சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1980 _ ம் ஆண்டில் 15 சதவிகிதம் இருந்த சிசேரியன், 1990 _ ம் ஆண்டில் 22 சதவிகிதமாகவும், 2002 _ ல் 30 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், சிங்கப்பூர் பெண்கள் வேலை போன்றவற்றிற்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதே. இந்நிலையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம், வயது காரணமாக சர்க்கரை வியாதி போன்றவை சில தாய்களுக்கு ஏற்படுவதுதான்.
இதனால் சர்க்கரை வியாதி இருக்கும் தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவே அங்கு மருத்துவர்கள் பயப்படுகின்றனர். காரணம், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அது சட்டச்சிக்கலில் கொண்டு போய்விடுமோ என்றுதான்.
‘பத்து கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முன்பே இவர்களுக்கு இவ்வியாதி உள்ளது அல்லது கருத்தரித்த பின்னர் ஏற்படுகிறது. கருத்தரித்த பின் கட்டுப்பாடு இல்லாமலிருந்தால் குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ நேரத்தின்போது சிக்கலில் கொண்டுவிடும். வயதான கருத்தரிப்பின்போது உயர் ரத்த அழுத்த வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்தால் உடனடியாய் குழந்தையை அறுவை செய்து எடுக்கவேண்டும்’ என்கிறார் சிங்கப்பூர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டான் காக் ஹியன்.
எனவே, தாய்மையைத் தள்ளிப் போடாதீங்க!
nantri - Kumutham
Donnerstag, März 04, 2004
Dienstag, März 02, 2004
கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடு
கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத்
தெரிந்து கொள்வது எப்படி?
ஒரு பெண், கர்ப்பமுற்று அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரையான காலத்தை மூன்று பகுதிகளாக நாங்கள் பிரித்துக் கொள்வோம். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில டெஸ்ட்டுகள் செய்துபார்த்து அதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதும் குறையிருக்கிறதா என்று கண்காணிப்போம்.
பேறுகாலத்தின் முதல் பகுதியில் செய்யப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ரத்தப் பரிசோதனையும் ஒன்று. இந்தப் பரிசோனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்த சோகை உள்ளதா, சர்க்கரை நோய் இருக்கிறதா என்பது போன்ற முக்கியமாக சில விஷயங்களைப் பார்த்து அதை சரிசெய்ய சிகிச்சை மேற்கொள்வோம்.
சர்க்கரை நோய் என்பது இந்த சமயத்தில் சில பெண்களுக்கு மரபு ரீதியாகவோ, முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு மேல் இருந்தாலோ, வரலாம். தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தைக்கு பலவித குறைபாடுகளை உண்டாக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டை பேறு காலத்தின் முதல் பகுதியிலேயே அவசியம் செய்து பார்ப்போம்.
இன்னும் இதுபோன்ற பல நுணுக்கமாக விஷயங்களையும் கூட ரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும். இதில் மிக முக்கியமான ஒன்று கர்ப்பிணிப் பெண்ணின் ரத்தத்தில் Rhyping ஐ கண்டுபிடிப்பது. இதுபற்றி விரிவாகப் பார்க்கும் முன் இன்னொரு தகலைத் தெரிந்து கொள்ளுங்க...
நம் ரத்தத்தில் கி, ஙி, ளி என்று சில வகைகள் இருப்பது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்திருந்தது. ஆனால் இன்றோ பல ஆராய்ச்சிகளின் முடிவாக டஃப் கெல்லி என்று ரத்தத்தில் இன்று வேறு பல குரூப்களும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதில் Rhyping என்பது எங்கே வந்தது என்று பார்ப்போம்.
சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரே குரூப் ரத்தம் கொண்ட சிலருக்கு ரத்ததானம் செய்யும்போது அது பொருந்தாமல் போய் வேறு வகையான ரியாக்ஷன்கள் கொடுத்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் ஒரே குரூப் ரத்தமாக இருந்தும் ஏன் இப்படி ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது Rhyping என்கிற ஒரு விஷயமே மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. இது ரத்த குரூப்களில் இன்னொரு சப் பிரிவு. நூறு நபர்களில் 35 பேருக்கு ஸிபி பாஸிடிவ் ஆகவும், மீதமிருப்பவர்களுக்கு ஸிபி நெகடிவாகவும் இருக்கும். சரி இந்த சுhலிiபெ க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரணமாக கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் ரத்தம் ஸிபி நெகடிவ் ஆக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கணவரின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெரும்பாலும் ஸிபி பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனக்கு சம்பந்தமில்லாத ஒரு வகை ரத்தம் உடலில் இருப்பதை உணரும் அம்மாவின் உடல் அதை எதிர்க்கும் விதமாக எதிர்ப்பு அணுக்களை உருவாக்கத் தொடங்கும் இந்த அணுக்கள் அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்குப் போய் மெதுவாக குழந்தையின் ரத்த அணுக்களை செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக குழந்தைக்கு இதயக் கோளாறுகள் உண்டாகலாம். உடம்பெல்லாம் நீர் கோர்த்துக் கொள்ளக்கூடிய பிஹ்பீக்ஷீஷீஜீள திஷீமீவணீறீவீள என்கிற நிலை ஏற்படலாம். குழந்தையின் நார்மலான வளர்ச்சி பாதிக்கப்படலாம். சில சமயம் குழந்தை இறக்கக் கூட நேரலாம்.
Rhyping பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததுமே பயந்து போய் விடாதீர்கள். பொதுவாகவே இதனால் முதல் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. முதல் குழந்தையால் தாயின் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்குள், இரண்டாம் அல்லது அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் அதை சரி செய்துவிடலாம். இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதால்தான் நாம் கருத்தரித்த உடனேயே ரத்தப் பரிசோதனை செய்கிறோம்.
அம்மாவின் ரத்தம் Rhyping நெகடிவ் ஆக இருந்தால் மட்டும்தான் பிரச்னை. அதுவே அப்பாவின் ரத்தம் ஸிபி நெகட்டிவாக இருந்து அம்மாவின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தாலோ இரண்டு பேருக்குமே ஸிபி நெகடிவ் ஆக இருந்தாலோ பிரச்னை இல்லை.
ஸிபி நெகடிவ் ஆக இருக்கும்போது அம்மாவுக்கு முதல் குழந்தை ஸிபி பாஸிடிவ் ஆக பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பிரசவமான எழுபத்தியிரண்டு மணி நேரத்துக்குள் தாய்க்கு Antid Immuni Globulin என்கிற ஊசியைப் போட்டு விட வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லியான ஊசி என்றாலும் இனி பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லாமல் இருக்க இதை தாய்க்குக் கொடுத்தே ஆக வேண்டும்.
ஸிபி நெகடிவ் உள்ளவர்களுக்கு முதல் பிரசவம் ஆனால்தான் என்று இல்லை. அபார்ஷன் ஆனாலும்கூட, ஆன உடனே இந்த ஊசியை அம்மாவுக்குப் போட வேண்டும். கர்ப்ப காலத்தின் போது ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் கூட தாய்க்கு இந்த ஊசியைப் போடவேண்டும்.
முன்னெல்லாம் ஸ்கேன் என்பது பலருக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயமாக இருந்தது. இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் ஸ்கேன்_ஐ ஆரம்பத்தில் கருத்தரித்த 4_5 மாதங்கள் ஆனதும் தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்றோ கருத்தரித்த 10_12 வாரங்களுக்குள்ளாகவே ஸ்கேன் செய்கிறோம். காரணம் அதில் குழந்தையின் சில முக்கிய குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக முதல் ஸ்கேன் செய்யும்போது குழந்தையின் கழுத்தின் பின்புற சதைப் பகுதியின் தடிமனைத் தெரிந்துகௌ;ள முடியும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தடிமன் இவ்வளவுதான் இருக்கமுடியும் என்று ஒரு அளவு இருக்கிறது. அதற்கு அதிகமாகவே சதையின் அளவு இருந்தால் குழந்தைக்கு மரபு ரீதியாக சில குறைபாடுகள் இருக்கலாம் என்பது தெரியும். இதுபோன்ற சில குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யவோ அல்லது அந்தக் குழந்தையே வேண்டாம் என்று முன்கூட்டியே எடுக்கவும் கூட இந்த முதல் ஸ்கேன் உதவும்.
