (Endometrium) சுருங்கி, அந்த சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக் காக வெளிவரும். மறுபடியும் ஐந்து நாள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்,.

லிமிட் என்று உண்டா?
மாதவிலக்கு எத்தனை நாட்கள் நீடிக்கலாம்?
3 முதல் 6 நாட்கள் இருக்கலாம். 3க்கு குறைவாக அல்லது 6க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.

எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை நார்மல் எனலாம்?
சுமார் 50 மில்லி லிட்டர். குறைந்தது 20 அதிகபட்சம் 80 என இந்த அளவும் வேறுபடலாம். அப்போது தினமும் அரை மில்லிகிராம் முதல் ஒரு மி.கி. வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது. உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது.

ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்?
அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் என்றும் கூறலாம்.
கம்ப்ளீட் பிச்சர் இதுதான்

இந்த காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது?.
ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 30 குமிழ்கள் உருவாக ஆரம்பித்து, பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒரு குமிழ் பெரிதாகி, அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14-ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்த குமிழ் வெடித்து கரு வெளிவந்து விந்துவை எதிர் கொள்ள தயாராகிறது.

மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
மார்பகம் பாரமாக தோன்றும், பெரிதாவது போல் தெரியும், வலி ஏற்படும். இவை மாதவிலக்கு ஏற்பட 2 அல்லது 4 நாள் முன் ஏற்படும். இது சகஜம். சிலருக்கு இந்த அறிகுறிகள் சற்று அதிக மாக இருக்கலாம்.
வயிறு 14-ம் நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வலி இருக்கலாம். வருமுன் வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம்.
எடை உடல், நீர் கோர்த்தது போல, எடை அதிகமானது போல தோன்றும்.
கர்ப்பப்பை வாயில் 14-ம் நாளிலிருந்து வளவள என்ற திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.
இந்த மாற்றங்களை Pre Menstural Syndrome என்பார்கள். தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம்.

மனதிலும் மாற்றங்கள்
உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்தானே?
நிச்சயமாக! கவலை, பதற்றம், ஆர்வமின்மை, ஈடுபாடின்மை, அசதி, கோபம், டென்ஷன், எரிச்சல், தூக்க மின்மை, குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல், தற்கொலை எண்ணம், தனிமை விரும்புதல், தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள். இந்த பிரச்னைகளுக்கு காரணம் இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம், பி-6 என்ற வைட்டமின் பற்றாக் குறையாக இருக்கலாம், தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளின் தாக்கம், டசுச்நூஹஷபீகூபி, டசுச்சூபீச்யுநூஹபிக்ஷகூபிசூ போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமாகலாம். அதிகப்படி நீர் சுரப்பதும், சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணங்களாக இருக்கலாம்.

இதற்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?
தனிப்பட்ட சிகிச்சை கிடையாது.. வைட்டமின்கள், மனநல ஆலோசனை, உடற்பயிற்சிகள் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்தலாம்.

பிரச்னைகளில் இத்தனை வகை
பொதுவாக என்ன மாதிரியான மாத விலக்கு பிரச்னைகள் உள்ளன?
1. குறைந்த அளவு உதிரப்போக்கு 2. உதிரப்போக்கே இல்லாமை. 3. அதிகப்படியான உதிரப் போக்கு 4. சுழற்சி முறையில் மாறுதல் 5.வலியுடன் கூடிய உதிரப்போக்கு.. இப்படி பல.
குறைந்த அளவு உதிரப்போக்கு
இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம். மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப் படுவது. உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும்போது, உடல் எடை தடாலென்று குறையும்போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது (உ-ம்: அதிக உடற்பயிற்சி, பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது) எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டை தடுக்கலாம்.

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும், ரத்த சோகை, வேறு நோய் இருந்தாலும் (உ-ம்: சிறுநீரக வியாதி, இதய வியாதி போன்றவற்றினாலும் உதிரப்போக்கு குறையலாம்.
சினைப்பையில் PCOD (Poly Cystic Ovarian Disease) என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம். சில நேரங்களில் மிகச் சிறிய வயதி லேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்றுவிடலாம்.

பரிசோதனைகள் என்ன?
இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஈஸ்ட் ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவை கணக்கிட வேண்டும். ஸ்கேன் செய்து கர்ப்பப்பை, சினைப்பை சரியான அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் D & C செய்து கர்ப்பப்பையின் உள்சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார்.

எல்லாமே லேட்டானால்..?
சில குழந்தைகள் 16 அல்லது 18 வயதில்தான் பருவம் அடைகிறார்கள். இதனால் பிள்ளைப்பேறு பாதிக்குமா? சிறு வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு 50வயதை தாண்டிதான் விலக்கு நிற்குமா?
உடல்வாகு, உணவு, வளர்கிற சூழ்நிலை, குடும்ப பின்னணி ஆகியவற்றை பொறுத்து பூப்பெய்தும் வயது மாறுபடலாம். சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும், சில சமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம். தாமதமாக பூப்பெய்துவதால் பிள்ளைப் பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. பூப் பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை.

டிஸ்சார்ஜ் 10 நாள் இருப்பது
சிலருக்கு உதிரப்போக்கு 10நாள் வரை இருந்து தொல்லை கொடுக்கிறதே... ஏன்?
பெரிய மனுசியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை. பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும், உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கைதான். உடல் வளர்ச்சியின்போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்ச்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம். சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோகூட ஏற்படலாம். இது இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும். ரத்தப் போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தசோகை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பூப்புக்குப் பின் ஒரு மாதத்துக்குள் பலமுறை வந்தாலும், பல மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்துவிடும்.

கல்யாணம் செய்வதால் பலன்
சில பெண்கள் ஆரோக்யமாக, உடல் வளர்ச்சி சரியாக இருந்தாலும் பூப்பெய்தாமலே இருந்துவிடுகிறார்களே, அதற்கு காரணம் என்ன? திருமணமானால் சரியாகி விடும் என்று சொல்லி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது சரியா? அவர்களுக்கு குழந்தை பிறக்குமா? இதை அறிய என்ன சோதனை செய்யவேண்டும்?
18 வயதை தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால், கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும். பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி போன்றவை சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு, கருமுட்டைகளை உள்ளடக்கிய சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதால், மாதவிலக்கு தோன்றுகிறது. அது தொடங்கவே இல்லை என்றால், பரிசோதனை அவசியம்.
நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு இருப்பின் அவற்றின் காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும். தாயின் வயிற்றுக்குள் பெண் கரு உருவாகும்போதே அதன் சினைப்பை தொடக்கநிலை கரு முட்டைகளை உள்ளடக்கிக் கொண்டு வளர்கிறது. இது பிறவியமைப்பில் வளர்ச்சி பெறாமல் வரிக்கீற்று சினைப்பையாக (Streak Ovary) அமைந்துவிட்டால் செயல்படாமல் போய்விடும், இதனால் பூப்பெய்துவது இல்லை.
இப்பெண்கள் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டால் மாதவிலக்கு தோன்றும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 21 நாட்களுக்கு மாத்திரை உட்கொண்டால்தான் மாதவிலக்கு மாதந்தோறும் வரும். இவர்க ளுக்கு குழந்தை பிறப்பது அரிது. சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இல்லாமலும் போகலாம்.
ஆனாலும் இவர்கள் தாம்பத்ய உறவு கொள்ள இயலும். கர்ப்பப்பை இல்லாமல், யோனிக் குழாயும் இல்லாமல் அந்த இடம் சிறு குழியாக மட்டுமே இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் வடிவமைப்பு ஆபரேஷன் செய்துகொண்டால் தாம்பத்ய உறவில் சிக்கல் இருக்காது.
காசநோய், இளம்பிராய நீரிழிவு நோய் (Juvenile Diabetes) ஆகியவற்றால் கர்ப்பப் பை பாதிக்கப்பட்டிருந்தாலும் மாதவிலக்கு வராது. துளையற்ற கன்னிப்படலம் (Imperforate Hymen), யோனி குழாய் அடைப்பு இருந்தாலும் உதிரம் வெளிவர இயலாமல் அடைபடும்.
இவ்வாறு பூப்பெய்தியும் சூதகம் (Pelvis) மறைந்திருந்து மாத விலக்கிற்கு தடையேற்படுத்துவதை மறை சூதகம் (Cryptorchidism) என்று கூறுவர். ஆபரேஷன் செய்து தடையை அகற்றி வழி செய்தால் இவர்கள் பூப்பெய்தலாம். குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு.

