Samstag, März 06, 2004

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க.............

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.

அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

திவ்யா
Quelle - Kumutham

Donnerstag, März 04, 2004

தாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள்

சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1980 _ ம் ஆண்டில் 15 சதவிகிதம் இருந்த சிசேரியன், 1990 _ ம் ஆண்டில் 22 சதவிகிதமாகவும், 2002 _ ல் 30 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், சிங்கப்பூர் பெண்கள் வேலை போன்றவற்றிற்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதே. இந்நிலையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம், வயது காரணமாக சர்க்கரை வியாதி போன்றவை சில தாய்களுக்கு ஏற்படுவதுதான்.

இதனால் சர்க்கரை வியாதி இருக்கும் தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவே அங்கு மருத்துவர்கள் பயப்படுகின்றனர். காரணம், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அது சட்டச்சிக்கலில் கொண்டு போய்விடுமோ என்றுதான்.

‘பத்து கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முன்பே இவர்களுக்கு இவ்வியாதி உள்ளது அல்லது கருத்தரித்த பின்னர் ஏற்படுகிறது. கருத்தரித்த பின் கட்டுப்பாடு இல்லாமலிருந்தால் குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ நேரத்தின்போது சிக்கலில் கொண்டுவிடும். வயதான கருத்தரிப்பின்போது உயர் ரத்த அழுத்த வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்தால் உடனடியாய் குழந்தையை அறுவை செய்து எடுக்கவேண்டும்’ என்கிறார் சிங்கப்பூர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டான் காக் ஹியன்.

எனவே, தாய்மையைத் தள்ளிப் போடாதீங்க!

nantri - Kumutham

Dienstag, März 02, 2004

கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடு

கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத்
தெரிந்து கொள்வது எப்படி?


ஒரு பெண், கர்ப்பமுற்று அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரையான காலத்தை மூன்று பகுதிகளாக நாங்கள் பிரித்துக் கொள்வோம். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில டெஸ்ட்டுகள் செய்துபார்த்து அதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதும் குறையிருக்கிறதா என்று கண்காணிப்போம்.

பேறுகாலத்தின் முதல் பகுதியில் செய்யப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ரத்தப் பரிசோதனையும் ஒன்று. இந்தப் பரிசோனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்த சோகை உள்ளதா, சர்க்கரை நோய் இருக்கிறதா என்பது போன்ற முக்கியமாக சில விஷயங்களைப் பார்த்து அதை சரிசெய்ய சிகிச்சை மேற்கொள்வோம்.

சர்க்கரை நோய் என்பது இந்த சமயத்தில் சில பெண்களுக்கு மரபு ரீதியாகவோ, முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு மேல் இருந்தாலோ, வரலாம். தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தைக்கு பலவித குறைபாடுகளை உண்டாக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டை பேறு காலத்தின் முதல் பகுதியிலேயே அவசியம் செய்து பார்ப்போம்.

இன்னும் இதுபோன்ற பல நுணுக்கமாக விஷயங்களையும் கூட ரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும். இதில் மிக முக்கியமான ஒன்று கர்ப்பிணிப் பெண்ணின் ரத்தத்தில் Rhyping ஐ கண்டுபிடிப்பது. இதுபற்றி விரிவாகப் பார்க்கும் முன் இன்னொரு தகலைத் தெரிந்து கொள்ளுங்க...