ஆனால் சில வீடுகளில் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்கேன் கூடவே கூடாது என்பார்கள். ஸ்கேனைத் தள்ளிப்போட்டால் அது பின்னால் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.
இது தவிர கர்ப்ப காலத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது 20_22 வாரங்களுக்குள் இன்னொரு ஸ்கேன் செய்து பார்ப்போம். இதற்குள் குழந்தையின் முக்கிய உறுப்புகள் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும். இந்த ஸ்கேன் மூலம் வளர்ச்சி நார்மலாக உள்ளதா என்று பார்ப்போம். மூன்றாவது ஸ்கேன்_ஐ கர்ப்பகாலத்தின் மூன்றாம் பகுதியில் செய்து பார்ப்போம். இதை வைத்து மீண்டும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க பொதுவாக இந்த மூன்று ஸ்கேன்கள் செய்வது வழக்கம். சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்து பார்க்கும் வசதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்வதை (அது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமென) விரும்பமாட்டார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கர்ப்பகாலத்தின் இரண்டாம் பகுதியில் ஒரு ஸ்கேன் செய்து கொண்டால் போதும்.
கர்ப்பமடைந்த விஷயம் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதுமே மருத்துவரைச் சந்திப்பது நல்லது என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து கருவுக்கு முப்பத்தி நான்காம் வாரம் ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் மருத்துவரை தவறாமல் சந்திக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அம்மாவின் பி.பி., எடை எல்லாம் நார்மலாக உள்ளதா என்று சரி பார்ப்போம். மேலும் கர்ப்பப்பையின் அளவு மற்றும் வளர்ச்சி ஆகியவையும் சரியானபடி உள்ளதா என்று பார்ப்போம். ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் கர்ப்பப்பை இவ்வளவுதான் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல பனிக்குட நீரின் அளவையும் இந்த சமயத்தில் சரிபார்ப்போம்.
கர்ப்பகாலத்தின்போது அம்மாவின் உடல் எடை அதிகரிக்கவே மாட்டேன்கிறது என்று சில வீடுகளில் வருத்தப்பட்டுக் கொள்வார்கள். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு சில பெண்களுக்குப் பெரிதாக வெயிட் போடாது. இதற்குக் காரணம், அதிகப்படியான வாந்தியும் அதன் காரணமாக தாய்க்கு உணவின் மீது ஏற்படும் வெறுப்பும்தான். ஆரம்பக்காலகட்டத்தில்தான் இந்தப் பிரச்னை தலைதூக்குமே ஒழிய, பிறகு எடை ஏறத்தான் செய்யும். கடைசி பத்து வாரங்களில்தான் குழந்தையின் எடை வேகமாகக் கூடிப்போகும். காரணம் இந்த சமயத்தில்தான் குழந்தையின் வளர்ச்சியும் அதிகப்படியாக இருக்கும். பிரசவ காலத்தின்போது மொத்தத்துக்கும் தாயின் எடை 9_12 கிலோ வரை கூடுவதுதான் சரி.
கர்ப்பகாலத்தின் போது அம்மாவின் பி.பி. நார்மலுக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும். இதனால் பயப்பட ஒன்றுமில்லை. அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்கு ரத்தம் பாயும் நிகழ்வால் இப்படி இருக்கும். இது நார்மலான விஷயம்தான்.
Quelle - Kumutham

Labels:
கரு,
கருவிலிருக்கும் குழந்தை,
குறைபாடு
Montag, März 01, 2004
பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?
கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?
அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்:
டாக்டர் கீதா அர்ஜுன்
(கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)
பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய்வென்பது
அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!
பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பாலன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறைகள் எதற்கும் அவசியமில்லை."
டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:
(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)
அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ வித வேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதியாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும் அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. பத்திரிகைகள், திருமணப் பதிவு மையங்களில் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.
இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும்
ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். உடலில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அந்தக் காலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படாததால் 'அந்த நேரத்தில்' மட்டும் 'தனியாக' கவனிக்கப் பட்டார்கள்.
இத்தகைய 'தனி கவனிப்பு' இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. எனக்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இருதயத்திற்கு அதிக பாதிப்பு.
மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண் வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள். இப்ப அப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக்குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமான உடைகள் தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை."
சுப்புலட்சுமி
(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)
வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பது சரிதான். அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப்பதும் அவசியம்.
முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில் மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கிறது.
கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்து இருக்கிறது. இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் 'பி' உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும், உறுதியையும் அளிக்கிறது.
இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.
உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப் 'பொங்கிப் போடும்' வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.
தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது
மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.
- தொகுப்பு: சாந்தி ரங்கராஜன்

பூப்பெய்தல்,
பூப்பெய்தும் பொழுது,
மாதவிலக்கு
Montag, Februar 09, 2004
குழந்தையில்லாக் குறை - ஆண்களே அதிக பட்சக் காரணம்
கல்யாணமாகி நாலு வருஷமாச்சு!.. உனக்குத்தான் ஒரு குழந்தையைப் பெத்துதர துப்பில்லையே... என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்!’’ என்று இன்னமும்கூட பல குடும்பங்களில் பெண்ணைப் பார்த்துதான் முதல் ஈட்டி பாய்ச்சப்படுகிறது!
குழந்தை இல்லை என்றால் உடனே பெண்கள்தான் அதற்குக் காரணம் என்ற போக்கு, படிக்காத பாமரர்கள் மத்தியில்தான் என்றில்லை... படித்தவர்கள் மத்தியில்கூட இந்த எண்ணம் சட்டென்று நீக்க முடியாத அளவில் ஆழப் பதிந்து போயிருக்கிறது.
இருவரில் யார் வேண்டுமானாலும் இந்தக் குறைக்குக் காரணமாக இருக்க முடியும் என்ற விஷயமே இரண்டாவது சிந்தனையாகத்தான் ஏற்படுகிறது. அதுவும்கூட ஓரளவு படித்த, விஷயங்கள் புரிந்த சிலருக்குத்தான். குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாதததற்கு காரணமான பிரச்னைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதிக்குப் பாதி என்று ஏற்கெனவே மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருந்தது.
சமீபகாலங்களில் இந்த சதவிகிதம் ஆண்களுக்கு பெண்களைவிட கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் அதிகமாகி இருப்பதாகத் தனது மருத்துவ அனுபவங்களின் மூலம் தெரிவிக்கிறார் டாக்டர் வி.ஜமுனா.
‘‘உண்மைதான். இந்தப் பிரச்னை இப்போதல்ல.. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே மிக அதிகரித்து வருகிறது. காரணம் மாறி வரும் நமது வாழ்க்கை முறைதான்!’’ என்கிறார் அவர்.
இதெல்லாம் ஆண்கள் பிரச்னை’ என்று வெளியே சில பிரச்னைகள் தெரியாததற்குக் காரணமே சில பெண்கள்தான். குறை தங்கள் கணவரிடம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள் என்பது இவரது கருத்து
‘கணவருக்கு குறையிருந்தால்கூட எங்க குடும்பத்தில் வேற யாருக்கும் இது தெரிய வேண்டாம்’ என்று பெண்களே நினைக்கிறார்கள். கணவர்கள் இந்த விஷயத்தில் கஷ்டப்படக்கூடாதென்று மனைவிகள் இரட்டைக் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிறது’’ என்று சொல்கிறார் இவர்.
ஊசிகளோ, ரத்தமோ இல்லாத இவருடைய சித்தமருத்துவ சிகிச்சையினால் இதுவரை பிறந்த குழந்தைகள் கிட்டத்தட்ட மூவாயிரத்து எண்ணூறு பேர். தமிழகத்தில் மட்டுமல்ல... பாகிஸ்தான், ஈராக், மலேசியா, சிங்கப்பூர், என்று உலகம் முழுக்க இந்தக் குழந்தைகள் இருக்கிறார்களாம். இத்தனை குழந்தைகளின் பெற்றோருக்கும் இவர் கொடுத்த சிகிச்சையில் கண்டறிந்த முடிவுதான் மேலே சொன்னது.