மாதாமாதம் விலக்கு முறையாக வந்தாலும், உதிரப்போக்கு ஒரு நாள் கூட முழுமையாக இல்லாமல் சில நாள் சிறுதுளிகளாக மட்டுமே வந்தால் அதனால் குழந்தை பிறக்காமல் போகுமா?
மாதவிலக்கு ஒழுங்காக வந்து, பாலின உறுப்புகளின் வளர்ச்சி சரியாக இருந்து, ஹார்மோன் கோளாறுகளும் இல்லையென்றால் அரை வாரம், அரை நாள், அரை மணி நேரம் என்று எப்படி வந்தாலும் கவலைப்பட தேவையில்லை.

குறைந்த அளவு உதிரப்போக்கு உள்ளவர்கள் அதனால்தான் உடல் பருமனாகிறது என்றும், குழந்தை பிறக்காது என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு. பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் உள்ள கொழுப்புச் சத்தால்தான் (Obesity) மாதவிலக்கு சொற்பமாக இருக்கிறது. எடையைக் குறைத்தாலே பிரச்னை தீர்ந்துவிடும்.
கர்ப்பப்பை குழாய் அடைப்பில்லை. கருமுட்டை வெடித்து வெளி வருவதில் பிரச்னை இல்லை என்றால் குறைந்த உதிரப்போக்கு, குழந்தை பிறக்க தடையாக இருக்காது.

ஆரோக்யமாக இருந்தாலும் சிலருக்கு பூப்பெய்திய நாளிலிருந்தே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் மாதவிலக்கு வருகிறது. இவர்கள் கர்ப்பம் தரிக்க இயலுமா? வேறு ஏதேனும் தொல்லைகள் ஏற்படுமா?
மாதா மாதம் விலக்கு வருபவர்களுக்கு ஆண்டுக்கு 12 முறை கருத்தரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருபவர்களுக்கு அந்த வாய்ப்பு 4 அல்லது 6 முறைதான் கிடைக்கும். அதுதான் வித்தியாசம். வேறு தொல்லைகள் கிடையாது.

முதலில் மாதவிலக்கு சரியாக வந்து,. திருமணத்துக்குப் பின் தள்ளித் தள்ளி வர ஆரம்பித்து, பின்னர் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அதுவும் மாத்திரை சாப்பிட்டால்தான் வருகிறது என்றால் அதற்கு காரணம் என்ன?
ஹார்மோன் குறைபாடுகளால் இவ்வாறு ஏற்படலாம். சோதனை மூலம் அறிந்து சிகிச்சையால் சரிசெய்யலாம். சினைப்பை மாதம் ஒரு சினை முட்டையை விடுவிப்பது தடை பட்டாலும் சினைப்பையில் சிறுசிறு நீர்மக் கட்டிகள் தோன்றிவிடுகின்றன. இதை 'பலநீர்மக் கோளகக் கருவணு வகம்‘ (PCO - Poly Cystic Ovary) என்று கூறுவர். ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
சினைமுட்டை விடுவிப்பை தூண்டும் (Ovulation Induction) சிகிச்சையே போதுமானது. அதற்கென உள்ள மருந்துகளை வருடக்கணக்கில் சாப்பிடுவது தவறு. நீரிழிவு நோய்க்கான மெட்ஃபார்மியா (Metformia) மாத்திரைகளாலேயே சரிசெய்ய இயலும்.
நீரிழிவு, காசநோய், ரத்த சோகை போன்றவை அல்லது கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் சாப்பிட்டு நிறுத்தினாலும் இவ்வாறு நேரிடலாம்.

தள்ளிப்போக மாத்திரை போடுவது
தொடர்ந்து சரியாக மாதவிலக்கு வரும் போது எங்காவது ஊருக்கு போகவோ, பண்டிகை வருகிறது என்றோ மாத்திரை போட்டு மாதவிலக்கை தள்ளிப் போடுவது இன்று பலருக்கு பழக்கமாகிவிட்டது.. இது சரியா? இதனால் உடம்புக்கு கெடுதலா?
Primol-I போன்ற மாத்திரைகளால் மாதவிலக்கை விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். அத்யாவசிய காரணத்துக்காக எப்போதாவது ஒரு முறை அப்படி செய்யலாம். அடிக்கடி இந்த மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல. ஹார்மோன் சீர்கேடுகளை தோற்றுவிக்கும்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை என்பது உண்மையா?
உண்மைதான். ரத்த சோகையிலிருந்தும் அது மீட்கிறது. இம்மாத்திரைகள் அதிக உதிரப் போக்கை குறைக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது.

மாதவிலக்கு சரியாக வந்தபோதிலும், இடைப்பட்ட ஒரு நாளில் வலியுடன் கூடிய சிறு துளி ரத்தப்போக்கு ஏற்பட்டு மறைந்துவிடுகிறது. பின்னர் எப்போதும் போல் வரவேண்டிய நாளில் வந்துவிடுகிறது. இது ஏன்? உடம்புக்கு கெடுதலா?
சில பெண்களுக்கு மாதவிலக்கு தோன்றிய 14 அல்லது 16-வது நாளில் இவ்வாறு ஏற்படும். இது சினைப்பையில் இருந்து சினைமுட்டை விடும் நாளில் ஏற்படுகிறது. இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. உடம்புக்கு கெடுதல் கிடையாது.

கர்ப்பப்பை ஆபரேஷனின் அவசியம்
30 வயதுக்கு மேல் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவது தான் சரியான வழியா?
சாதாரண கர்ப்பப்பை கட்டிகளாக இருந்து தொந்தரவு இருந்தால், ஆபரேஷன் செய்வது நல்லது. கட்டிகள் இல்லை யென்றால் D&C செய்து பார்க்க வேண்டும். இந்த வயதில்தான் புற்றுநோய் தோன்றும். பரிசோதனை அவசியம். எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் (Cervical Cancer), கர்பப்பை கழுத்து உள்வரி ஜவ்வு புற்றுநோய் (Endometrial Carcinoma) ஆகியவை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே இந்த வயதில் அதிக உதிரப்போக்கு இருந்தால், அனைத்துப் பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். வருமுன் காப்பது நல்லது.

வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதலும் அதனுடன் ரத்தப்போக்கும் ஏற்பட காரணம் என்ன? இது நோயின் வெளிப்பாடா? என்ன சிகிச்சை பெற வேண்டும்?
பருவ மாற்ற காலத்தில் மாத விலக்குக்கு முன்னும் பின்னும் சினைமுட்டை விடுபடும்போதும், கர்ப்ப காலத்திலும் ஹார்மோன்களின் சுரப்பான வெள்ளைப் படுதல் இருக்கலாம். இது தவறில்லை. ஆனால், வெள்ளைப்படுதல் அதிகரித்தோ, நாற்றமுடனோ, உதிரம் கலந்தோ இருந்தால் ஆபத்தான விஷயம். உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெறவேண்டும்.

மாற்று சிகிச்சை வழிமுறைகள்
கர்ப்பப்பை கட்டியினால் உதிரப்போக்கு அதிகமாகுமா? கர்ப்பப்பையை எடுக்க நேரிடுமா? அதற்கு மாற்றாக வேறு சிகிச்சை உள்ளதா?
பொதுவாக 50 முதல் 60 சதவிகிதத்தினருக்கு மிகச் சிறிய அளவிலிருந்து (0.5-1 cm) பெரிய அளவு வரை பல்வேறு கட்டிகளாக தோன்றுவது நார்க்கழலை கட்டி (Fibroid) எனப்படும். இதனால் அதீத உதிரப்போக்கு (Menorrhagia), சூதக வலி (Dysmenorrhoea) ஆகிய தொல்லைகள் இருந்தால், முதலில் D&C செய்து உள்வரி ஜவ்வின் தன்மையை கண்டறிய வேண்டும். பின்பு மாத்திரைகளால் உதிரப்போக்கையும் வலியையும் குறைக்கலாம். அதையும் மீறி போகும் உதிரப்போக்குக்கு, அவரவர் வயதுக்கேற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டிவரும்.
1. Myomectomy - கட்டி அகற்றும் அறுவை (இது குழந்தை வேண்டுபவருக்கு பொருந்தும்).
2. Hysterctomy - கர்ப்பப்பை அகற்றுபவை (40 வயது தாண்டியவருக்கு).
சமீபகால சிகிச்சை முறைகளான
1. Hysteroscopic Myomectomy
2. Uterine Artery Embolisation ஆகியவை சிலருக்கு பொருந்தும்.

மாதவிலக்கு முடிவடையும் காலத்தில் (மெனோ பாஸ்) உதிரப்போக்கு அதிகமாக இருப்பது சகஜமா?
இல்லை. அது தவறான கருத்து. மாதவிலக்கு முற்றுப்பருவத்தில் உதிரப்போக்கு அதிகம் இருந்தாலோ, அதிக நாட்கள் நீடித்தாலோ, குறுகிய காலத்துக்கு ஒரு முறை வந்தாலோ, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பையில் புற்றுநோய் ஆகியவையாக இருக்கக்கூடும். 45 வயதுக்கு மேல் 52 வயதுக்குள்ளாக பெரும்பாலும் மாதவிலக்கு நின்று விடுகிறது. சிலருக்கு திடீரென நின்றுவிடும். பலருக்கு அளவில் குறைந்தோ சில மாதங்கள் தள்ளி வந்தோ நிற்கிறது. இதற்கெல்லாம் மாறாக எந்தவித உதிரப்போக்கு பிரச்னையாக இருந்தாலும் சோதனை செய்வது அவசியம்.

இனி, வாசகிகளின் சில முக்கிய கேள்விகளும் டாக்டர் பதில்களும்


பேப் ஸ்மியர் டெஸ்ட்
எனக்கு வயது 34. இரண்டு குழந்தைகள். சமீபகாலமாக உடலுறவு முடிந்தபின் மாதவிலக்கு போன்று ரத்தப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றபோது 'கர்ப்பப் பையில் கோளாறு இருக்கலாம். பேப் ஸ்மியர் டெஸ்ட் எடுக்க வேண்டும்' என்றார். அப்புறம் பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் என்றால் என்ன? உதிரப்போக்கு பிரச்னைக்கு கட்டாயம் இந்த பரிசோதனையை செய்யத்தான் வேண்டுமா?
பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை கழுத்து, கர்ப்பப்பைவாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை. மிகச் சுலபமாக, 10 நிமிடத்தில் செய்துவிடலாம். சோதனை செய்யவிருக்கும் இடங்களில் மருந்தோ, தண்ணீரோ பட்டிருக்கக் கூடாது. மாத விலக்கின்போது இந்த சோதனையை செய்யக்கூடாது. ஐஸ்க்ரீம் குச்சி போன்ற ஒன்றை கர்ப்பப்பை கழுத்தில் லேசாக தடவினால் அங்குள்ள திசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும். அதனை ஒரு கண்ணாடித் தட்டில் தடவி மருந்திட்டு மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் புற்றுநோய் வர வாய்ப்புள்ள திசுக்கள் உள்ளதா, புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக சொல்லலாம். இவ்வளவு எளிதான ஒரு பரிசோதனை முறை இருந்தும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் முற்றிய நிலையில் வரும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம்! 30 வயது தாண்டியவர்கள் இந்த டெஸ்ட்டை வருடம் ஒரு முறை செய்து கொள்வது நல்லது. உடலுறவுக்குப் பின் உதிரம் பட்டால் அது கர்ப்பபை புற்று நோயின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய ரத்தப் போக்கு ஏற்படுவது தொடர்ந்தால் கட்டாயம் இந்த சோதனை செய்தாக வேண்டும்.

பிறப்புறுப்பு சுத்தம்
எனக்கு திருமணமாகி 15 நாள் ஆகிறது. மாதவிலக்காகி 20 நாளுக்குள் மீண்டும் ரத்தப்போக்கு விட்டுவிட்டு வந்து கொண்டே இருக்கிறது. இதுவரை இப்படி ஆனதில்லை. பயமாயிருக்கிறது. என்ன செய்ய வேண்டும்? இது மாதவிலக்கு ரத்தப்போக்காக இருக்காது. உடலுறவால் ஏற்பட்ட காயம், அந்தக் காயத்தின் மீது கிருமிகளின் தாக்குதலால் (Infection) இருக்கலாம். பரிசோதித்து மருந்து களிம்பு மூலம் குணப்படுத்தலாம். நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். உடை சுத்தமாக இருக்கவேண்டும். பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக் கொள்வதும் அவசியம். உடலுறவுக்குப் பின் அவசியம் சுத்தம் செய்யுங்கள்.

2 ஆண்டுக்கு ஒரு முறை டெஸ்ட்
மாதவிலக்கு தொந்தரவுக்காக டாக்டரை பார்த்தேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் செய்து அதில் வித்தியாசம் இருந்ததால் Colposcopy and Biopsy செய்து கொள்ள சொல்கிறார். அவசியமா?
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) வருமுன், அதில் ஏற்படும் வித்தியாசங்களை அறிய பேப் ஸ்மியர் பரிசோதனை உதவுகிறது. அதன் பிறகு Colposcopy & Biopsy அவசியமாகிறது. பல மடங்கு பெரிது படுத்தி காண்பிக்கும் லென்ஸ் பொருத்திய Colposcope இல் பார்ப்பதால் மிகச் சிறிய மாற்றத்தையும் ஆராய முடியும். அதிலிருந்து சதையை எடுத்து பரிசோதிப்பது (Biopsy) எந்த வகையான சிகிச்சை தேவைப்படும் என்பதை தீர்மானிக்க உதவும். ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை செய்துகொள்வது நோயை தடுக்க உதவும்.