நம் ரத்தத்தில் கி, ஙி, ளி என்று சில வகைகள் இருப்பது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்திருந்தது. ஆனால் இன்றோ பல ஆராய்ச்சிகளின் முடிவாக டஃப் கெல்லி என்று ரத்தத்தில் இன்று வேறு பல குரூப்களும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதில் Rhyping என்பது எங்கே வந்தது என்று பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரே குரூப் ரத்தம் கொண்ட சிலருக்கு ரத்ததானம் செய்யும்போது அது பொருந்தாமல் போய் வேறு வகையான ரியாக்ஷன்கள் கொடுத்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் ஒரே குரூப் ரத்தமாக இருந்தும் ஏன் இப்படி ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது Rhyping என்கிற ஒரு விஷயமே மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. இது ரத்த குரூப்களில் இன்னொரு சப் பிரிவு. நூறு நபர்களில் 35 பேருக்கு ஸிபி பாஸிடிவ் ஆகவும், மீதமிருப்பவர்களுக்கு ஸிபி நெகடிவாகவும் இருக்கும். சரி இந்த சுhலிiபெ க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதாரணமாக கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் ரத்தம் ஸிபி நெகடிவ் ஆக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கணவரின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெரும்பாலும் ஸிபி பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனக்கு சம்பந்தமில்லாத ஒரு வகை ரத்தம் உடலில் இருப்பதை உணரும் அம்மாவின் உடல் அதை எதிர்க்கும் விதமாக எதிர்ப்பு அணுக்களை உருவாக்கத் தொடங்கும் இந்த அணுக்கள் அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்குப் போய் மெதுவாக குழந்தையின் ரத்த அணுக்களை செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக குழந்தைக்கு இதயக் கோளாறுகள் உண்டாகலாம். உடம்பெல்லாம் நீர் கோர்த்துக் கொள்ளக்கூடிய பிஹ்பீக்ஷீஷீஜீள திஷீமீவணீறீவீள என்கிற நிலை ஏற்படலாம். குழந்தையின் நார்மலான வளர்ச்சி பாதிக்கப்படலாம். சில சமயம் குழந்தை இறக்கக் கூட நேரலாம்.

Rhyping பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததுமே பயந்து போய் விடாதீர்கள். பொதுவாகவே இதனால் முதல் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. முதல் குழந்தையால் தாயின் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்குள், இரண்டாம் அல்லது அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் அதை சரி செய்துவிடலாம். இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதால்தான் நாம் கருத்தரித்த உடனேயே ரத்தப் பரிசோதனை செய்கிறோம்.

அம்மாவின் ரத்தம் Rhyping நெகடிவ் ஆக இருந்தால் மட்டும்தான் பிரச்னை. அதுவே அப்பாவின் ரத்தம் ஸிபி நெகட்டிவாக இருந்து அம்மாவின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தாலோ இரண்டு பேருக்குமே ஸிபி நெகடிவ் ஆக இருந்தாலோ பிரச்னை இல்லை.

ஸிபி நெகடிவ் ஆக இருக்கும்போது அம்மாவுக்கு முதல் குழந்தை ஸிபி பாஸிடிவ் ஆக பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பிரசவமான எழுபத்தியிரண்டு மணி நேரத்துக்குள் தாய்க்கு Antid Immuni Globulin என்கிற ஊசியைப் போட்டு விட வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லியான ஊசி என்றாலும் இனி பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லாமல் இருக்க இதை தாய்க்குக் கொடுத்தே ஆக வேண்டும்.

ஸிபி நெகடிவ் உள்ளவர்களுக்கு முதல் பிரசவம் ஆனால்தான் என்று இல்லை. அபார்ஷன் ஆனாலும்கூட, ஆன உடனே இந்த ஊசியை அம்மாவுக்குப் போட வேண்டும். கர்ப்ப காலத்தின் போது ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் கூட தாய்க்கு இந்த ஊசியைப் போடவேண்டும்.

முன்னெல்லாம் ஸ்கேன் என்பது பலருக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயமாக இருந்தது. இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் ஸ்கேன்_ஐ ஆரம்பத்தில் கருத்தரித்த 4_5 மாதங்கள் ஆனதும் தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்றோ கருத்தரித்த 10_12 வாரங்களுக்குள்ளாகவே ஸ்கேன் செய்கிறோம். காரணம் அதில் குழந்தையின் சில முக்கிய குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.

உதாரணமாக முதல் ஸ்கேன் செய்யும்போது குழந்தையின் கழுத்தின் பின்புற சதைப் பகுதியின் தடிமனைத் தெரிந்துகௌ;ள முடியும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தடிமன் இவ்வளவுதான் இருக்கமுடியும் என்று ஒரு அளவு இருக்கிறது. அதற்கு அதிகமாகவே சதையின் அளவு இருந்தால் குழந்தைக்கு மரபு ரீதியாக சில குறைபாடுகள் இருக்கலாம் என்பது தெரியும். இதுபோன்ற சில குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யவோ அல்லது அந்தக் குழந்தையே வேண்டாம் என்று முன்கூட்டியே எடுக்கவும் கூட இந்த முதல் ஸ்கேன் உதவும்.

ஆனால் சில வீடுகளில் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்கேன் கூடவே கூடாது என்பார்கள். ஸ்கேனைத் தள்ளிப்போட்டால் அது பின்னால் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.