அது சரி... குழந்தையின்மைக்கான ஆண்களின் குறை ஏன் அதிகமாகிக் கொண்டு போகிறது?
முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடைப்பதில்லை என்ற அடிப்படை விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நம் லைஃப் ஸ்டைலில் நாம் புதிதாக கடைப்பிடிக்கும் விஷயங்கள் ஆண்களுக்கு எந்தக் குறையை அதிகமாக்குகின்றன என்று புரிந்து கொள்ள முடியும்’’ .
பொதுவாகவே ஆண்களுக்கு இருக்கக்கூடிய குறை என்பது உயிரணுக்கள் எண்ணிக்கைக் குறைவுதான். ஒரு ஆணுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மொத்தமாக ஐம்பது மில்லியன் இருக்க வேண்டும். இதில் துடிப்போடு இருக்கும் உயிரணுக்கள், இந்த எண்ணிக்கையில் எழுபது சதவிகிதமாவது இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கு குழந்தை தர முடியும்!
சில ஆண்களுக்கு விந்துத் திரவமே உற்பத்தி ஆகாமல் இருக்கக்கூடும். இந்நிலையை ஆஸ்பெர்மியா (Aspermia) என்று அழைக்கிறோம்.
அது எப்படி ஒரு ஆணுக்கு வயதுக்கு வந்த பின்னரும் அதாவது டீன்ஏஜ் நிலை கடந்த பின்னரும் விந்துத் திரவம் உற்பத்தி ஆகாமலே போகும் என்று நீங்கள் சந்தேகம் கேட்கலாம். நியாயமான சந்தேகம்தான்.
குழந்தைப் பருவத்திலேயே புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் தாக்கியவர்களுக்கு விதைகள் செயலற்றுப் போய் விந்துத் திரவத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போகும்.
இன்னும் சிலருக்கு விந்துத் திரவம் உற்பத்தியாகும்... ஆனால் விந்துத் திரவத்தில் உயிரணு ஒன்றுகூட இல்லாமல் இருக்கும். இப்படி உயிரணு அறவே இல்லாமல் பூஜ்யமாக இருந்தால் அந்தக் குறைபாட்டுக்கு அஜுஸ்பெர்மியா என்று பெயர். (Azoospermia)
இன்னும் சிலருக்கோ விந்துத் திரவத்தில் உயிரணுக்கள் இருக்கும். ஆனால் அவை வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும். இந்த எண்ணிக்கையைக் கொண்டு ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்ய முடியாது. இந்நிலைக்கு ‘யெலிகூஸ்பெர்மியா’ (Eligoospermia) என்று பெயர்.
யாருக்காவது விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவுக்கும் குறைவாக இருந்து, அவை நீந்துகின்ற தன்மையையும் குறைவாகக்கொண்டு இருந்தால் அதை ‘ஒலிகோஸ்பெர்மியா’ (Oligospermia) என்று கூறலாம்.
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை ஓரளவே குறைவாக இருந்தால் அது ‘மைல்டு ஒல்கோஸ்பெர்மியா.’ அதேபோல விந்தில் உயிரணுக்களும், செத்துப்போன அணுக்களும் சமநிலையில் இருக்கும் நிலையை ‘மிடில் ஒலிகோஸ்பெர்மியா’ என்போம்.
விந்துத்திரவத்தில் உயிரணுக்கள் மிகக் குறைவாக இருந்து, இறந்துபோன அணுக்களே அதிகம் இருந்தால் அது, ‘சிவியர் ஒலிகோஸ்பெர்மியா’ எனப்படும். ஒரு சிலருக்கு விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை விரல்விட்டே எண்ணுகிற அளவுக்கு இருந்து, பிற அனைத்துமே செத்துப்போன அணுக்களாக இருக்கும். அந்நிலையை ‘வெரி சிவியர் ஒலிகோஸ்பெர்மியா’ என்கிறோம்.
சிலருக்கு விந்தில் தேவையான அளவுக்கு உயிரணுக்கள் இருக்கும். ஆனால் அவை நீந்துகிறத் தன்மை மிகக்குறைவாக இருக்கும். (கரு உருவாக நீந்தும் தன்மை முக்கியம்) இது ‘ஆஸ்தெனோஸ்பெர்மியா’ (Asthenospermia).
விந்துத் திரவத்தில் சீழ் அல்லது ரத்தத்தின் வெள்ளை அணுக்களும் கலந்து இருந்தால் அது ‘பயோஸ்பெர்மியா’ (pyospermia)
உயிரணுக்களின் தலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தால் அது ‘யூடூஸ்பெர்மியா.’
உயிரணுக்கள் படிகங்கள் போலக் காணப்படுகிற நிலை இருந்தால் அது ‘கிரிஸ்டோலஸ்பெர்மியா’ (Crystolospermia).
உயிரணுக்களை வளமாகச் செய்யவேண்டிய மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), வைட்டமின்_ஈ போன்றவை குறைவாக இருந்தால் அது ‘யெனிலோஸ்பெர்மியா’ (Anylospermia).
முறையற்ற செக்ஸ் உறவின் காரணமாக ஆணுக்கு கொனோரியா எனும் பால்வினை நோய் வந்திருந்து உயிரணுக்கள் கருத்தரிக்கச் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அது ‘ஹீமோஸ்பெர்மியா’ (Haemoespermia).
விந்தில் உள்ள உயிரணுக்கள் அனைத்துமே இறந்த அணுக்களாக இருந்தால் அந்நிலை ‘நெக்ரோஸ்பெர்மியா’ (Necrozopermia) எனப்படும்.
மேலே குறிப்பிட்டவற்றில் ஆண்களிடம் அதிகமாக இருக்கும் குறை ‘ஒலிகோஸ்மியா’ என்ற நிலைதான்.
ஒருவேளை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக டெஸ்டுகள் சொன்னாலும்கூட அதன் வீரியம் அதாவது நீந்தும் தன்மையைப் பொறுத்துதான் குழந்தை உருவாகிறது. உயிரணுக்களின் வீரியத்தை வைத்து, அசையாத தன்மையுள்ள உயிரணுக்கள், வால் மட்டும் அசைக்கும் உயிரணுக்கள், வேகமற்ற உயிரணுக்கள், வேகமான உயிரணுக்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இந்த நான்கிலும் முதல் இரண்டு வகை கொண்டவர்களால் தன் மனைவிக்குச் குழந்தை தர முடியாது (சிகிச்சைக்கு பின்பே முடியும்). மூன்றாவது வகை சிறிது கஷ்டம். நான்காவது வகைதான் தொட்டதும் பற்றிக் கொள்ளும்!’’ என்று தெளிவுப்படுத்துகிறார் டாக்டர் ஜமுனா.
சமீபகாலமாக ஆண்களின் குறை அதிகமாவதற்கு என்ன காரணம் என்றும் சொன்னார் அவர்:
‘இப்போதெல்லாம் பான், ஜர்தா போடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சிகரெட்டும் சரி, பான் போடுபவர்களும் சரி... புற்று நோய் போன்ற உடல்நலக் கேட்டுக்கு மட்டுமல்ல... ஆண் குறைகளுக்கும் ஆளாகிறார்கள். இதனால் உயிரணுக்கள் உற்பத்தியே இருபத்தி மூன்று சதவிகிதம் குறைகிறது. உயிரணுவின் வீரியம் (நீந்துகிற தன்மை) பதின்மூன்று சதவிகிதம் குறைகிறது. ஏன்... சில சமயம் உயிரணுக்களின் வடிவம்கூட சிதைந்து போவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
அதேபோல இன்று ஆண்கள் மதுபானம் அருந்தும் எண்ணிக்கையும் மிக அதிகமாகிவிட்டது. மதுபானங்கள் உயிரணுக்கள் உற்பத்தியிலேயே சிக்கல் ஏற்படுத்தி விடுகின்றன தெரியுமா?