மார்பில் பால் போல் திரவம்
எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஒரு வருடமாக மாதவிலக்கே வருவதில்லை. அடிக்கடி மார்பிலிருந்து பால் போன்ற திரவம் கசிகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கும் கருத்தரிக்காமல் இருப்பதற்கும் சம்பந்தம் உண்டா?
ப்ரோலேக்டீன் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். இந்த ஹார்மோன், மார்பக ரத்த நாளங்களில் வேலை செய்து பால் சுரக்க வைக்கிறது. ப்ரோலேக்டீன் அதிகம் இருந்தால் அது மாதவிலக்கு சுழற்சியை பாதிக்கும். சினைப்பையில் சினை முட்டைக் குமிழ்கள் ஏற்படாதபடி இவை தடுக்கின்றன. அதனால் மாதவிலக்கும் வராது. கரு உருவாகாததற்கு இதுவும் முக்கிய காரணம். ப்ரோலேக்டின் அளவை குறைக்க மருந்துகள் உள்ளன. டாக்டர் ஆலோசனைப்படி சாப்பிடுங்கள்.

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்
என் வயது 48. மூன்று குழந்தைகள் உள்ளன. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். இரண்டு மாதங்களாக விட்டுவிட்டு மாதவிலக்கு வந்து கொண்டிருக்கிறது. இது புற்றுநோய்க்கு அறிகுறியோ என்று பயமாக இருக்கிறது.
இந்த வயதில் சினைப்பையில் கரு முட்டை உற்பத்தி குறைந்துவிடும். தேவையான ஹார்மோன் இல்லாததால் விட்டுவிட்டு விலக்காகலாம். ஆனால் கர்ப்பப்பையில் கட்டி, புற்று போன்றவை இருக்கிறதா என்பதை Pap smear /scan, Endometrial Biopsy ஆகிய சோதனைகள் மூலம் அறிந்து உடனடி சிகிச்சை மூலம் குணப்படுத் தலாம்.

மார்பகத்தில் மாற்றங்கள்
எனக்கு மாதவிலக்கு வருமுன் மார்பகம் பருத்து குத்துவலி எடுக்கிறது. விலக்கானதும் சரியாகி விடுகிறது. எதனால் இப்படி ஆகிறது? சிகிச்சையில் குணமாகுமா?
மாதவிலக்கின்போது மார்பகத்தில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பெரிதாவதும் கல்போல கடினமாவதும், கை வைத்துப் பார்த்தால் உள்ளே சிறுசிறு கோளங்கள் இருப்பது போல ஒரு உணர்வும் வலியும் கூட ஏற்படும். ஈஸ்ட்ரோஜன், ப்ரொ ஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்கள் மாத விலக்குக்கு 3-4 நாளுக்குமுன் ரத்தத்தில் அதிக அளவு காணப்படும். அவை மார்பகத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் மூலம் உடலில் நீர் கோர்ப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிலக்கு ஏற்பட்டவுடன் இந்த ஹார்மோன்களின் அளவு குறைவதால் மார்பகம் பழைய நிலைக்கு வந்துவிடும். சில சமயம் பழைய நிலையை அடைய 7 நாள் கூட ஆகலாம். இதற்கு சிகிச்சை என்று தனியாக எதுவும் தேவையில்லை. வலி அதிகமானால் வலி நிவாரணிகளை நாடலாம்.

ஊசி மூலம் தடுப்பது
டெபோ ப்ரோவேரா (DEPO-PROVERA) பற்றி கேள்விப்பட்டேன். இந்த ஊசியை போட்டுக் கொண்டால் மாதவிலக்கே வராது என்கிறார்களே, இப்படி ஊசி மூலம் மாதவிலக்கை நிறுத்தி வைப்பதால் உடல் நலத்துக்கு பாதகமில்லையா? எல்லோரும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? டெபோ-ப்ரோவேரா எனும் மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்தினால் அது மூன்று மாத காலத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து மாத விலக்கு சுழற்சி மற்றும் கருமுட்டை உருவாவதை தடுத்து கருத்தடையை ஏற்படுத்துகிறது. இதனால் மாத விலக்கு வராமல் அல்லது குறைவாக இருக்கும். சில சமயம் அந்த நாட்களில் வரும் வயிற்றுவலியும் குறையும். இந்த ஊசியினால் சிலருக்கு மாதவிலக்கு முற்றிலுமாக நிற்காமல், முறைப்படி இல்லாமல் அவ்வப்போது வருவது, மன அழுத்தம், வாந்தி, மார்புவலி போன்ற பக்க விளைவுகள் வரலாம். மறுபடி குழந்தை வேண்டுமென்று இந்த மருந்தை நிறுத்தினாலும் கரு உருவாவது தாமதப்படலாம். சிலருக்கு இந்த மருந்து அலர்ஜியாகலாம். அதிக உதிரப் போக்குக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

ஆபரேஷன் மீது பயம்
எனக்கு வயது 37. மணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எனக்கு அந்த மூன்று நாட்களில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தால் ஆபரேஷன் பண்ண சொல்லிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஆபரேஷன் இல்லாமல் இதனை சரிப்படுத்த வழி உள்ளதா? எதனால் உதிரப்போக்கில் திடீர் மாறுபாடு ஏற்படுகிறது?
கர்ப்பப்பையின் உள் சுவரை ஒட்டியிருக்கும் ஜவ்வு, ஹார்மோன் சுரப்பின் போது கரைந்து வெளியே வரவேண்டும். சில சமயம் முழுவதுமாக கரையாமல் வழக்கமான அளவுக்கு மேல் வளர்ந்து தடித்துவிடுகிற நிலையில் அதிக உதிரப் போக்கு ஏற்படும். தவிர, உள்வரி ஜவ்வு இடம் மாறி அமைவதால் உண்டாகும் எண்டோமெட்ரியோஸிஸ் என்ற நோய் ஏற்பட்டாலோ, வேறு காரணங்களே இல்லாமல் ஹார்மோன்கள் சரிவர இயங்காமல் இருந்தாலோ, உள் சுவரில் பாலிப், ஃபைப்ராய்ட் போன்ற கட்டிகள் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பை புற்று நோய் இருந்தாலோ அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம். இவ்வாறான உடல் மாற்றங்கள்தான் என்றில்லை, டென்ஷன், பயம், குழப்பம் போன்ற மன உளைச்சல்களும்கூட அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உதிரப்போக்குக்கு முன்பு ஆபரேஷன் மட்டுமே தீர்வாக இருந்தது. இப்போது கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள் இருந்தால் மட்டுமே ஆபரேஷன் தேவை என்ற வகையில் பல வழி முறைகள் உள்ளன. சிறிய கட்டிகள் இருந்தால் லேசர் ட்ரீட்மென்ட் அல்லது எலக்ட்ரோ சர்ஜரி மூலமே சரிப்படுத்தி விடலாம். கர்ப்பப்பையை சுற்றியுள்ள சிறு கட்டிகள் குறிப்பாக உள்சுவர் கட்டிகள்தான் அதிகளவு உதிரப்போக்கை ஏற்படுத்துகின்றன. கர்ப்பப்பைவாய் வழியாக எலக்ட்ரோடை செலுத்தி கட்டிகளை கரைப்பதன் மூலம் இப்பிரச்னைக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது. கட்டிகள் இல்லை. ஆனால் அதிக ரத்தப் போக்கு என்றால் எளிய மற்றும் நவீன சிகிச்சையான யூட்ரஸ் பலூன் தெரபி மூலம் குணமடையலாம். கர்ப்பப்பைவாய் வழியாக பலூனை உள்ளே நுழைத்து செய்யப்படும் சிகிச்சை இது. பலூனிற்குள் வெப்பக் காற்றை செலுத்தி, விரிவடைந்த பலூன் மூலம் அதிகப்படியான ரத்தத்தை வரவைக்கும் திசுக்கள் அழிக்கப்படும். குழந்தை பிறந்து, இனி குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களும், மெனோபாஸிற்கு முந்தைய நிலையில் இருப்பவர்களும் இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம்.