இது தவிர கர்ப்ப காலத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது 20_22 வாரங்களுக்குள் இன்னொரு ஸ்கேன் செய்து பார்ப்போம். இதற்குள் குழந்தையின் முக்கிய உறுப்புகள் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும். இந்த ஸ்கேன் மூலம் வளர்ச்சி நார்மலாக உள்ளதா என்று பார்ப்போம். மூன்றாவது ஸ்கேன்_ஐ கர்ப்பகாலத்தின் மூன்றாம் பகுதியில் செய்து பார்ப்போம். இதை வைத்து மீண்டும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.

குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க பொதுவாக இந்த மூன்று ஸ்கேன்கள் செய்வது வழக்கம். சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்து பார்க்கும் வசதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்வதை (அது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமென) விரும்பமாட்டார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கர்ப்பகாலத்தின் இரண்டாம் பகுதியில் ஒரு ஸ்கேன் செய்து கொண்டால் போதும்.

கர்ப்பமடைந்த விஷயம் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதுமே மருத்துவரைச் சந்திப்பது நல்லது என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து கருவுக்கு முப்பத்தி நான்காம் வாரம் ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் மருத்துவரை தவறாமல் சந்திக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அம்மாவின் பி.பி., எடை எல்லாம் நார்மலாக உள்ளதா என்று சரி பார்ப்போம். மேலும் கர்ப்பப்பையின் அளவு மற்றும் வளர்ச்சி ஆகியவையும் சரியானபடி உள்ளதா என்று பார்ப்போம். ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் கர்ப்பப்பை இவ்வளவுதான் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல பனிக்குட நீரின் அளவையும் இந்த சமயத்தில் சரிபார்ப்போம்.

கர்ப்பகாலத்தின்போது அம்மாவின் உடல் எடை அதிகரிக்கவே மாட்டேன்கிறது என்று சில வீடுகளில் வருத்தப்பட்டுக் கொள்வார்கள். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு சில பெண்களுக்குப் பெரிதாக வெயிட் போடாது. இதற்குக் காரணம், அதிகப்படியான வாந்தியும் அதன் காரணமாக தாய்க்கு உணவின் மீது ஏற்படும் வெறுப்பும்தான். ஆரம்பக்காலகட்டத்தில்தான் இந்தப் பிரச்னை தலைதூக்குமே ஒழிய, பிறகு எடை ஏறத்தான் செய்யும். கடைசி பத்து வாரங்களில்தான் குழந்தையின் எடை வேகமாகக் கூடிப்போகும். காரணம் இந்த சமயத்தில்தான் குழந்தையின் வளர்ச்சியும் அதிகப்படியாக இருக்கும். பிரசவ காலத்தின்போது மொத்தத்துக்கும் தாயின் எடை 9_12 கிலோ வரை கூடுவதுதான் சரி.

கர்ப்பகாலத்தின் போது அம்மாவின் பி.பி. நார்மலுக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும். இதனால் பயப்பட ஒன்றுமில்லை. அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்கு ரத்தம் பாயும் நிகழ்வால் இப்படி இருக்கும். இது நார்மலான விஷயம்தான்.

Quelle - Kumutham

Montag, März 01, 2004

பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்:

டாக்டர் கீதா அர்ஜுன்
(கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)

பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய்வென்பது
அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!

பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பாலன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறைகள் எதற்கும் அவசியமில்லை."

டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:
(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)
அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ வித வேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதியாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும் அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. பத்திரிகைகள், திருமணப் பதிவு மையங்களில் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.

இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும்
ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். உடலில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அந்தக் காலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படாததால் 'அந்த நேரத்தில்' மட்டும் 'தனியாக' கவனிக்கப் பட்டார்கள்.

இத்தகைய 'தனி கவனிப்பு' இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. எனக்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இருதயத்திற்கு அதிக பாதிப்பு.

மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண் வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள். இப்ப அப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக்குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமான உடைகள் தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை."

சுப்புலட்சுமி
(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)

வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பது சரிதான். அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப்பதும் அவசியம்.

முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில் மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கிறது.

கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்து இருக்கிறது. இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் 'பி' உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும், உறுதியையும் அளிக்கிறது.

இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப் 'பொங்கிப் போடும்' வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.

தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது
மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

- தொகுப்பு: சாந்தி ரங்கராஜன்