ஆண்களின் குறைக்கு மிக முக்கியமான இன்னொரு காரணம் தொலைந்து போய்விட்ட நம் ‘மாரல்!’ அதாவது ‘இது ஒன்றும் பெரிய தப்பில்லை’ என்ற ரீதியில் ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகும் இடங்களில் ஏற்படும் செக்ஸ் ரீதியிலான அட்ஜெஸ்ட்மெண்டுகள்கூட உயிரணுக்களை முக்கியமாக பாதிக்கின்றன.
சமீப காலமாக சில பெண்கள் தாம்பத்தியத்தின் போது தங்கள் பிரத்தியேக பகுதிகளில் வழவழப்பு ஏற்படுத்த வேண்டி கே.ஒய். ஜெல்லி, சர்க்கிலூப், லுபிபேகஸ் போன்ற ஜெல்லிகளை சகஜமாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் குழந்தை பெறாத பெண்கள் இவற்றை உபயோகிக்க வேண்டாம். காரணம், இதுபோன்ற ஜெல்லிகளுக்கு ஆண்களின் உயிரணுக்களை கொன்று விடுகிற ஆற்றல் உண்டு.
பொதுவாகவே தாம்பத்தியத்துக்கு முன்பு மனைவியை போர்பிளே எனப்படும் காதல் சில்மிஷங்கள் மூலம் உணர்வு மயமான சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றாலே போதும்... பிரத்தியேக பகுதிகள் நெகிழ்வுறும். அதனால் ஜெல்லி வேண்டாம்.
ஆண்கள், கட்டுமஸ்தான உடம்புக்காக அதிக எக்ஸர்ஸைஸ்... குறிப்பாக ‘சைக்கிளிங்’ செய்வதும் கூட இந்த விஷயத்தில் தப்புதான் தெரியுமா? (அளவான உடற்பயிற்சி எப்போதும் ஆபத்தில்லை) வாரத்துக்கு நூறு மைல் தொலைவு ஓடுவது, ஐம்பது மைல் தொலைவு சைக்கிள் ஓட்டுவது, மிக அதிக தூரம் டூவிலரில் உட்கார்ந்தபடியே போவது போன்றவைகூட உயிரணு உற்பத்தியில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
அதிக உஷ்ணமான சூழலில் வெகு நேரம் நிற்பது, அலுவலகத்தில் உஷ்ணமான இடத்தில் சேர்போட்டு அமர்வது அல்லது வெப்பம் கொப்பளிக்கும் மிஷின்கள் ஓடுமிடம், பாய்லர் போன்றவற்றின் அருகே மணிக்கணக்கில் நிற்பது, உணவு அல்லது தினசரி பழக்கவழக்கங்களால் உடலை அதிக சூடுக்கு உட்படுத்திக் கொள்வது போன்றவற்றை பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். அதிக வெந்நீரில் குளிப்பதைக்கூட தவிர்க்கலாம்.
கடைசியாக ஒரு மிக முக்கியமான விஷயம்.. தேவையில்லாமல் அடிக்கடி செயற்கை குளிர்பானங்கள், பிரிசர்வேடிவ் கலந்த உணவு வகைகள், பாஸ்ட் பூட்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதைக் தவிருங்கள். நல்ல சத்தான உணவை நேரத்துக்குச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டாலே இந்த ரசாயன உணவு வகைகள் சாப்பிடுவது குறையும். இவைகூட ஆண்களுக்கான மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்!’’ என்று சொல்கிறார் டாக்டர் ஜமுனா.
_ ஷக்தி
--------------------------------------------------------------------------------
பெண்களுக்கு என்னென்ன குறைகள்?
குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகள், சரியாக சினைமுட்டை சினைக்காத தன்மை மற்றும் மாத விலக்கு ஒழுங்கின்மை ஆகிய இரண்டும்தான். பத்து பெண்களில் ஐந்து பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கிறது.
பெண்களுக்கு சுரக்க வேண்டிய புரஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரஜன் ஹார்மோன்கள் சரியாக சுரக்காததால் இந்தக் குறை ஏற்படுகிறது.
அடுத்த முக்கிய குறை, கர்ப்பப்பையிலும் அதன் சுவரை ஒட்டியும் ஏற்படும் கட்டிகளும் சினைப் பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளும்.
பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற ஊளைச் சதைகளும்கூட குழந்தை பிறக்காததுக்கு ஒரு காரணமாகிறது.
ஒரு சிறு எச்சரிக்கை:
கருக்குழாய் (பெலோபியன் டியூப்) அடைப்பு என்பது முன்பெல்லாம் மிகக் குறைவாக இருந்தது. தற்போது நம் தவறான வாழ்க்கை முறைகூட இதற்கு காரணமாகிறது. உதாரணமாக உடலுக்கு அதிக வேலை தராமல் இருக்கும்போது நம் உடலில் ஏற்படும் ஊளைச்சதைகள் கர்ப்பப் பையைச் சுற்றிலும் வளர்ந்து பின் கருக்குழாய் உள்ளேயும் போய் அடைகிறது.
இதற்கு முன்பு கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களுக்கோ அல்லது குழந்தையில்லா குறைக்காக அடிக்கடி டி அண்ட் ஸி செய்து கொள்பவர்களுக்கோ அந்த புண்கள் ஆறக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகளால் கருக்குழாய்களின் ஒரு முனையோ அல்லது இரு முனைகளோ மூடி விடுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
முதல் குழந்தை வேண்டாம் என்று நினைத்து கருச்சிதைவு செய்து கொள்ளும் சில தம்பதியர் மத்தியில் இந்தக் குறை அதிகம் ஏற்படுவதைக் காண்கிறேன். குழந்தை உருவாகாமல் இருக்க அவர்கள் கருத்தடுப்பு முறைகளை உபயோகித்தால் பிற்காலத்தில் குழந்தை இல்லாக் குறையால் தவிக்க வேண்டியதில்லை...
பெண்கள் காலதாமதமாக குழந்தை பெற நினைப்பதும் (35 வயதுக்கு மேல்) குழந்தையில்லா குறைக்கு ஒரு முக்கிய காரணம்!
சிலநேரம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்தக் குறையும் இருக்காது. அப்படியிருந்தும் குழந்தை பிறக்காமல் போவதுண்டு! இதற்கு சரியான சமயத்தில் அல்லது சரியான முறையில் உறவு கொள்ளாதது அல்லது டென்ஷன் என்று ஏதாவது காரணங்கள் இருக்கலாம்!

இரண்டு சிறப்புகள்!
குழந்தைப் பிறப்புக்கான ஆண்கள் குறைகளில் மிக முக்கியமானது 'Nil Count' எனப்படும் ‘அஜுஸ்பெர்மியா, என்ற என்ற நிலை. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தில் செயற்கை கருவூட்டலுக்குத்தான் (அதிலும் குறிப்பாக பிற ஆண்களின் உயிரணுவைக்கொண்டு) முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்தக் குறையை தனது இந்திய மருத்துவத்தின் மூலம் பலருக்கு போக்கி வெற்றிகரமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத் தந்திருக்கிறார் ஜமுனா.
அதேபோல பெண்ணின் மிக முக்கியமான குறை பெலோபியன் குழாய்கள் அடைத்திருப்பது. பெலோபியன் குழாய்களின் வழியாகத்தான் உயிரணு, சினைமுட்டையைச் சேர்ந்து கருமுட்டையாக உருவாகிறது. கருவுருதலுக்கு இதுதான் மிக முக்கியம். ஆனால் சமயத்தில் சில பெண்களுக்கு இந்த இரண்டு பெலோபியன் குழாய்களுமே அடைத்துக் கொண்டிருக்கும். இவர்களும் செயற்கை கருவூட்டல் முறைக்கோ (டெஸ்ட் டியூப்பேபி) அல்லது பெலோபியன் குழாயில் செய்யப்படும் மைக்கோ சர்ஜரிக்கோதான் போக வேண்டும்.