மருந்துகளால் முடியும்
எனக்கு 33 வயது. அதிக ரத்தப்போக்கு இருந்ததால் டாக்டர் D & C செய்தார். கட்டி எதுவும் இல்லை என்று ஸ்கேனில் தெரிந்தது. Simple Endomeòtrial Hyperplasia என்ற நோய் இருப்பதால் கர்ப்பப்பை நீக்கும் ஆபரேஷன் செய்துகொள்ள சொன்னார். மருந்து மாத்திரைகளால் இதை சரிசெய்ய முடியாதா?
முடியும். Dysfunctional Uterine Bleeding (DUB) என்ற மாதவிலக்கு நோய்க்கு ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையின்படி 3-6 மாதம் உட்கொண்டால் குணமடைய வாய்ப்புண்டு. ஆனால் முறையாக ஸ்கேன் தேவைப்பட்டால் Endometrial Biopsy செய்துகொள்ள வேண்டியது அவசியம். சரியாகவில்லை என்றால் ஆபரேஷன் அல்லது மாற்றுமுறை சிகிச்சை தேவைப்படும்.

என் வயது 20. இரண்டு வருடமாக மாதா மாதம் விலக்காவதில்லை. இதனால் கட்டி ஏற்பட வாயப்புண்டா? திருமணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்ய உறவு, குழந்தை பிறப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுமா?
சீதோஷ்ணம், டைபாய்டு, காசநோய், வைரஸ் போன்ற ஏதாவது ஒரு பாதிப்பால் உடல் பலவீனமாகியோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ மாதவிலக்கு நின்று நின்று வரலாம். சரியாக வராவிட்டால் கட்டிதான் என அர்த்தமில்லை. திருமணம் செய்துகொள்ளலாம். தாம்பத்ய உறவு, குழந்தை பெறுதல் ஆகியவற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

பிறப்புறுப்பில் அரிப்பு
மாதவிலக்கு முடிந்து நாலைந்து நாட்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது. ஏன்? என்ன செய்வது?
நீங்கள் உபயோகிக்கும் துணி பாதுகாப்பானதாக, சுத்தமாக, 100% பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிக்கும். மாற்றிப் பாருங்கள். பலன் கிடைக்கும்.

பிசிஓடி ஒரு நோயல்ல
மகளுக்கு 23 வயது. மாதவிலக்கு ஒழுங்கின்மையால் டாக்டரிடம் சென்ற போது அவளுக்கு PCOD இருப்பதாக கூறினார். இதனால் குழந்தை பிறப்பது பாதிக்குமா?
இது ஒரு நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளியேறாத காரணத்தால் உண்டாவது. இந்த பிரச்னை பல வயதிலும் பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதில் தேவைப்படும் மருந்துகளோடு, உடற் பயிற்சி செய்வது, எடை குறைப்பது போன்ற முறைகளை கடைப்பிடித்தால் கருத்தரிப்பதிலோ குழந்தை பிறப்பதிலோ பிரச்னை வராமல் தடுக்கலாம். மாதவிலக்கையும் ஒழுங்குபடுத்தலாம்.

ஹார்மோன் மாத்திரையும் எடையும்
எனக்கு PCOD நோய்க்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட சொன்னார் டாக்டர். இதனால் உடல் பருமனாகிவிடுமா?
PCOD இருந்தால் உடல் பருமன் ஆகும் வாய்ப்பு அதிகம். மாத விலக்கை சீர்படுத்த கொடுக்கப்படும் Low Dose ஹார்மோன் மாத்திரை களால் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

காப்பர் டி வேண்டாம்
அடிக்கடி வயிறுவலி, அதிக ரத்தப் போக்கு என்று டாக்டரிடம் சென்றேன். எனக்கு Pelvic Inflammatory Disease(கிருமிகள் பாதிப்பு) இருப்பதாக கூறி மருந்துகள் கொடுத்து சரி செய்தார். அடுத்த குழந்தையை தள்ளிப்போட எந்த கருத்தடை முறை நல்லது?
கருத்தடை மாத்திரைகள் அல்லது Depo Provera என்ற மூன்று மாதத்துக்கொருமுறை போடும் ஊசி பயன்படுத்தலாம். காப்பர் டீயை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே உள்ள பாதிப்பை அது அதிகமாக்கும்.

அதிகமான வயிற்றுவலி
என் வயது 25. மாதவிலக்கு நாட்களில் எனக்கு அதிக வயிற்றுவலி இருக்கிறது. எதனால் இந்த வலி ஏற்படுகிறது? இதற்கு நிவாரணிகளை உபயோகிக்க லாமா?
மாதவிலக்கு நாட்களில் தாங்கக்கூடிய வயிற்று வலிவருவது இயற்கையே. ப்ராஸ்டோகிளாண்டின் (Prostoglandin) போன்ற ஹார்மோன்கள் சுரப்பதாலும், உள்ளே இருக்கும் உதிரத்தை வெளியே அனுப்புவதற்காக கர்ப்பப்பை பிசைந்து கொடுப்பதாலும் இத்தகைய வலி ஏற்படுகிறது. ஆனால் அந்த வலி நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நிலை இருந்தாலோ அல்லது வலியுடன் சேர்த்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டாலோ அதன் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது நலம். உங்கள் வயது 25. பூப்பெய்தும் காலத்தில் ஏற்படும் இந்த வலி சுமார் 25 வயதில் ஏறக்குறைய சரியாகி விடும். திருமணமும், குழந்தை பிறப்பும் இந்த வலியை நிவர்த்தி செய்துவிடும் என்பது விஞ்ஞானபூர்வமாகவும் அறியப் பட்டுள்ளது. வலியை சகிக்கும் தன்மை உங்களுக்கு குறைவாக இருந்தால் வலி அதிகமாக தெரியும். அந்த நாட்களில் ஒரே இடத்தில் தனிமையில் அழுது கொண்டிராமல் கவனத்தை திசை திருப்பினால் நிம்மதி. இது மனோ ரீதியான ஒரு தீர்வு.

