சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1980 _ ம் ஆண்டில் 15 சதவிகிதம் இருந்த சிசேரியன், 1990 _ ம் ஆண்டில் 22 சதவிகிதமாகவும், 2002 _ ல் 30 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், சிங்கப்பூர் பெண்கள் வேலை போன்றவற்றிற்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதே. இந்நிலையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம், வயது காரணமாக சர்க்கரை வியாதி போன்றவை சில தாய்களுக்கு ஏற்படுவதுதான்.
இதனால் சர்க்கரை வியாதி இருக்கும் தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவே அங்கு மருத்துவர்கள் பயப்படுகின்றனர். காரணம், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அது சட்டச்சிக்கலில் கொண்டு போய்விடுமோ என்றுதான்.
‘பத்து கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முன்பே இவர்களுக்கு இவ்வியாதி உள்ளது அல்லது கருத்தரித்த பின்னர் ஏற்படுகிறது. கருத்தரித்த பின் கட்டுப்பாடு இல்லாமலிருந்தால் குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ நேரத்தின்போது சிக்கலில் கொண்டுவிடும். வயதான கருத்தரிப்பின்போது உயர் ரத்த அழுத்த வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்தால் உடனடியாய் குழந்தையை அறுவை செய்து எடுக்கவேண்டும்’ என்கிறார் சிங்கப்பூர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டான் காக் ஹியன்.
எனவே, தாய்மையைத் தள்ளிப் போடாதீங்க!
nantri - Kumutham
Donnerstag, März 04, 2004
Abonnieren
Posts (Atom)