இந்த இரண்டு முறைகளிலுமே வெற்றியின் சதவிகிதம் பத்து சதவிகிதத்துக்கு உள்ளேதான். (வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் கணக்குப்படி). அதிலும் குறைந்தது நாலைந்து முறை முயற்சித்தால் மட்டுமே. ஆனால் இந்தக் குறையுள்ள பெண்களுக்கு பக்க விளைவுகளற்ற சித்த மருத்துவம் மூலமே பெலோபியன் குழாய் அடைப்புகள் நீக்கி இயற்கையான முறையிலேயே கருத்தரிக்க வைக்கிறார் டாக்டர் ஜமுனா.
பல மருந்துகள் மனித வாழ்க்கையோடு, தாம்பத்யத்தோடு, கருவுறுதலோடு, இன்னபிற பிரச்னை களோடு அல்லவா விளையாடி விடுகின்றன. காரணம், ஆண் மலட்டுத்தன்மைக்கு இத்தகைய சில மருந்து மாத்திரைகளும் ஒரு காரணமாகி விடுகின்றன’’ என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் டாக்டர் ஜமுனா.
கீழே சொல்லப்பட்ட சில மருந்துகள் உயிரணு இயங்கும் தன்மையையே பாதிக்கின்றன என்கிறார்.
காளானுக்கு எதிரான ketoconazole மருந்து
குடல் அழற்சிக்கான Sulfasalazine மருந்து
Calcium Channel Blockers உயர்ரத்த அழுத்த மருந்து
Spironolactone இதுவும் உயர்ரத்த அழுத்த மருந்து
கீல்வாத மருந்தான Alloporinol
மற்றொரு கீல்வாத மருந்தான Colchicine
புற்றுநோய், சொரியாசிஸ், ஆர்த்ரிடீஸ்க்கான Methotrexateமருந்து.
குடல் புண் மருந்தான Cimetidine.
கவனிக்கவும்... இந்த மருந்துகள் ஆண்கள் உடலுறவு கொள்ளும் விஷயத்திலும்கூட குறைகளுக்கு வழி வகுத்து விடக்கூடும்.
Chlorpromazine, Haloperidol, Thioridazine, Amitriptyline, Imipramine, Fluoxetine (Prozac), Paroxetine (Paxil), Sertraline (Zoloft), Guanethidine, Prazosin, Phenozibenzamine, Phentolamine, Reserpine, Thazidess
இவை தவிர ஆண்டிபயாடிக் மருந்துகளான Nitrofuran, Erythromycin, Gentamicin போன்றவற்றால்கூட ஆண் உயிரணு உற்பத்தியோ, உயிரணு நீந்தும் தன்மையோ பாதிக்கப்படலாம்.
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். மேலே கண்ட மருந்துகள், அதை உட்கொள்கிற எல்லோருக்குமே பிரச்னை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது. இவை ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணமாக அமைகின்றன என்பதைத்தான் என் அனுபவத்தில் நான் கண்டறிந்திருக்கிறேன்’’ என்கிறார் அவர்.

ஆண்கள் குறை,
குழந்தையில்லாக் குறை
Samstag, Februar 07, 2004
கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?
கருவுற்றிருக்கும் போது பயணங்களை, குறிப்பாக வெளியூர்ப் பயணங்களைப் பெண்கள் தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இதுபோன்ற சமயங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதாவது Threatened Abortion எனும் நிலை உண்டாகலாம். அதுபற்றி இப்போது விளக்கமாகச் சொல்கிறேன்.
கருவுற்றிருக்கும் ஆரம்ப மாதங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அதுபோலதான் ரஞ்சிதாவுக்கும் ஏற்பட்டது. சென்ற செப்டம்பர் 10_ம் தேதிதான் அவளுக்குக் கடைசியாகப் பீரியட்ஸ் வந்தது. அக்டோபர் 21_ம் தேதி என்னிடம் வந்தவளுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்ததில் அவள் தாய்மை அடைந்திருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பமுற்றதற்கான தலைசுற்றல், வாந்தியெடுத்தல் போன்ற அத்தனை அறிகுறிகளும் அவளிடம் தென்பட, அந்தக் குடும்பம் சந்தோஷப்பட்டது. அதுவும் ரஞ்சிதா _ சிவகுமார் தம்பதியருக்கு அது முதல்குழந்தை எனும்போது சந்தோஷத்துக்கு சொல்லவும் வேண்டுமா...
எதிர்பாராதவிதமாக சில நாட்களில் (நவம்பர் 11) அவளுக்கு சிறுசிறு துளிகளாக ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின் ஓரிரு நாட்களில் அது நின்றுபோனது. மீண்டும் அடுத்தமாதம், அதாவது டிசம்பர் 9_ம் தேதியும் அவளுக்கு முன்பு போலவே ரத்தப்போக்கு ஏற்பட.... பதறிப்போனது குடும்பம். பதற்றத்தோடு என்னை அணுகியதும் ரஞ்சிதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தேன். கரு எந்த பாதிப்பும் இல்லாமல் நார்மலாக இருப்பது தெரியவந்தது.
பீரியட்ஸ் சமயத்தில், கருவுற்ற சில பெண்களுக்கு இதுபோல ரத்தப்போக்கு ஏற்படும். இதற்குக் காரணமுண்டு. கரு உண்டாகி, வளரும்போது அது பெரும்பாலும் கருப்பையை இடைவெளியே இல்லாமல் அடைத்தபடி நின்றுவிடும். அப்படி உருவாகும் கரு, கர்ப்பப்பையை முழுவதுமாக அடைத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளி விட்டு நிற்கும்போதுதான் இதுபோல ரத்தப்போக்கு ஏற்படுகிறது.
பாதிப்பு ஏதும் உண்டா?
இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. கருத்தரித்த ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். இந்த ரத்தப்போக்கின்போது பெரும்பாலும் வலி இருப்பதில்லை. என்றாலும் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியதுமே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. காரணம் அது அபார்ஷன்தான் என்பதையோ, சாதாரண ரத்தப்போக்குதான் என்பதையோ அவரால்தான் உறுதிபடச் சொல்லமுடியும். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிட, தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
சில மருத்துவர்கள் இதுபோன்ற ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த ‘எண்ணெய் ஊசி’ என்று பரவலாக அழைக்கப்படும் ஒருவித ஹார்மோன் ஊசி போட்டுவிடுவார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பேஷண்டோ அவருடைய சொந்தக்காரர்களோ கூட எண்ணெய் ஊசி போட்டுவிடச் சொல்லி எங்களிடம் கேட்பார்கள். இந்த ஊசி போடுவதால் எல்லாம் பெரிய பலன் இல்லை. உண்மையில் அபார்ஷன் ஆகப்போகிறதென்றால் அதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. உருவான கருவில் சில சமயம் க்ரோமோசோம் (ஒருவருடைய தோற்றத்தையும் செயல்பாடுகளையும் நிர்ணயிக்கும் பொருள் இது!) குளறுபடிகள் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட கருவை மேற்கொண்டு வளரவிடாமல் இயற்கையே அழித்துவிடும் ஒரு வழிதான் அபார்ஷன். பாதிக்கப்பட்ட அதுபோன்ற கருவை மேலும் பொத்திப் பாதுகாக்காமல் வெளியே வரவிடுவதுதான் நல்லது.
தாம்பத்திய உறவின்போது ரத்தப்போக்கு வந்தால்...
கருவுற்றிருக்கும் சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பயமுறுத்துவதுண்டு. இதுவும் அபார்ஷன்தானோ என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். கருவுற்றவுடன் கர்ப்பப்பையின் வாயில் பகுதி மிகவும் மிருதுவாகிவிடும். அந்தப் பகுதியில் அதிகப்படியான ரத்தம் தேங்கி நிற்கும். உறவு கொள்ளும்போது இந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு அதனால் அந்த மிருதுப் பகுதியிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இதனால்தான் இப்படி ஏற்படுகிறது என்பது புரியாமல் சிலர் அபார்ஷன் ஏற்பட்டுவிட்டதாகப் பதறிப்போவார்கள். இதையெல்லாம் தவிர்க்கத்தான் கருத்தரித்த ஆரம்ப நாட்களில், உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தப்போக்கு ஏற்படுவதால் வேலையே செய்யாமல் பெண்கள் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்பதில்லை. பயணங்களைத் தவிர்த்துவிட்டு வழக்கம்போல வீட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்குப் போகும் பெண்கள் ஓரிரு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைக்குச் செல்லலாம்.