கலர் பற்றி கவலை வேண்டாம்
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 மணி நேரம் பயங்கர வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். டாக்டரின் ஆலோசனைப்படி முதல் நாள் மட்டும் இரண்டு Bolonex OT மாத்திரையை தண்ணீரில் கரைத்து சாப்பிட்டேன். வலி குறைந்தது. ஆனால், அதன் பிறகு வந்த மாதங்களில் ரத்தம் பிரவுன் கலரில் இருக்கிறது. அளவும் கால்பங்காக குறைந்து விட்டது. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராகவும் அடுத்த 12 மணி நேரம் சிவப்பாகவும் இருக்கிறது. கை, கால் சோர்வு வேறு. விலக்கான முதல் 5 மணி நேரத்திற்கு எது சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. இதனால் மணமான பின் குழந்தை பிறப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? மாதவிலக்கை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது.
மாத விலக்கின் போது முதல் 3 முதல் 5 மணி நேரம் வயிற்று வலி ஏற்படுவது சகஜம்தான். வலி நிவாரணி சாப்பிடு வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதையே பழக்கமாக்கி விடாதீர்கள். பிரவுன் கலரில் வருவதற்கும், ரத்தப்போக்கு குறைந்த தற்கும் அந்த மாத்திரை காரணமல்ல. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராக வும், அடுத்த 12 மணி நேரம் சிவப்பாக வும் இருப்பது பற்றி கவலைப்படாதீர்கள். முதலில் வெளியே வரும் உதிரமானது கருப்பையின் உள்ளே இருக்கும் சதை, ஜவ்வு, ரத்தம் எல்லாம் கலந்து கலர் அப்படித்தான் இருக்கும். பின்பு உதிரம் மட்டும் வெளியே வருவதால் சிவப்பு. பயத்தை விரட்டுங்கள். சாப்பிடுவது, தூங்குவதுபோல இது சாதாரண நிகழ்வு. அந்த நேரத்தில் உங்கள் கவனத்தை வேறு வேலை, பாட்டு போன்ற வற்றில் திருப்புங்கள். உங்களுக்குத்தான் பிரச்னையே இல்லையே. மணமான பிறகு என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது?

கருத்தரிக்க நல்ல நாள்
நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு மாதவிலக்குக்கு முன் 10 நாட்கள் முதுகு வலி (லோயர் பேக்) கால், மார்பு வலி ஏற்படுகிறது. கருத்தரித்த பிறகும் இப்படி இருக்குமா? முதுகு வலி, கால் வலி ஏற்பட்டவுடன் மனதில் சோர்வும் ஏற்படுகிறது. இந்த சூழ் நிலையில் கருத்தரிக்க முடியாது என்று நினைக்கிறேன். எந்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்கலாம். (26-28 நாட்களில் கரெக்டாக வந்து விடுகிறது).
சரியான சுழற்சியில் மாதவிலக்கு வருவதால் கருத்தரிப்பதில் பிரச்னை இருக்காது. முதுகு, கால், மார்பு வலி என்பதெல்லாம் சாதாரணம். சோர்வும் அப்படியே. இந்த சூழ்நிலையில் கருத் தரிக்க முடியாது என்பது வீண் பயம். கருத்தரித்த பிறகு வலி, சோர்வெல்லாம் இருக்காது. மாதவிலக்கான நாளிலிருந்து 12 முதல் 16-ம் நாள் வரை உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது. முதல் 9 நாட்கள் கடைசி 10 நாட்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. இடைப்பட்ட நாட்களில் வாய்ப்பு அதிகம்.

வயிறு உப்புசம்
ஒவ்வொரு முறையும் எனக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் வயிறு உப்புசமாகி விடுகிறது? எதனால் இப்படியாகிறது? மருந்துகள் மூலம் சரிப்படுத்த முடியுமா?
இது சாதாரண பிரச்னைதான். வயிறு உப்புசம் மட்டுமின்றி உடல் முழுவதும் நீர் கோத்திருப்பது போன்ற உணர்வு, பேதி, வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். மாதவிலக்கின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் இவை என விஞ்ஞான ரீதியிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாதவிலக்குக்காக உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு. எனவே, கவலைப்பட வேண்டாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மருத்துவரின் உதவியோடு நிவாரணிகளை நாடலாம்.

கர்ப்பப்பை பலவீனம்
மாதவிலக்கு 3, 4 நாட்களுக்கு மேல் நீடித்தால் கர்ப்பப்பை பலவீனத்தை காட்டுகிறதா? கர்ப்பப்பை பலவீனமானால் குழந்தை பிறப்பு பாதிக்குமா?
சாதாரணமாகவே மாதவிலக்கின் போது 6 நாட்கள் ரத்தப்போக்கு இருக்கலாம். அதுவே சாதாரணம் என்கிற போது, மூன்று நான்கு நாட்களை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். இதனால் கர்ப்பப்பை நிச்சயம் பலவீனமடையாது. குழந்தை பிறப்பிலும் பாதிப்பு இருக்காது.

என் வயது 21. மாதவிலக்கு ஒழுங்காக வருவதில்லை. சில மாதம் 28 நாட்களிலும் சில சமயம் 30, 32, 35, 38 என்றும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுமா?
வயது 21தான். பெரிதாக கவலைப்பட வேண்டாம். நாட்கள் அதிகமானாலும், எப்படியாவது சுழற்சி சரியாகிவிடும். இது 25 வயதிற்கு உட்பட்ட வயதில் சாதாரணமானதுதான். ஹார்மோன்களின் சுழற்சி, வேகம் போன்றவை சில மாற்றங்களுக்கும் சில தடைகளுக்கும் உட்படுவதால் இவை நேரலாம். மிக சரியான சுழற்சி வேண்டுமென்றால் ஹார்மோன் டெஸ்ட் மற்றும் மருத்துவரின் ஆலோசனையை அணுகலாம். உடல் நலத்தில் இதனால் பெரிய பாதிப்பு ஏதும் நிச்சயம் ஏற்படாது.

வெள்ளைப்படுதல் துர்நாற்றம்
எனக்கு வயது 37. எனக்கு மாதவிலக்கு முடிந்த பிறகு வெள்ளை அதிகம் படுகிறது. துர்நாற்றமும், லேசான அரிப்பும் இருக்கிறது. எதனால் இந்த பிரச்னைகள்? இதனை சரி செய்வது எப்படி?
மாதவிலக்கு முடிந்த பிறகு சிறிதளவு வெள்ளைப்படுவது சகஜம்தான். ஆனால் அரிப்பு, துர்நாற்றம் இருப்பதால் இது நிச்சயம் கிருமிகளின் தாக்கத்தைக் குறிக்கிறது. நாப்கின்களை சுத்தமாக உபயோகிப்பதும், அடிக்கடி பிறப்புறுப்பை சுத்தம் செய்வதும் நோயிலிருந்து காப்பாற்றும். உடனடி நிவாரணத்துக்கு மருத்துவரை அணுகி கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்து வாங்கி பயன்படுத்தினால் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம். உங்களுக்கு 37 வயது என்பதால் எதற்கும் Sugar டெஸ்ட் செய்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவு அதிகம் உண்டு.