மசக்கை வாந்தி ஏன்?
கருவுற்ற சில மாதங்களுக்குப் பெண்கள் சர்வகாலமும் வாந்தி எடுப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த மசக்கை வாந்தி எதனால் ஏற்படுகிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ‘குழந்தைக்கு நிறைய முடி இருந்தால் வாந்தி அதிகமா வருமாம்!’ என்ற பொதுவான நம்பிக்கைகளிலும் அறிவியல் உண்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது சற்றே வருத்தி எடுக்கும் அறிகுறிதான் என்றாலும் கரு நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் நல்ல அறிகுறி இது. இந்த மசக்கை வாந்தி பிரச்னையை சில மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்திவிடலாம்.
மசக்கைக்கு மாத்திரை சாப்பிடலாமா?
‘மாத்திரையெல்லாம் போட்டால் குழந்தை கலைஞ்சிடும். கை, கால் விளங்காமல் பிறக்கும்’ என்று சிலர் பயமுறுத்துவார்கள். இந்த பயத்துக்குக் காரணம் உண்டு. பல வருடங்களுக்கு முன் மசக்கை வாந்தியைக் கட்டுப்படுத்த Thalidomide எனும் மாத்திரையை வெளிநாட்டவர் கண்டுபிடித்து அதை விற்பனைக்கும் கொடுத்தார்கள்.
மாத்திரையும் கச்சிதமாக செயல்பட்டு வாந்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், மாத்திரை சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள், கை கால் சரியான வளர்ச்சி பெறாமல் பிறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்புறம் அந்த மாத்திரை மார்க்கெட்டில் காணமல் போனது வேறு விஷயம். அந்த சரித்திரத்தை மறக்காதவர்கள்தான் இன்றைக்கும் மசக்கை வாந்திக்கு மாத்திரை போடக்கூடாது என்கின்றனர்.
வாந்தியைக் கட்டுப்படுத்த இன்று கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் முற்றிலும் பாதுகாப்பானவைதான். என்றாலும், எந்தவித மாத்திரையையுமே மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் போட்டுக் கொள்ளவேண்டும்.
ஸ்கேன் ஏன் செய்யவேண்டும்?
‘குழந்தை நல்லாதான் வளருதானு ஒரு ஸ்கேன் செய்து பாத்துட்டா போச்சு!’ என்று, படிப்பறிவில்லாத பேஷண்டுகள்கூட சர்வசாதாரணமாக ஸ்கேனிங் பற்றிப் பேசுமளவுக்கு, இன்று மக்கள் மத்தியில் அத்தனை பிரபலமாகிவிட்டது ஸ்கேனிங் கருவி. அல்ட்ரா சவுண்ட் எனும் ஒலி அலைகளை உடலில் செலுத்தி குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேனிங் உதவுகிறது. மனித காதுக்கு எட்டாத ஒலி அலைகளை உடலில் செலுத்தி, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
கருவுற்ற பெண்ணுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்வது வழக்கம். இன்று யூரின் டெஸ்டோடு ஒரு ஸ்கேன் செய்தும் பார்த்துவிடுகிறோம். கர்ப்பப் பையில்தான் கரு வளர்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் கரு தப்பிதமாக கருக்குழாயில் வளர்ந்துவிடுதுண்டு. இதுபோன்ற பிரச்னைக்குரிய கேஸ்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட கரு அபார்ஷன் கட்டத்தைத் தாண்டி வளர்வதைக் தடுக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது.
சிலருக்கு பீரியட்ஸ் ரெகுலராக வராது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் தேதியை (Due date) துல்லியமாகக் கணிப்பது சிரமமாகிவிடும். இவர்களுக்கு ஸ்கேனிங் செய்து குழந்தையின் அளவு பார்த்து குழந்தை பிறக்கப்போகும் தேதியைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். பிறக்கப்போவது இரட்டைக் குழந்தையாக இருந்தால் அதற்கும் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஸ்கேனிங் உதவுகிறது.
ஒரு பெண் கருவுற்றிருப்பது உறுதியாகி 6_10 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யலாம். பொதுவாகவே ஒருவருக்கு கர்ப்ப காலத்தின்போது வெவ்வேறு கட்டங்களில் மொத்தமாக மூன்று ஸ்கேன்கள் செய்து பார்த்தால் போதும். பிரச்னைக்குரிய கருவுக்கு டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் செய்து பார்க்கும் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யலாம்.
எப்போதெல்லாம் ஸ்கேன் செய்வது?
முதல் ஸ்கேனை 8_10 வாரத்துக்குள் செய்யலாம். அடுத்ததாக 20_22 வாரங்களுக்குள் செய்யலாம். இந்த சமயத்தில் ஸ்கேன் செய்யும்போது மூளை, இதயம், கிட்னி போன்ற குழந்தையின் முக்கிய உடல்பாகங்களின் வளர்ச்சி துல்லியமாகத் தெரியும். மூன்றாவது ஸ்கேனை எட்டாவது மாதத்தில், அதாவது 32_34வது வாரங்களுக்குள் செய்துவிடலாம்.
எத்தனை ஸ்கேன் செய்து பார்த்தும் சில குழந்தைகள் ஒரு காது மடங்கியோ, சில விரல்கள் இல்லாமலோ அவ்வப்போது பிறப்பதுண்டு. ஸ்கேன் செய்து பார்த்தும் இப்படியாகிவிட்டதே என்று சிலர் மருத்துவர்களிடம் வருந்துவது உண்டு. சிலர் கோர்ட் படியேறுவதும் உண்டு. உண்மையில் ஸ்கேனிங் மூலம் ஒரு குழந்தை 100% நார்மலாக வளர்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
சில சமயங்களில் கருவுற்றிருக்கும் பெண் ரொம்ப குண்டாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட பெண்ணின் உடலுக்குள் அல்ட்ரா சவுண்ட் அலைகள் சரியாக நுழையமுடியாமல் போக வாய்ப்புண்டு. அப்படியாகும்போது சில பகுதிகள் துல்லியமாகத் தெரியாமல் போகலாம். மேலும் ஸ்கேன் செய்யும்போது குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்துதான் ரிசல்ட் கிடைக்கும். குழந்தையின் இடதுபுறம் முழுமையாகத் தெரியும் சமயங்களில் வலது புறத்திலுள்ள சில தகவல்கள் பதிவு ஆகாமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஸ்கேன் ரிசல்ட் துல்லியமாக இல்லாமல் போக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆணா, பெண்ணா தெரிஞ்சுக்க முடியுமா?
‘யு.எஸ்ல எல்லாம் அஞ்சாம் மாசமானதுமே குழந்தை ஆணா, பெண்ணானு சொல்லிடறாங்க தெரியுமா? நீங்க ஏன் அப்படிச் சொல்ல மாட்டேங்கறீங்க?’ என்று என்னுடைய சில பேஷண்டுகள் கேட்பதுண்டு. யு.எஸ். போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை சந்தோஷத்துடனேயே பெற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம். நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லையே... ஆண் குழந்தையென்றால் பெற்றெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் சில பெற்றோர், பெண் குழந்தை என்றதும் அதை அழிக்கத் துடிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால்தான் அரசாங்கம் Sex Determination¬ò யை (குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிதல்) தடைசெய்துள்ளது.
உண்மையில் சுமந்து கொண்டிருக்கும் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று, அந்தப் பத்து மாதமும் பொறுத்திருந்து பார்ப்பதில்தான் த்ரில்லே இருக்கிறது. இது அனுபவசாலிகளுக்கு மட்டுமே புரிந்த விஷயம்...
Dr.ஜெயசிறீ
சந்திப்பு: ஜி. கிருஷ்ணகுமாரி

Samstag, Januar 31, 2004
உடல் பற்றிய தவறான எண்ணங்கள்
மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body இமேஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த நம்பிக்கைகள் எந்த காலகட்டத்தில் உருவானவை என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டுபிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகிறது என்பது கண்டறியப்படாத காலகட்டத்தில், அம்மை என்றொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவதும் நம்பினார்கள். இதுபோல் பல நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள். ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகும், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன. இண்டெர்நெட்டில் நூற்றுக்கணக்கான சைட்கள் இதுபற்றி இருக்கின்றன என்றால், உலகம் முழுக்க இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு காலூன்றியுள்ளது பாருங்கள்.
இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது. அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.
சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் து}ண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.
முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது. மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.
சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் து}ரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஒப்ரிக்கல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.
போலி டாக்டர்களும் மருந்து தயாரிப்பவர்களும் இந்த பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பயன்படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விடுகிறது’’ என்று மேலும் அதிகம் பயங்காட்டி காசு சம்பாதிக்கிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண்மை. மேலும் எந்த மருந்து மாத்திரைகள் மூலமும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப்புறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.
இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.
பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.
தொகுப்பு : தளவாய் சுந்தரம்,
நன்றி - குமுதம்

உடல் பற்றி,
உடல் பற்றிய தவறான எண்ணங்கள்
Donnerstag, Dezember 04, 2003
மன அழுத்தத்தில் இருந்து விடுபட - யோகா
வளர்ந்துவரும் உலகின் வேகத்தாலும் பரபரப்பான சூழ்நிலைகளாலும் மனஉளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வு முறைகள் தெரிவிக்கின்றன. மனஉளைச்சலும் மன அழுத்தமும்தான் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. மனஉளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் இடம் தராமல் தப்பிப்பது எப்படி?
‘‘இதற்கு யோகாசனம் சிறந்த வழிமுறை. உலகம் முழுக்க இந்தியர் அல்லாதவர்களும் இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் பல்வேறு உடல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் யோகாவை நாடுகின்றனர். இவ்வகையில் இந்தியா உலகுக்களித்த கொடை யோகா’’ என்கிறார் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி.
மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் உதவியுடன் அதிக பரபரப்பான சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு சில சிறப்பு பயிற்சி முறைகளை, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவலர்கள் உருவாக்கியுள்ளார்கள். சமீபத்தில் இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி முகாம் ஒன்றையும் இவர்கள் நடத்தியுள்ளார்கள். ‘‘இப்பயிற்சி முகாமில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இப்பயிற்சி ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றிக்கான தொடக்கப் புள்ளியாக அமையும் என்று நம்புகிறோம்’’ என்கிறார் மங்கையர்க்கரசி. இந்த யோகாசன முறைகளைப் பற்றியும் அவற்றை எப்படி செய்வது, என்னென்ன பயன் என்பது பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர். எந்த சிறப்பு பயிற்சியும் இல்லாமல் வீட்டிலேயே இதைச் செய்யலாம் என்பதுதான் இதன் சிறப்பு.
சைனஸ் பிரச்னைகாரர்களுக்கு:
கபாலபதி _ என்பது ஆறு கிரியைகளில் ஒன்று. இதனை வஜ்ராசனம், பத்மாசனம் ஆகிய யோகா முறைகளில் இருந்தும்கூட செய்யலாம். படத்தில் உள்ளதுபோல் உட்கார்ந்து கொண்டு, இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அதே சமயம் வயிற்றை ‘பலூன்’ போன்று பெரிதாக்கவும் வேண்டும். இப்படிச் செய்யும்போது வலது கையையோ அல்லது இரண்டு கையையும் கூட வயிற்றுப் பகுதியில் வைத்துக் கொள்ளலாம். அப்போது மனதின் கவனத்தை ஒருமுகப்படுத்தி அடிவயிற்றுத் தசைப் பகுதியில் கொண்டுவர வேண்டும். தினமும் 50 முறைகள் முதல் 100 முறைகள் வரை இதனைச் செய்யலாம். கபாலபதி யோகா முறையில் ஆஸ்துமா, சைனஸ் பிரச்னைகள் குணமடையும். அதிகாலையில் செய்யும்போது மூளையின் செல்கள் புத்துணர்ச்சி அடையவும் வாய்ப்புண்டு.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
இதற்கு நாடி சுத்தி பிராணயாமம் சிறந்த முறை. படத்தில் காட்டியுள்ளதுபோல் அமர வேண்டும். இதற்கு பத்மாசனம் என்று பெயர். வலது கை பெருவிரலால் வலது நாசித் துவாரத்தை மூடிக்கொண்டு இடது நாசித் துவாரம் வழியாக 10 முறை மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு இடது நாசித் துவாரம் வழியாக 20 முறையாக அக்காற்றை வெளியேற்ற வேண்டும். இதனைச் செய்யும்போது மனதின் கவனம் ஆழ்ந்த சுவாசத்தின் எண்ணிக்கையில்தான் இருக்க வேண்டும்.
நாடி சுத்தி பிராணயாம முறை யோகாசனம் செய்யும்போது நாடி நரம்புகள் கிளர்ச்சியடைகின்றன. இதனால் ரத்தம் சுத்திகரிக்க வாய்ப்பு உண்டாகிறது. மேலும் மன அமைதி கிடைக்கும். (நினைவாற்றல் அதிகரிக்கும்) இதனால் ஆயுள் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டாகிறது.
மனதை ஒருமுகப்படுத்த:
முதலில் தரையில் இரண்டு கால்களையும் நன்றாக நீட்டி அமரவும். பிறகு வலது கை கட்டை விரல் மூலம் வலது காலை மடித்து இடது கால் தொடை மீது வைக்கவும். இதேபோல் இடது கை மூலம் இடது காலை மடித்து, வலது கால் தொடை மீது வைக்க வேண்டும். இப்போது இரண்டு குதிகால்களும் அடி வயிற்றுத் தசையைத் தொடுமாறு இருக்க வேண்டும். மனதின் கவனம் இதயத்தின் மையத்தில் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடமாவது இதனைச் செய்ய வேண்டும். இதற்கு பத்மாசனம் என்று பெயர்.
இந்த யோகாசன முறை மூலம் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குச் செல்ல வாய்ப்புண்டாகிறது. மேலும் தொடை தசைப் பகுதிகளில் உள்ள அதிகப்படியான கொழும்பும் குறைக்கப்படும். மனதை நன்றாக ஒருமுகப்படுபடுத்தவும் இந்தப் பயிற்சி உதவும்.
நீரிழிவு மற்றும் பைல்ஸ் பிரச்னைகளுக்கு:
தரையில் இரண்டு கால்களையும் நன்றாக நேரே நீட்டி அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தி மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்புறம் சுவாசத்தை வெளியேற்றிக் கொண்டே, கைகளை கீழே முன்புறமாக இறக்கி, நன்றாக முன் நோக்கி குனிந்து, கைகளால் கால் கட்டை விரல்களைப் பிடிக்க வேண்டும். பிறகு முழங்கைகளை தாழ்த்தி தரையை தொடுமாறு செய்யவும். இதனைச் செய்யும்போது அடிவயிறு மற்றும் சுவாச உறுப்புகளின் மேல் மனதின் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதற்கு பஸ்ச்சி மோத்தாசனம் என்று பெயர்.