கீரை, பழம் சாப்பிடுங்க
எனக்கு மாதவிலக்குக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது போல சிவப்பு படுகிறது. வெள்ளைப்படுதலும் உண்டு. இதனால் குழந்தை பிறப்பில் பாதிப்பு உண்டாகுமா? எனக்கு வயது 24. மணமாகி 8 மாதங்களாகின்றன. இதுவரை கரு உருவாகவில்லை. மருத்துவரிடம் காண்பித்தால் ஹீமோகுளோபின் 7.4 எம்.ஜிதான் உள்ளது என்று இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால் மாதவிலக்கான 22 நாட்களில் வாந்தி வருவதுபோல இருக்கிறது. (31-ம் நாள் கரெக்ட்டாக பீரியட்ஸ் வந்து விடுகிறது.) இதனை சரிப்படுத்துவது எப்படி? வெள்ளைபடுதல் ஆபத்தா?
மாதவிலக்கு நாட்களுக்கு முன்பு லேசான ரத்தம் கலந்து வெள்ளைப் படுவது பொதுவான விஷயம்தான். மாத விலக்காக போகிறது என்பதற்கான அறிகுறிதான். இதனால் குழந்தை பிறப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மணமாகி 8 மாதங்களே ஆனதால் கரு உருவாகவில்லை என்று கவலைப்பட வேண்டாம். சேர்ந்து வாழ்ந்து 1 வருடத்திற்கு பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் டாக்டரை பார்க்கலாம். ஹீமோ குளோபின் 7.4 எம்.ஜி. என்பது சற்று கவலை தரக்கூடிய விஷயம்தான். மாத்திரைகளை மட்டும் நம்பாமல், இரும்புச் சத்துள்ள கீரை, காய்கறி, பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவை சாப்பிடுங்கள். வாந்தி பற்றியும் கவலை தேவையில்லை. சுழற்சி சரியாகவே இருக்கிறது. அரிப்போ, நாற்றமோ இல்லாத வெள்ளைப் போக்கால் எந்த பாதிப்பும் இல்லை. அது இயற்கையே.

கல் போல கட்டிகள் மாதவிலக்கான மூன்று நாட்களும் கட்டி கட்டியாக, கல் போலவும், அதிகமாகவும் போகிறது. விலக்கில்லாத நாட்களில் வெள்ளைநிற ஜவ்வு போல வெளியேறுகிறது. இது எதனால்? சிகிச்சை தேவையா?
மாதவிலக்கு எப்போதும் திரவமாக போவதுதான் சரி. கர்ப்பப்பையின் உள்ளே கட்டியாக ஏற்படும் மாதவிலக்கு சில மாற்றங்களால் திரவமாக்கப்பட்டு வெளிவரும். கட்டியாக வெளிப்படுவது உதிரப்போக்கு அதிகமாக இருப்பதையும், அந்த மாற்றங்கள் ஏற்படாமலே வெளியே வந்துவிடுகிறது என்பதையும் காண்பிக்கிறது. இதற்கு சிகிச்சை தேவை. எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால்கூட உதிரம் கட்டியாக வெளிவரலாம். ஸ்கேன் செய்து பாருங்கள்.

மாத்திரைகளின் பக்க விளைவுகள்
மாதவிலக்கு கோளாறுகளுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா? (குழந்தை பிறப்பு, கர்ப்பம் அடைவதில் பாதிப்பு இப்படி..) விளக்கமாக கூறுங்கள்.
மாதவிலக்கு கோளாறுகள் பலவிதம். சுழற்சி சரியில்லாமல் இருக்கலாம். சரியாக இருந்தாலும் உதிரப்போக்கு அதிக மாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அல்லது சுழற்சியே இல்லாமல் அவ்வப்போது உதிரப்போக்கு ஏற்படலாம். எப்படி இருந்தாலும் சிகிச்சை பெறுவது நல்லது. பக்க விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கோளாறு களுக்கு காரணம் கண்டறிந்து சரி செய்துவிட்டால், கர்ப்பமடைவதிலோ குழந்தை பிறப்பிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பப்பை நீக்கியும் உதிரப்போக்கு
என் வயது 40. கோளாறு இருந்ததால் கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன். இப்போதும் மாதா மாதம் ரத்தப் போக்கு உள்ளது. எப்படி? இதனால் உடல்நலக் குறைபாடு ஏற்படுமா?
சினைப்பையை (ஓவரி) நீக்கி விட்டீர்களா என்பதை சொல்லவில்லையே.. வயது 40 தான் என்பதால் அதை நீக்கியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. கர்ப்பப்பையில் என்ன கோளாறு என்பதையும் குறிப்பிடவில்லை. ரத்தப்போக்கு மிதமாக அவ்வப்போது இருந்தால் பயப்பட வேண்டாம். அதிகமானால் ஏற்கெனவே ஆபரேஷன் காரணமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த வயதிலும் வரலாம்
என் மகளுக்கு 4 வயது. ஒவ்வொரு மாதமும் அவளுக்கு மாதவிலக்கு போல சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்படுகிறது. அவள் வயதுக்கு வந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளவா? இந்த வயதிலேயே அது சாத்தியமா? பயமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ வசதியே இல்லாத ஊரில் இருக்கும் எனக்கு சரியான ஆலோசனை தாருங்கள்.
நான்கு வயதில் கூட வயதுக்கு வந்த குழந்தைகள் உண்டு. இதை விரைவு படுத்தப்பட்ட பூப்பெய்தல் என்பார்கள். நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது மார்பக வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மறைவிடங்களில் முடி வளர்ச்சி இருக்கிறதா என்பதை. இந்த மாற்றங்கள் இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல சிறிதளவு ரத்தக் கசிவு அவ்வப்போது ஏற்படுவது நுண்கிருமி தாக்குதல் எனப்படும் வெஜைனைட்டிஸ் (Vaginitis) ஆகக் கூட இருக்கலாம். இதற்கு மிக சாதாரண சிகிச்சையே தேவைப்படும். அதே சமயம் நான்கு வயதிலேயே முழு வளர்ச்சி தென் பட்டால் உடலில் அளவுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரக்கிறதா என்றும், அதற்கு என்ன காரணம் என்றும் மருத்துவரிடம் காட்டி தெரிந்து கொள்வது நலம். அரசு மருத்துவமனையிலோ குழந்தை நல மருத்துவரிடமோ பரிசோதியுங்கள்.

எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாம் பெண் குழந்தை பிறந்த இரண்டாம் நாள் அதற்கு லேசான வெள்ளைப் படுதல் இருப்பதை கவனித்தேன். இது ஏதாவது நோயின் அறிகுறியோ?
நிச்சயமாக நோய் அறிகுறி இல்லை. குழந்தைக்கு வெள்ளை படுவது மிக சாதாரண விஷயம்தான். பிறப்புறுப்பில் ரத்தம் வருவதுகூட இயற்கை. தாயின் உடலில் சுரந்த ஹார்மோன்கள் ஓரளவுக்கு குழந்தையின் ரத்தத்தில் கலந்து விடுவதால் இது ஏற்படுகிறது. ஆனால், சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் இது நிற்காவிட்டால் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

அந்த நேரம் உடலுறவு வேண்டாமே
எனக்கு மாதவிலக்கின்போதுதான் உடலுறவு கொள்ளும் ஆசை அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், கணவரோ அது தப்பு என்று கூறி ஒதுக்குகிறார். எனக்கு ஏன் அப்படி ஆசை வருகிறது?
அந்த நேரத்தில் உறவு கொள்வது சரியா, தவறா? ?

பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கின்போது தாம்பத்ய உணர்வு மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் விதி விலக்கு போலும். ஆசை ஏற்படுவதில் தவறொன்றும் கிடையாது. அந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமாக எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்ற நோய் வர வாய்ப்புள்ளது. அதாவது உதிரம் உடலுக்குள் சென்று கர்ப்பப்பை குழாய் வழியாக வெளியே வந்து படிந்து கர்ப்பப்பையை சுற்றியுள்ள இடங்களில் ரத்தக் கட்டிகளாக படிந்துவிடுவது.. மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொள்வதால் இத்தகைய நிலை வரலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே மிக அத்தியாவசியமாக இருந்தாலன்றி அந்த நாட்களில் தவிர்க்கலாமே!

பின்னாளில் பாதிப்பு
எனக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக உதிரப்போக்கு இருந்ததால் டாக்டர் கருத்தடை மாத்திரையை உபயோகிக்கச் சொன்னார். தொடர்ந்து இவற்றை உபயோகிப்பதால் பிற்காலத்தில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் ஏதேனும் வர வாய்ப்புள்ளதா?
அதிக உதிரப் போக்குக்கு கருத்தடை மாத்திரை உபயோகிப்பது சரியானது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனையுடனும், குறிப்பிட்ட காலம் வரையிலும்தான் உபயோகிக்க வேண்டும். மருத்துவர் அந்த மாத்திரைகளை தருமுன் அதனால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்று உங்களை பரிசோதித்து, உங்கள் பரம்பரை நோய்களை பற்றி தெரிந்து கொண்டு கொடுப்பார். அதிக நாட்கள் சாப்பிடுவதாலும் ஆலோசனை இன்றி சாப்பிடுவதாலும் சிலருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கருத்தடை மாத்திரை என்றவுடனே பயந்துவிட வேண்டாம். மணமாகாத பெண்களுக்குகூட அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற உதிரப்போக்கு, ஒழுங்கற்ற சுழற்சி போன்ற பிரச்னைகளுக்கு இந்த மாத்திரைகள் தரப்படுகின்றன. மேலே சொன்னவற்றுக்கெல்லாம் காரணம் ஹார் மோன்கள் குறைபாடு. அந்த ஹார் மோன்களை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்கிறோம். அவ்வளவுதான்.

டீன் ஏஜ் கவனிக்கவும்
மாதவிலக்கு நாட்களில் டீன் ஏஜ் பெண்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் என்னென்ன?
டீன் ஏஜில் பெண்களுக்கு சுகாதாரமில்லாமல், நுண் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட்டால் அதனால் பிற்காலத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் குழந்தை பிறப்பிலும் பிரச்னைகள் ஏற்படலாம்.
துணியைவிட இந்நேரத்தில் நாப்கினை உபயோகிப்பதுதான் நல்லது. சுகாதாரமானது, வசதியானது. நாப்கின் வாங்க வசதியில்லை என்பவர்கள், ஈரத்தை உறிஞ்சும் தன்மை அதிகமுள்ள மெல்லிய பருத்தித் துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக நீளம், தடிமனாக இல்லாமல், நாப்கின் அளவிற்கே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங் கள். இதனை உள்ளாடைக்குள் (பேன்டீஸ்) வைத்துக்கொள்வதே பாதுகாப்பானது. நழுவிவிடும் என்ற பயம் இருக்காது. மேலாடையில் கறைபடாமலும் இருக்கும்.

இதனை நாள் முழுவும் வைத்திருக்காமல், ஓரளவு ஈரம் உறிஞ்சியதுமே எடுத்து சுத்தமாக துவைத்து வெந்நீரில் அலசி, காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் உள்ள இடத்தில் உலரவைத்து உபயோகிக்க வேண்டும்.
நாப்கின் உபயோகிக் கும்போது அதை கவரிலிருந்து கை, அழுக்கு படாமல் எடுத்து பிறப்புறுப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு வைத்துக் கொள்வதுதான் சரியான முறை. அந்த நாப்கின் முழுவதும் நனைந்த பிறகு அடுத்தது மாற்றலாம் என்று இருந்துவிடக் கூடாது. ஓரளவு நனைந்ததுமே மாற்றிவிட வேண்டும். லேசாக உதிரம் பட்டாலும்கூட ஒரே நாப்கினை அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது. முக்கிய விஷயம், உபயோகித்த நாப்கினை அப்படியே வீசி விடாமல், தண்ணீரில் சுத்தம் செய்து, கறையை நீக்கி அதை ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியில் போட வேண்டும். இது மற்றவர்களின் ஆரோக்யத்துக்கும் நாம் மதிப்பு தரும் முறை.

அந்த நாட்களில் டென்ஷன், கோபம் ஏற்படுவது இயற்கை. இப்படி 200-க்கு மேல் மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஹார்மோன்கள் அதிகரிப்பு, சில வைட்டமின்கள் குறைபாடு (G.L". B6), வேலைப்பளு இவைதான் அதற்கு காரணம். ஆதரவான அன்பான சூழ்நிலையை ஏற்படுத்தினால் பலன் கிடைக்கும்.

சாப்பாடு முக்கியம்
மாதவிலக்கு நாட்களில் என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்? உணவுப் பொருட்களுக்கும், உதிரப்போக்கு, வலி, மனநிலை ஆகியவற்றுக்கும் தொடர்பு உண்டா?
அப்போது சாப்பிடும் உணவு வகைகளுக்கும், உதிரப்போக்கு, வலி ஆகியவற்றுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிலருக்கு அந்த சமயத்தில் லேசான வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று முன்பே கூறியிருந்தேன். அதோடு அந்த சமயத்தில் குடல், ஜீரண மண்டலத்தின் இயக்கம் சற்று மந்தமாக இருக்கும். அதனால் அதிக காரம், எண்ணெய் சேர்த்த, அஜீரணக் கோளாறுகளை உண்டாக்கக் கூடிய உணவுகளை தவிர்த்து எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே சாப்பிடுவது நலம். பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள், இரும்புச்சத்து மிக்க பேரிச்சம்பழம், முருங்கைக்கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிலக்கு நாட்களில் பிறப்புறுப்பில் அதிக முடி இருந்தால் அசவுகர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் முடி நீக்குவது சரிதானா என்று தெரியவில்லை. எந்த முறையில் எப்போது நீக்கலாம்? மென்மையான பிறப்புறுப்பின் மேலான முடிகள் அந்தப் பகுதிக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. மாதவிலக்கு சமயத்தில் கட்டாயம் முடிகளை நீக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அசவுகரியமாக உணர்ந்தால் நீக்குவதிலும் தவறில்லை. பிறப்புறுப்பு மட்டுமல்ல கை, கால்களில் முடியை நீக்குவதானால்கூட ரேசர் உபயோகிக்கக் கூடாது. அது சருமத்தை கடினமாக்கி முடியை விரைவாகவும், முன்பைவிட கடினமாகவும் வளரச் செய்யும். காயம் ஏற்படவும், இன்பெக்க்ஷன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த முடிகளை நீக்குவதற்கென்றே கிரீம்கள் உள்ளன. இவற்றை பூசி சற்று நேரம் விட்டுவைத்து பின்னர் பஞ்சு தேய்த்து எடுத்து விடலாம். நேரடியாக பூசக் கூடாது. முதலில் காது மடலுக்கு பின்புறம் சிறிதளவு தடவிப் பாருங்கள். எரிச்சல், தோல் உரிதல், தடிப்பு போன்ற எந்த பக்க விளைவுகளும் ஏற்படாவிட்டால் மற்ற இடங்களில் பயன்படுத்தலாம்.