இந்த ஆசன முறையில் நன்றாக குனிவதால், குதிகாலில் இருந்து உச்சந்தலை வரையில் உள்ள, 14 நரம்புகளும் நன்றாக இழுக்கப்பட்டு பலப்படுத்தப் படுகின்றன. மேலும் வயிற்று வலி, தலை வலி, நீரிழிவு மற்றும் பைல்ஸ் பிரச்னைகளுக்கும் இம்முறை நல்ல தீர்வு. தொந்தி வயிற்றைக் குறைக்கவும் இந்த யோகாசனத்தைச் செய்யலாம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு:
நன்றாக கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு பிறகு இரண்டு கால்களையும் 45 டிகிரி அளவு உயர்த்தவும். அப்புறம் இதுபோல் உடலையும் 45 டிகிரி உயர்த்தி கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இருபதிலிருந்து முப்பது விநாடிகள் வரை தொடர்ந்து இந்த நிலையில் இருக்கலாம். உடலையும் கால்களையும் உயர்த்தும்போது சுவாசத்தை உள்ளே இழுக்கவும். ஆசன நிலைக்கு வந்தவுடன் சுவாசத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். இதனைச் செய்யும்போது அடிவயிற்றில் மனதின் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதற்கு நவாசனம் என்று பெயர்.
இந்தமுறை உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கவும் தொப்பையைக் குறைக்கவும் உதவும். மேலும் வயிறு தொடர்பான கோளாறுகளையும் சரி செய்கிறது.
முதுகுத் தண்டை பலப்படுத்த:
அர்த்த மத்ஸேந்திராசனம் என்ற யோகா முறை முதுகுத்தண்டை பலப்படுத்துவதுடன் இடுப்புப் பகுதியிலுள்ள அதிக கொழுப்பைக் குறைக்கவும் உடல் மற்றும் முகத்தில் ஏற்படும் சுறுக்கங்களைக் குறைக்கவும் நல்லது. இதற்கு முதலில் இரு கால்களையும் நன்றாக நீட்டி தரையில் அமர வேண்டும். பிறகு வலது காலை மடித்து இடது முழங்காலுக்கு அருகில் வைக்கவும். அப்புறம் இடது கையை உயர்த்தி, சுவாசத்தை வெளியேற்றிவிட்டு, பிறகு இடது கையால் படத்திலுள்ளதுபோல் வலது முழங்காலைச் சுற்றி அதன் கட்டை விரலைப் பிடிக்க வேண்டும். பிறகு முகத்தை வலது பக்கம் திருப்பி வலது கையை தரையில் ஊன்றி முதுகை நன்றாகத் திருப்ப வேண்டும். இதுபோல் இடது காலுக்கும் செய்ய வேண்டும். இந்த முயற்சியின் போது மனதின் கவனம் கிட்னி மற்றும் அட்ரீனல் சுரப்பியின் மீது இருக்க வேண்டும்.
இதயத்தை பலப்படுத்த:
விபரீதகரணி என்ற யோகாசன முறை இதயத்தைப் பலப்படுத்துவதோடு, இளமையை பாதுகாக்கவும் ஆண்மையை அதிகரிக்கவும் தூக்கத்தில் விந்து நீங்குவதை தடுக்கவும் செய்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை பயக்கும் ஓர் அரிய ஆசனம் இது. தொழுநோய், தைராய்டு, மலேரியா போன்ற பிரச்னைகளுக்கும் இந்த ஆசன முறை நல்லது.
முதலில் முதுகு தரையில் தொட்டு இருக்கும்படி நன்றாக காலை நீட்டி படுக்க வேண்டும். பிறகு சுவாசத்தை உள்ளே இழுத்தவாறே கால்களை 90 டிகிரிக்கு உயர்த்த வேண்டும். அப்போது கைகளை உயர்த்தி இடுப்புப் பகுதியில் வைத்து உடலைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளவும். ஒரு நிமிடம் வரை தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்கலாம். பின்பு மெதுவாக கால்களை மடித்து, இடுப்பை தரையில் வைத்து ஓய்வு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதைச் செய்யும் போது சுவாசம் இயல்பானதாக இருக்க வேண்டும். தைராய்டு மற்றும் பாரா தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை நினைத்துக் கொள்ளவும்.
இளம்பிள்ளைவாதம் மற்றும் மூட்டு வலிக்கு:
முதலில் முதுகை தரையில் வைத்துப் படுத்துக் கொண்டு, பிறகு சுவாசத்தை உள்ளிருத்தவாறே இரண்டு கால்களையும் 90 டிகிரிக்கு உயர்த்தவும். பிறகு சுவாசத்தை வெளியேற்றிவிட்டு இரண்டு கால்களையும் தலைக்குப் பின்புறம் கொண்டு வந்து கட்டை விரல்களால் தரையைத் தொட வேண்டும். தைராய்டு சுரப்பியை நினைத்துக் கொள்ளவும். ஆனால் இதய நோய் உள்ளவர்கள் தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகே இதனை செய்ய வேண்டும்.
இளம்பிள்ளை வாதம், மூட்டுவலி, காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்னைகள், சைனஸ் ஆகியவற்றுக்கு இம்முறை நல்ல பலன் தருகிறது. தைராய்டு மற்றும் பாரா தைராய்டு சுரப்பிகளுக்கு அதிகப்படியான இரத்த ஓட்டம் செல்வதால் இளமையும் பாதுகாக்கப்படும்.
நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு:
முதலில் கால்களை நேராக நீட்டி அமரவும். பிறகு கைகளை இடுப்புக்குப் பின்புறம் வைத்து கைகள் மீது அமரவேண்டும். அப்புறம் முழங்கைகளை தரையின் மீது வைத்து நெஞ்சு பாகத்தை உயர்த்தி, உச்சந்தலையால் தரையைத் தொட வேண்டும். இதனைச் செய்யும்போது, 15 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைக்க வேண்டும். மனதில் பிட்யூட்ரி சுரப்பியை நினைத்துக் கொள்ளவும். இந்தப் பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகமாக ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் சைனஸ§ம் நீங்கும். நெஞ்சுபாகம் நன்றாக விரிவடையும்.
ஜீரண உறுப்புகள் பலமடைய:
முழங்கால்களை நன்றாக விரித்து, கால் கட்டை விரல்களை தரையில் ஊன்றி உட்கார வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கவும். பிறகு அடிவயிற்றில் முழங்கால்களை வைத்து உள்ளங்கைகளை தரையில் வைக்க வேண்டும். சுவாசத்தை வெளியே விடவும். அடுத்து கைகளின் சப்போர்ட்டில் முன்பக்கமாக குனிந்து கால்களை ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நீட்ட வேண்டும். இப்போது சுவாசத்தை உள்ளே இழுக்கவும். மனதின் கவனத்தை சிறுகுடல் மற்றும் பெருங்குடலின்மீது வைக்க வேண்டும். இதற்கு மயராசனம் என்று பெயர். இந்த பயிற்சியில் கல்லீரல் பலப்படுத்தப்படுகிறது. நீரிழிவு, மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் அறவே நீங்கும். ஜீரண உறுப்புகள் கல்லை உண்டாலும் செரிக்கின்ற தன்மையை அடையும்.
பசியின்மையைப் போக்க:
புஜங்காசனம் முறை பசியைத் தூண்டுவதுடன் முதுகுத் தண்டின் மேல்பாகம் மற்றும் கழுத்துப் பகுதிகளை பலப்படுத்த நல்ல முறை. இதில் முதலில் வயிறும் நெஞ்சு பாகமும் தரையில் படுமாறு படுக்க வேண்டும். பிறகு தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் மேல் வயிறு என்று முறையே ஒன்றன் பின் ஒன்றாக தலையை உயர்த்த வேண்டும். நெஞ்சை உயர்த்தும்போது சுவாசத்தை உள்ளே இழுத்து, பிறகு கீழே இறக்கும்போது சுவாசத்தை வெளியேற்றவும்.
இந்தப் பயிற்சியைச் செய்யும்போது முதுகுத் தண்டின் மேல்பாகத்தின் மீது கவனத்தை குவிக்கவும். இப்படி செய்வதன் மூலம் அடிவயிறு நன்றாக இழுக்கப்படுவதால் தொந்தி கரையவும் வாய்ப்பு அதிகமாகிறது.
இடுப்பு வலி குறைய:
சலபாசனம் என்ற யோகாசன முறை இதற்கு நல்ல தீர்வு. முதலில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். 20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும். சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும்.
_ தளவாய் சுந்தரம்

மன அழுத்தம்,
மனஉளைச்சல்,
யோகாசனம்
Abonnieren
Posts (Atom)